எந்தெந்த கோர்டில் என்னென்ன வழக்கு விசாரிக்கிறாங்க? தெரிந்து கொள்ள வேண்டிய 20 தகவல்கள்!

  • நிலம் சம்மந்தபட்ட சிக்கல்கள் பிரச்சனைகள் வரும்போது கோர்ட்டுக்கு போக வேண்டிய சூழல் ஏற்படும் போது வழக்கறிஞர்கள் சிட்டி சிவில் கோர்ட்,சப் கோரட்,முன்சிப் கோர்ட்,மேஜிஸ்ட்ரேட் கோரட்,ஹைகோரட் என்று பேசிகொள்ளும்போது  என்னை போல ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் சாதாரண பொதுமக்களுக்கு எந்த எந்த கோரட் எதற்கு என்று தெரியாது வக்கீல்களுக்குள் பேசிக்கொள்ளும் போது மலங்க மலங்க நிற்போம்.
  • இன்று தமிழ்நாடு பாண்டிசேரி பார்கவுன்சில் தலைவராக இருக்கும் அமல் அண்ணன் டீமில் சிவில் வழக்குகள் பார்க்கும் நல்ல திறமையானவழக்கறிஞர் திரு.அன்பழகன் அவர்கள் அவரின் சொந்த ஊரான தேவகோட்டை அருகில் நெல்வயல் கிராமத்திற்கு குடும்ப நிகழ்ச்சிக்காக என்னை அழைத்து சென்றார். அப்பொழுது ஒரு இரவு அவரிடம் எந்த எந்த கோர்ட் என்ன என்ன செய்கிறது என்று பாடம் எடுத்தார்.அதனை அப்பொழுது ஒரு 40 பக்க நோட்டு வாங்கி குறித்து கொண்டேன்.அதன்பிறகுநான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது
  • இப்பொழுதும் நிறைய பேர் என்னை போல வழக்கறிஞர் முன்னால் மலங்க மலங்க முழிப்பதை நான் பார்க்கிறேன்.அதனால் இந்த பதிவை சாமனிய மக்களுக்கு புரியும்படி எழுதுகிறேன் இந்த நேரத்தில் வழக்கறிஞர் அன்பழகன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்
  • நீதிமன்றங்கள் மேல்நிலை நீதிமன்றங்கள் கீழ்நிலை நீதிமன்றங்கள் என்று இரண்டாக பிரிக்கலாம்.இது ஆங்கிலோ இந்திய படிநிலை முறை என்று சொல்வார்கள்.
  • கீழ்நிலை நீதிமன்றங்கள் மூன்று நிலையாக பிரிக்கப்படுகின்றது அ) முதல்நிலை நீதிமன்றங்கள் ஆ)இரண்டாம் நிலை நீதிமன்றங்கள்  இ) மூன்றாம் நிலை நீதிமன்றங்கள் ஆகும்
  • முதல் நிலை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மேஜிஸ்ட்ரேட் கோரட்(Magistrate Court) என்றும் சிவில் வழக்குகளை விசாரிக்க முன்சீப் கோர்ட் (Munsif Court) என்றும் சொல்லுவார்கள்.
  • இரண்டாவது நிலையில் சிவில் வழக்குகள் எல்லாவற்றையும் சார்பு நிலை நீதிமன்றம்(sub court) விசாரணை செய்யும்.கொலை அல்லாத குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கும் .அடுத்து முதல் நிலை நீதிமன்றங்களுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் இது விளங்கும்.
  • மூன்றாம் நிலை நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் (District Court)ஆகும். இவை கடுமையான குற்றவியல் வழக்குகளை அமர்வு (Sessions court) விசாரிக்கும்.இரண்டாம்நிலை நீதிமன்றங்களின் மேல்முறையீடுகளை விசாரிக்கும் நீதிமன்றங்காளாக இருக்கிறது.முக்கியமான சிவில் வழக்குகளையும் மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கின்றது
  • மேலே சொன்ன மூன்று படிநிலைகளுக்கு மேலே உயர்நீதிமன்றமும் அதற்கு மேலே உச்சநீதிமன்றமும் இருக்கிறது.
  • மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் இரண்டாம் நிலை நீதிமன்றங்களின் ஒரு சில தீர்ப்புகளையும் மேல்முறையீடுகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்.
  • மேலும் ஒருவரது அடிப்படை உரிமைகள் பாதிக்கபட்டால் அல்லது அரசு எந்திரத்தால் பாதிக்கபட்டால் நீதிபேரணை கேட்டால் (writ petition) அதனை விசாரித்து வழங்குவது போன்ற வேலைகளை செய்யும்
  • இது இல்லாமல் சிவில் வழக்குகளுக்கு தனி தனியாக தீர்ப்பாயங்கள் நிறைய தீர்ப்பாயங்களும் கிரிமினல் வழக்குகளிக்கு மிக குறைவான தீர்ப்பாயங்களும் இருக்கின்றன.
  • இராணுவ தீர்ப்பாயம்,அரசு ஊழியர்களின் ஊழல் குற்றசாட்டுகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் கிரிமினல் குற்றங்களுக்கான தீர்ப்பாயங்காளாக சொல்லலாம்.
  • அதிகமாக சிவில் வழக்குகள் இருப்பதால் அதற்கு துறை வாரியாக தீர்ப்பாயம் பிரித்து கொடுத்து விசாரிக்க வைத்து விட்டனர்.
  • தொழிலாளர் பிரச்சினைகளை பொறுத்தவரை தொழிலாளர் விபத்துக்கு,தொழிலாளர் ஊதியத்திக்கு,தொழிலாளர் நலத்திற்கு,தொழிலாளர் தகறாறுகளுக்கு என தனி தனி தீர்ப்பாயம் இருக்கிறது.
  • கூட்டுறவு துறைக்கு தனி தீர்ப்பாயமும் நில அளவை துறைக்கு தனி தீர்ப்பாயமும் நில சீர்திருத்தத்திற்கு தனி தீர்ப்பாயமும் சுரங்கம் பிரச்சினைகளுக்கு தனி தீர்ப்பாயமும் நீர்பாசனத்தற்கு தனி தீர்ப்பாயமும் அகதிகளுக்கு தனியாகவும் செய்திதாளுக்கு ,தேர்தல் முறைகேடுகளுக்கு பேடண்ட் உரிமைக்கு தனி தீர்ப்பாயங்களும் இருக்கின்றன.
  • தீர்ப்பாயங்களிலே நான் அதிகமாக பயணித்தது நில அளவை தீர்ப்பாயமும் வீட்டு வாடகை தீரப்பாயமும் குடும்ப கோர்ட் தீர்ப்பாயமும தான் மேலும் உண்மையிலே இதில்தான் அதிக வழக்குகள் இருக்கிறது.
  • இது இல்லாமல் நுகர்வோர் கோர்ட்ஒன்று இருக்கிறது அவை மாவட்ட அளவில் மாநில அளவில் தேசிய அளவில் என்று இருக்கிறது .
  • மாவட்ட சமரச மையம் ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் இருக்கிறது. வாதி பிரதிவாதி இரு தரப்பினரும் வழக்கை இழுத்துகொண்டு போகாமல் காலம் கடந்தாமல் இருப்பதற்கு பேசி தீர்ப்பதற்கு இந்த சமரச மையங்கள் பயன்படுகின்றன.
  • மேலும உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றங்களில் இலவச சட்ட உதவி மையங்கள் சிவில் வழக்குகளுக்கு நலிந்தோருக்கு உதவி செய்யும் வழக்கறிஞர் மதிப்பு ஊதியம் அரசு கட்டணம் அரசு வழங்குகிறது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர்
9962265834
www.paranjothipandian.in

