Posts

Showing posts from October 13, 2019

ட்ரஸ்ட் சொத்துக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்!!

Image
1) அறக்கட்டளை,நம்பகம்,டிரஸ்ட்(Trust) என்று சொல்லபடுகின்ற அமைப்புகள் எல்லாம் கல்வி ,மருத்துவம், சுகாதாரம், ஆரோக்கயம், ஆன்மீகம், உணவு, உடை, வீடு போன்றவற்றிற்கு நலதிட்ட உதவிகளை பொதுமக்கள் பெறுவதற்காகவும் அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ பயனடைவதற்க்காகவும் மக்களில் தரம் சிந்தனை உள்ளவர்களால் ஆரம்பிக்கபடுகிறது. 2) அவ்வாறு அவர்கள் ஆரம்பிக்கும்போது டிரஸ்டின் நோக்கம்,எதற்காக என்னென்ன வேலைகள் செய்ய போகின்றன டிரஸட்,எவ்வளவு தொகை ஆரம்பிக்கும் பொழுது இருப்பு வைக்க படுகிறது என்ற விவரங்களை எல்லாம் ஒரு ஆவணமாக எழுதி வைத்து இருப்பர் அதற்கு ட்ரஸ்ட் பத்திரம்(Trust Deed) என்று சொல்வார்கள். 3) மேற்படி டிரஸ்ட் தன் கையிருப்பு தொகையிலும் அல்லது வேறு பலரின் நன்கொடையை பெற்றும் பல அசையா சொத்துக்களை வாங்கி வைத்து இருக்கும்.அப்படிபட்ட சொத்துக்களான நிலம் கட்டிடம் விற்பனைக்கு வரும் போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னென்னவென்றால் 4) டிரஸ்ட் சொத்து வாங்க போகிறீர்கள் என்றால் முதலில் பாரக்க வேண்டியது சொத்து பத்திரத்தை அல்ல!!டிரஸ்ட் பத்திரதைதான்.அதில் ட்ரஸ்ட் சொத்துக்களை ட்ரஸ்டின் நலனுக்காக விற்