Posts

Showing posts from March 11, 2020

சர்வே கணிதம்

Image
சர்வேவுக்கு என்று அடிப்படையில் நல்ல கணித தேர்ச்சியும், கணிதத்தின் எளிமையான அடிப்படை உண்மைகளும் நமக்கு கட்டாயம் தெரிய வேண்டும் பெத்தவளே! அப்படி தெரியும்போது தான் களத்தில் நிலங்களை அளக்கும்போதும் அளந்த நிலங்களை அப்படியே வரைபடங்களாக உருவாக்கும்போதும், தவறில்லாமல் துல்லியமானதாக உருவாக்க முடியும்மா!! கணிதத்தில் பல்வேறு வகையான உண்மைகள் தான் இருக்கின்றன அந்த உண்மையின் அடிப்படையில் தான் நம்மால் கணக்கீடுகள் செய்ய முடியும், ஆக அந்த சர்வே கணிதத்தில் உள்ள உண்மைகளை நான் வரிசை கிரமமாக பட்டியலிடுகிறேன் பெத்தவளே!! முதலில் கோடுகளைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்வோம் ஒரு நேர்க்கோடு என்பது இரு புள்ளிகளுக்கு இடையே தூரமாகும். நேர்க்கோடுகள் படுக்கைக்கோடு செங்குத்துக்கோடு என்று மூன்று வகையாக உள்ளது. படுக்கைகோடு தரைமட்டமாகும், சாய்ப்புக்கோடு சாய்ந்த நிலையிலும் செங்குத்துக்கோடு நேராக மேல்நோக்கிய நிலையிலும் இருக்கும். அடுத்ததாக கோணங்களைப் பற்றிய உண்மைகள் தெரிந்து கொள்வோம் பெத்தவளே!  கோணங்கள் குருங்கோணம், விரிகோணம், நேர்க்கோணம் என மூன்று வகைகளாக இருக்கிறதும்மா! நேர்க்கோணம் என்பது 90 டிகிரி செங்குத்து