வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!( பார்ட்-5)
வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!( பார்ட்-5)
33) முதலில் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இது போன்ற சட்ட அதிகார அமைப்புகளில் நடக்கும் வழக்கின் தீர்ப்புகளில் தலையிடுவதற்கு உரிமை இருக்கிறதா அந்த தீர்ப்பில் மாற்றங்களை செய்யலாமா ரத்து செய்யலாமா போன்ற கேள்விகளை எழுப்பிவிட்டு அதற்கு அவர் பல்வேறு தீர்ப்புகளை காரணம் காட்டி இது போன்ற நேர்வுகளில் தலையிடலாம் என்று
அந்தத் தீர்ப்புககளை நெறி படுத்தலாம் என்றும் முதலில் சொல்கிறார்
34)அதன் செப்பு பட்டயங்களின் படியும் இனாம் தூய பதிவேட்டின் படியும் சொத்தின் டைட்டில் பள்ளிவாசலுக்கு தான் இருக்கிறது மேலும் 1952 ல் திருநெல்வேலி சப் கோர்ட் தீர்ப்பின்படியும் நிலத்திற்கான முழு உரிமை பள்ளிவாசலுக்கு தான் அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை வருவாய்த்துறை மேல்முறையீடு செய்யாத காரணத்தினால் அந்த செப்பேடு குறித்து எந்த சந்தேகமும் எழுப்பாத காரணத்தினால் அது இறுதி தீர்ப்பு அடைந்து விட்டது அதனால் தாவா சொத்தில் மூல உரிமை பள்ளிவாசலுக்கு தான் என்று உறுதிப்படுத்தினார்.
35) இந்த உயர்நீதிமன்றத்தில் வருவாய்த்துறை மீண்டும் ஒரு நிரூபிக்கப்பட முடியாத அரசாணையை G.O.No.2839 – 31.10.1951 சொல்லி இதன்படி மேற்படி நிலங்கள் புறம்போக்கு ஆக்கப்பட்டதாக வாதிட்டது. உண்மையில் இந்த அரசாணை எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் 1948 சம்பந்தப்பட்டது ஆனால் கிராமத்தில் நடந்திருப்பது இனாம் எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் 26/1963 திருநெல்வேலி சப் கோர்ட்டில் 1952 ஆம் ஆண்டு வழக்கு வருவதற்கு முன்பே இந்த அரசாணை மூலம் புறம்போக்கு ஆக்கியதாக வாதிட்டது ஆனால் அதனை நிரூபிக்க முடியவில்லை நீதியரசரும் பலமுறை அந்த அரசாணை சமர்ப்பிக்க சொல்லி கேட்டு இருக்கிறார்
36) மேலும் 1952-ஆம் ஆண்டு திருநெல்வேலி சப் கோர்ட்டில், பள்ளிவாசலுக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் உத்தரவு (O.S. No.49/1952) எந்த மேல் முறையீடும் செய்யப்படாமல் இறுதி நிலை (finality) அடைந்த நிலையில், அதற்கு பல ஆண்டுகள் கழித்து 1963-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த பழைய நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ததாக அல்லது கட்டுப்படாததாக அரசு கூற முடியுமா என்ற கேள்வியை நீதியரசர் தீவிரமாக ஆய்வு செய்கிறார்.
37)நீதியரசரின் பதில் மிகத் தெளிவானது: “முடியாது”. ஏனெனில், ஒரு நீதிமன்றத் தீர்ப்பு ஒருமுறை இறுதி நிலை அடைந்துவிட்டால், அதை நிர்வாக ஆணையாலும் (Government Order), பின்னர் கொண்டு வரப்பட்ட சட்டத்தாலும் தானாகவே அழிக்க முடியாது. அப்படி அனுமதித்தால், எந்த நீதிமன்றத் தீர்ப்புக்கும் பாதுகாப்பு இருக்காது; அரசு விரும்பினால், புதிய சட்டம் கொண்டு வந்து, ஏற்கனவே முடிந்த வழக்குகளைக் கூட வெறுமனே காகிதமாக மாற்றிவிட முடியும். இது சட்டத்தின் அடிப்படை தத்துவமான “rule of law”, “separation of powers” மற்றும் “certainty of judicial decisions” ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானது. என்று இந்த விஷயத்தை தான் அதிக அளவில் அதிக முன் தீர்ப்புகளோடு இதனை விவரிக்கிறார்
38)அதனால் தான், பொதுவாக எந்த புதிய சட்டமும் எதிர்காலத்திற்கு மட்டுமே (prospective operation) செயல்படும்; அது கடந்த காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை பின்னோக்கி (retrospective) ரத்து செய்ய முடியாது, குறிப்பாக அந்த தீர்ப்பு ஏற்கனவே இறுதி நிலை அடைந்திருந்தால். எனவே, 1952-ஆம் ஆண்டு பள்ளிவாசலுக்கு கிடைத்த உரிமையை, 1963-ஆம் ஆண்டு வந்த சட்டத்தை காட்டி அரசு மறுக்க முயல்வது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது; அது நீதித்துறையின் அதிகாரத்தை நிர்வாகம் கைப்பற்ற முயல்வதற்கு சமம் என்பதால், நீதியரசர் அந்த வாதத்தை முழுமையாக நிராகரிக்கிறார்.
39) இது Final civil court decree-ஐ, பின்னர் வந்த சட்டம் அல்லது அரசாணை கொண்டு ரத்து செய்ய முடியாது. என்ற உண்மை தீர்ப்பில் தெளிவுபடுத்துகிறார். இந்தத் தீர்ப்பையே இந்து சமய அறநிலையத் துறைக்கும் வக்போடுக்கும் சாமானியர்களின் நிலங்களின் மீது நோட்டீஸ் கொடுக்கும் பொழுது நாம் மேற்கோள் காட்டுகிற வகையில் இந்த தீர்ப்பினை பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை முன் உதாரணம் காட்டி விவரித்து இருக்கின்றார்.
40) நீதி அரசருக்கு தற்பொழுது ஒரே குழப்பம் தான் தாவா சொத்தின் மொத்த பரப்பளவு உண்மையில் எவ்வளவு 1200 ஏக்கருக்கு மேல் பல சர்வே எண்களை சேர்த்து சொல்லி இருக்கிறீர்கள் . ஆனால் ராயர் கொடுத்த செப்பு பட்டயத்தில் சர்வே எண்கள் இல்லை தற்பொழுது நீங்கள் சொல்லும் 1200 ஏக்கர் அளவுகள் இல்லை எப்படி இந்த பரப்பளவு வந்தது அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று வழக்கு இந்த இடத்தில் வக்போர்டிற்கு எதிராக தொங்க தொடங்கிவிட்டது.
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு+91 86100 63410

Comments
Post a Comment