Posts

Showing posts from December 5, 2019

பதிவு செய்யும் நோக்கத்துடன் எழுதி வைக்கப்பட்ட ஆவணங்களை எவ்வளவு காலத்திற்குள் சார் பதிவகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?

Image
                          ஒரு கிரையப்பத்திரம்  ஒரு விடுதலைபத்திரம் ஒரு செட்டில்மென்ட் பத்திரம் ஒரு பாகப்பிரிவினை பத்திரம் ஒரு குடும்ப ஏற்பாடு ஏதோ ஒரு சொத்து கைமாறு வதற்காக பத்திரம் பேப்பர் வாங்கபட்டு பத்திரத்துக்கான ஷரத்துக்கள்  எல்லாம் எழுதி டைப் அடித்து பத்திரம் உருவாக்கி வைத்து விடுவார்கள். வாங்குபவருக்கோ விற்பவருக்கோ பத்திர ஆபிஸ்  முன்பு கருத்து வேறுபாடு வந்துவிடும்.பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வந்துவிடும். அல்லது பத்திர ஆபிஸுக்கு வரும் வழியில் துக்க செய்தி வந்துவிடும் இப்படி பல காரணங்களால் பத்திர பதிவு தள்ளி போகும். அப்பொழுது தயார் செய்து வைத்த பத்திரங்களில் தேதி எல்லாம் டைப் அடித்தாயிற்றே என்று கவலைபட தேவையில்லை .மேற்படி ஆவணங்களை பதிவதற்கு 4 மாதம் அவகாசம் இருக்கிறது . அதேபோல நீதிமன்ற தீர்ப்பு வந்த தீர்ப்பானது பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்து பதிய வேண்டும் தீர்ப்பு வந்துவிடும் ஆனால் ஜட்ஜ்மெண்ட் காப்பி வருவதற்கு கால தாமதம் ஆகிவிடும் .அதே போல் நீதிமன்றம் மூலம் கிடைக்கும் விற்பனை சான்று (Sale Certificate) யும் தாமதமாக ஆகிவிடும்.இவையெல்லாம் உங்களுக்கு கிடைத

பத்திரங்களை தாக்கல் செய்வது தெரிய வேண்டிய செய்திகள்!!

Image
ஒரு கிரயபத்திரத்தை எழுதி வாங்குபவர் பெரும்பாலும் தன்னுடைய சொந்த செலவில் கிரைய பாத்திரங்களை உருவாக்கி அதனை சார் பதிவகத்தில் பதிவு செய்ய தாக்கல் செய்வார்  தாக்கல் செய்பவரே பதிவு கட்டணம் முதல் கொண்டு அனைத்து செலவுகளையும் செய்வார்கள். அதே போல ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இடங்கள் வாங்கும்போது ரியல் எஸ்டேட் நிறுவனம் அனைத்து பத்திரங்களையும் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு பத்திரம் பதிவு செய்ய சார்பதிவகத்தில் தாக்கல் செய்வார்கள்.பதிவு கட்டணம் உட்பட அனைத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டி விடும் (நிறுவனம் வாடுக்கையாளரிடம் வாங்கி விடுவார்கள் அது வேறு) மேற்கண்ட இரண்டு விஷயத்திலும் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒரு ஆவணத்தை எழுதிக் கொடுக்கிற அல்லது எழுதி வாங்குகிறார் எவராலும் பத்திர அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய சொல்லி தாக்கல் செய்யலாம். நேரடியாக தாக்கல் செய்யாமல் அதற்கும் அதிகாரம் (பவர்) கொடுக்கலாம்பெரும்பாலும் நிறைய மனைபிரிவுகளை விற்பனை செய்கின்ற  ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சார்பதிவகத்தில் பதிவு செய்ய செல்லமுடியாத காரணத்த