Posts

Showing posts from December 13, 2019

வளர்தொழில்- நடுத்தர அடிதட்டு தமிழ் மக்களின் தொழில்முனைவுக்கான வழிகாட்டி..!!

Image
                    தமிழர்களின் தொழில் முனைவு தன்மை சுய வளர்ச்சியை தன்னம்பிக்கையை அதிகபடுத்தவும் அதற்கான மேடையாகவும் பாலமாகவும் பல ஆண்டுகாலமாக தொடர்ந்து இயங்குகின்ற பத்திரிக்கை வளர்தொழில் ஆகும். தமிழ்மட்டும் தெரிந்த இரண்டாம் நகர கிராமங்களின் இளைய தலைமுறையினருக்கு சுய வளர்ச்சி தொழில் வளர்ச்சி பற்றி தொழில்முனைவு தன்மை கற்றுகொடுக்கின்ற வரபிரசாத பத்திரிக்கை வளர்தொழில்!! பல பத்திரிக்கை துறை ஆற்றலாளர்கள் பலருக்கு அடிதளமாக வளர்தொழில் இருந்து இருக்கிறது. என் வாழ்க்கையில் வளர்தொழில் மிக முக்கியமான அங்கம்! தொழில் ஆரம்பித்த புதிதில் தொழில்முனைவு தன்மையை வளர்த்து எடுக்க எனக்கு கையேடாகவே இருந்தது.மேலும் என்னை பற்றி என் ரியல் எஸ்டேட் தொழில் பற்றி 2009 ஆண்டு இரண்டு பக்க அளவில் கட்டுரை எனக்கு பெரிய பூரிப்பை உணரச்சிபூரவமான பலத்தை கொடுத்தது. என்னை போல பல சிறு தொழில் செய்கின்றவர்களுக்கு இதுபோல pride feeling நம்ம வளர்தொழில் கொடுத்து இருக்கிறது என்பதை நான் சந்திக்கும் நபர்கள் எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொண்டதை நான் கேட்டு இருக்கிறேன். முதன் முதலில் 2008 களில் ஐந்து நட்சத்திர விடுதியில