Posts

Showing posts from February 22, 2020

திருநெல்வேலிகாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேரளா-பாராசாலா பத்திரங்கள் !!

Image
திருநெல்வேலிகாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேரளா-பாராசாலா பத்திரங்கள் !! பதிவுசட்டத்தில் இரண்டு சார்பதிவக எல்லையில் ஒரே நேரத்தில் சொத்து வாங்கும் போது ஏதாவது ஒரு சார்பதிவக எல்லையில் பதியலாம் என்ற விதி இருக்கிறது . அதனை பயன்படுத்தி பெரும்பாலும் திருநெல்வேலியில் நில வியாபாரம் செய்பவர்கள் நிலம் வாங்குபவர்கள் இருப்பவர்கள் கேரளா மாநிலத்தில் களியகாவிளை அருகில் உள்ள பாராசாலை என்ற ஊரில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் இரண்டு செண்டோ ஒரு செண்டொ வாங்கி அதோடு திருநெல்வேலியில் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி இரண்டையும் சேர்த்து கேரளாவில் பாரசாலையில் பதிந்துவிடுவர். எதற்காக என்றால் தமிழ்நாட்டு முத்திரை தீரவை வழிகாட்டி மதிப்பு என அனைத்தும் கேரளாவை விட அதிகமாக இருக்கும். அதனால் பலர் ரயில் ஏறி பாராசாலையில் பதிவு செய்வார்கள். இப்படி கேரளாவில் பதிவது மிக பிரபலாமான நடைமுறையாக அப்பொழுது இருந்தது. 1997 ஆம் ஆண்டு தான் இதனை தமிழ்நாடு அரசு தடை செய்தது அதன்பிறகு யாரும் ரயிலேறி அடுத்த மாநிலம் சென்று பதிவது இல்லை. ஆனால் இன்றும் பல தாய் பத்திரங்களில் பாராசாலையில் பதிந்த பத்திரங்கள் திருநெல்வேலி மாவட்ட சொத்