மிக முக்கிய குறிப்பு:
இவையே அடிப்படையாக நீதிமன்றங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை! நீதிதுறை என்னுடைய domain அல்ல நான் எல்லா நீதிமன்றம் சென்ற பார்வையாளன், சில நீதிமன்றங்களில் போராட்டங்கள் செய்து தண்டணையாளன் அந்த அளவே தெரியும்.சாமானியனுக்கு நீதிமன்றம் புரிய வேண்டும் என்றே இதனை பதிவிடுகிறேன். இந்ந பதிவை படிக்கின்ற வழக்கறிஞர்கள் நணபர்கள் பிழைகள் இருந்தால் திருத்தும்படி வேண்டுகிறேன்.

#சிட்டிசிவில்கோர்ட் #சப் கோரட் #முன்சிப்கோர்ட் #மேஜிஸ்ட்ரேட்கோரட் #ஹைகோரட் #ரியல்எஸ்டேட் #ஏஜெண்டுகள் #வக்கீல்கள் #பாண்டிசேரி #பார்கவுன்சில்  #வழக்கறிஞர் #MagistrateCourt #MunsifCourt #தொழிலாளர் #நீதிமன்றங்கள் #DistrictCourt #Sessionscourt  #உச்சநீதிமன்றம் #writ-petition #நீதிபேரணை  #இராணுவதீர்ப்பாயம்  #கூட்டுறவு #சமரசமையம்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்