Posts

Showing posts from February 17, 2020

வழக்கறிஞர் காதலிக்கு சர்வே பற்றி ஒரு ரியல்எஸ்டேட் ஏஜென்டின் கடிதம் 2

Image
கடிதம் 2 சர்வே என்றால் என்ன?சர்வேக்கள் பல வகை !! சர்வே (Survey)என்பது ஒரு அற்புதமான கலை  நிலத்தையோ வானத்தையோ கடலையோ படுக்கையான நீளத்தை அகலத்தை பலவிதமான கணிதமுறையில் பலவிதமான உபகரணங்கள் கொண்டு அளப்பது ஆகும். அதுவே செங்குத்தளவு உயரங்களை பல்வேறுவிதமான உபகரணங்களை கொண்டு பல்வேறுவிதமான கணிதமுறையில் அளப்பதும் சர்வே தான் ஆனால் அதற்கு வேறு தொழிலநுட்ப பெயர் லெவலிங் (Levelling) என்று சொல்வார்கள் பெத்தவளே! மேற்படி சர்வே மற்றும் லெவல்லிங் முறையில் அளப்பதை ஒரு கைக்கு அடக்கமான தாளில் வரைபடம் ஆக உருவாக்கி தருவதே சர்வேவின் குறிகோள் பெத்தவளே! மேற்படி வரைபடத்தை பிளான் என்றும் மேப் என்றும் நாம் அழைக்கிறோம் மிகச்சிறிய அலகுகளில் (அளவுகளில்) மினியேச்சர் செஞ்சு வரைபடம் வரைந்தா அதற்கு பெயர் மேப் (Map). கொஞ்சம் பெரிய அலகுகளில் (அளவுகளில்) வரைபடம் உருவாக்கினால் அதற்கு பெயர் பிளான். மேப்பிக்கு நம்ம இந்திய வரைபடத்தையும் பிளானிற்கு நமது டிடிசிபி அப்ரூவடு பிளானையும் சொல்லலாம் என்ன யோசிக்கறாய் இப்பொழுதுதான் மேப்பிற்கும் பிளான்ற்கும் வித்தியாசம் தெரிந்து கொண்டாயா? நல்லது சரி பெத்தவளே!! சர்வே உண