Posts

Showing posts from December 6, 2019

கிரய பத்திரத்தின் போது எழுதி கொடுப்பவருக்கு நில உரிமை இருக்கிறதா என்று சார்பதிவாளர் விசாரிக்கலாமா? தெரிந்து கொள்ள வேண்டிவைகள்!!

Image
            1) சார்பதிவாளர்கள் கிரய பத்திரத்தை பதிவுக்கு நீங்கள் தாக்கல் செய்ய சமர்பிக்கும்போது உண்மையான உரிமையாளர் தான் சொத்தை விற்கிறாரா அவருக்கு உரிமை கூறு இருக்கிறதா தாய்பத்திரம் சரியாக இருக்கிறாதா என்று இப்பொழுது சோதனை செய்கிறார் தானே !  2)எத்தனை பங்கு விற்பவருக்கு இருக்கிறது இத்தனை பங்கு இல்லை என்று பாகபிரிவினை பத்திரங்களை அலசும் சார்பதிவாளரை பாரத்து இருக்கிறேன். 3) ரியல் எஸ்டேட் ஏஎஜண்டுகளின் தலையிலுள்ள நுங்கை அந்த பதிவு முடிவதற்குள் சார்பதிவாளர் பிதுக்கி எடுத்துவிடுவார் சில நேரங்களில் பத்திர பதிவில் எந்த தடங்கலும் வரகூடாது சார்பதிவாளரை   மகா கணம் பொருந்திய மகானாகவே ரியல்எஸ்டேட் ஏஜெண்டான நான் பார்ப்பேன் . 4) ஆனால் பதிவு சட்டம் அவருக்கு ஆவணங்களை சோதிக்கும் உரிமை கொடுக்கவில்லை . ஒருவர் பத்திரப் பதிவுக்கு தாக்கல் ஆகும் ஆவணத்தில் உள்ள சொத்தை அதில் அவருக்கு முழு பங்கு அல்லது உரிமை அல்லது உரிமை பட்டம் இருக்கிறதா என்று மனநிறைவு பதிவாளர் அடைய வேண்டும்என்று அவசியம் இல்லை அ