Posts

Showing posts from November 1, 2021

நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது சென்னை மற்றும் கோவை அலுவலகத்தில்

Image
  சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது சென்னை மற்றும் கோவை அலுவலகத்தில் தொடர்புக்கு சென்னை Praptham realtors Pvt Ltd No. 33, Marudhu Pandiyar Salai, Kamarajapuram, Velachery, Chennai - 600042 8110986111, கோவை Address - 255, Chinnu complex, ganapathy, Coimbatore- 641006 Ph- 9789681033 இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் #realestate #book #amazon #eBook #paranjothipandian #paperbackbook #amazonkindle #realestatebook

நத்தமும் புன்செய்யும் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலம் வாங்கும் பொழுது கவனம்!...

Image

நிலத்தின் நலமறிய ஆவல் -3வது வழிகாட்டுதல் முகாம் விழுப்புரத்தில் செழிப்புற நடைபெற்றது!

Image
  நிலத்தின்  நலமறிய ஆவல் -3வது வழிகாட்டுதல் முகாம் விழுப்புரத்தில் செழிப்புற நடைபெற்றது! கடந்த 30 .10 .2021 அன்று விழுப்புரத்தில் நகரத்தில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் மூன்றாவது நேரடி வழிகாட்டுதல் முகாம் ஆனந்தா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . காலை 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது .வந்து இருந்த நண்பர்கள் தூத்துகுடி,மதுரை,திருச்சி,திருப்பூர்,பெரம்பலூர்,குளித்தலை,சென்னை,கடலூர்,கள்ளகுறிச்சி பகுதிகளில் இருந்து வந்து இருந்தனர்,விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் நிறைய நபர்கள் வந்து இருந்தனர். நீதிதுறை பத்திரிக்கை துறை,காவல் துறையில் இருந்தும் நிறைய நண்பர்கள் வந்து இருந்தார்கள். காலையில் வருகின்றவர்களுக்கு பதிவு செய்தல் முடிந்த பிறகு அவர்களின் பிரச்சினைகள் அரசினுடைய கோரிக்கையா?அல்வது பிறத்தியாருடன் தாவாவா என்று வகை பிரித்து அதற்கேற்ற விண்ணப்ப படிவங்களை கொடுத்து தன்னார்வலர்களான சோளிங்கர் மோகன்,ஓமலூர் தமிழ்,ஊத்தங்கரை அருள்,கிருஷ்ணகிரி முத்து,திருப்பூர் இரவி ஆகிய தன்னாரவலர்கள் இரண்டு மணி நேரம் வரை வந்த நபர்களின் பிரச்சனையை தொகுத்து ஆவணபடுத்தினர். திண