Posts

Showing posts from October 18, 2020

திருநாகேசுவரத்தில் சிரமண நாக நாதர்

Image
    திருநாகேசுவரத்தில் சிரமண நாக நாதர் கள்!! ஒரு காலத்தில் சுத்தமான பருத்தி கைத்தறி வேட்டிக்கு புகழ் பெற்ற திருநாகேசுவரம் ஊர் கும்பகோணத்தின் அருகில் இருக்கின்ற அழகான பேருராட்சி ஆகும். இன்றும் ஐயங்கார்கள் திருநாகேசுவரம் எட்டு முழ வேஷ்டி விரும்பி அணிகிறார்கள் என்பதை கேள்விபட்டு இருக்கிறேன் அந்த ஊரில் இருக்கின்ற சிறப்பான கோயில் தான் நாகநாதசுவாமி திருக்கோவில் ரியல்எஸ்டேட் களப்பணிக்காக சமீபத்தில் திருநாகேசுவரம் செல்லும் பொழுது அந்த கோவிலையும் பார்த்தேன். கும்பகோணம் டூ காரைகால் செல்லும் சாலையில் பத்து ஏக்கருக்கு மேல் பரப்பளவு இருக்கிற பெரிய சமய நிறுவனம் தான் நாகநாதசுவாமி திருக்கோயில். சமூக இடைவெளி சோப்பு நீரால் கைகழுவுதல் காய்ச்சல் சோதித்தல் என்று சோதித்த பிறகு தான் உள் அனுப்பினார்கள். இராகு தோஷம் நிவர்த்தி அடைகின்ற கோயில் என்று சந்தைபடுத்தபடுகிறது. அதனால் நிறைய பேர் வருகிறார்கள். பெரிய குளம், கோட்டை போல் மதில் சுவர்கள் ,சிறப்பான கோபுரம் என்று நல்ல அமைப்பான கோயில்.நாகநாதர் பெரிய சிவலிங்கம் வடிவில் இருந்தார். கார்த்திகை மாதம் நிலவின் ஒளி அம்மன் சந்நிதியில் விழுமாறு பிறையணி நுதலாள் இருக்கிறார்