வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!(Part -4)
வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!(Part -4)
27)அதன் பிறகு 26/1963 இனாம் எஸ்டேட் ஓழிப்பு சட்டம் தமிழ்நாடு அரசு தமிழக முழுவதும் அமல்படுத்தப்பட்டவுடன் அந்த சட்டத்தை தாவா சொத்தின் மீது திருநெல்வேலி வருவாய் துறையினர் நீதிமன்ற வழக்கில் ஏற்கனவே தோற்றுப் போய் இருக்கிறோம் என்று தெரிந்தும் இந்த சட்டத்தை பள்ளிவாசல் சொத்தில் திணித்திருக்கிறார்கள். வருவாய்த்துறைக்கு உரிமையே இல்லாமல் வேண்டுமென்று பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சட்ட அதிகாரத்தை தூஷ்பிரயோகம் செய்து இருக்கிறார்கள்
28) இந்த சட்ட அடிப்படையில் தான் நான் ஏற்கனவே முன் சொன்னது போல் அனைத்து நிலங்களையும் புறம்போக்கு ஆக்கிவிட்டு இருக்கிறார்கள் . அதனை எதிர்த்து வன்போடு நிர்வாகம் மாநில நில நிர்வாக ஆணையரிடமும் செல்கிறது அங்கும் பள்ளிவாசலுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கவில்லை
29)அதன் பிறகு வக்ப் போர்டு (Wakf Tribunal
O.S. No.299/2011) ஏட்டிக்கு போட்டியாக ஒரு விசாரணையை தொடங்கியது தனது சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்கியது அதில் உரிமை (Title)
கானுமியா பள்ளிவாசல் Wakf சொத்து உரிமையாளர் என்று அறிவிப்பு (Declaration). செய்தது. செப்பேடு (Copper Plate Grant)
மதுரை சமஸ்தான நாயக்கர் அரசர் வழங்கிய Sarvamanyam for Masjid Dharmam செப்பேடு செல்லுபடியாகும் “Once a Wakf, always a Wakf” — ஒருமுறை வக்ஃப் என்றால் எப்போதும் வக்ஃப். என்று தீர்ப்பளித்தது மட்டுமல்லாமல்
அரசு “Government Poramboke / Ryotwari” என கூறியது ஏற்கப்படவில்லை.
26 /1963 இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலம் மூலம் பழைய சிவில் தீர்ப்புகளை (1952) அழிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது
30) அதாவது இரண்டு சட்ட அதிகார அமைப்புகள் வருவாய்த்துறை மற்றும் வக் போடு இரண்டும் ஒன்றோடு ஒன்று அவர் அவர்களின் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுக்கு ஒரு தீர்ப்பு எழுதி வைத்துக் கொண்டார்கள் . வருவாய்த்துறை
Settlement Proceedings (1966–1970) நிலை எடுத்தால் waqf போர்டு 1959 – Wakf Act Gazette Notification section 5 Wakf Proforma செயல் முறையை நடைப்படுத்தியது. அதாவது இந்த இரு சட்டா அதிகாரத்தின் மோதல் போக்கு 1960 களில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது ஆக இது இரு
அமைப்புகளுக்கிடையேயான மோதல்( Institutional Conflict) அதிகார வரம்பு மோதல்,ஒன்றுக்கொன்று மேல் படியும் (Over laping)அதிகார வரம்பு என்றெல்லாம் சொல்லலாம்.
31) இதற்கு இடையில் O.S. No.65 of 1961 என்ற வழக்கை திருநெல்வேலி சப் கோர்ட்இல்
ஒரு தனிநபர் (Plaintiff)நான் தான் அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி(Wakf நிர்வாகி)
என் முன்னோர்கள் வழியாக வந்த ஒரே வழிவாரிசு”என்று கூறி புதிய வழக்கை தொடங்கினார் அவருடைய வழக்கு அவருக்கு எதிராக தள்ளுபடி ஆகிவிட்டது இது மட்டும் இல்லாமல் பட்டா கேட்டும் மாநில நில நிர்வாக விசாரிக்க வேண்டும் எனவும் பல்வேறு நீதிப்பேராணை வழக்குகள்
உயர் நீதிமன்றங்களில் நடந்திருக்கிறது அதில் எல்லாம் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்ட தகவல்களுக்கு ஏற்றவாறு நீதி அரசர்கள் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள்
32)இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வருவாய்த் துறையினர் வக்ப் டிரிப்புனல்(O.S. No.299/2011) கொடுத்த தீர்ப்பினை எதிர்த்து வழக்கு போடுகிறார்கள் அந்த வழக்கு எண் C.R.P. (MD) No.2161 of 2018,C.M.P. (MD) No.13317 of 2025 இதனை விசாரித்த நீதி அரசர் எம் தண்டபாணி அவர்கள் தெளிவாக ஒரு தீர்ப்பை 75 பக்கங்களில் நீண்ட நெடிய தீர்ப்பை வழங்கியிருக்கிறார் அதில் பள்ளிவாசல் சொத்து யாருக்கு டைட்டில் இருக்கிறது அது எவ்வளவு பரப்பு வருவாய்த்துறை செய்த நடவடிக்கை சரியா என்ற விவரங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார்.
இப்படிக்கு
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள்
நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410

Comments
Post a Comment