Posts

Showing posts from October 25, 2019

அசையும் சொத்து அசையா சொத்து என்பது என்ன? புரிந்துகொள்ள வேண்டியவை!!

Image
முதலில் நாம் சொத்து என்றால் என்ன என்று தெரிந்தால்தான் அசையும் சொத்து அசையா சொத்து என்பதை நாம்  பிரித்து தெரிந்து கொள்ள முடியும். ஆக சொத்து என்று எதை சொல்கிறோம் என்றால் அதிலிரிந்து தொடர்ந்து நமக்கு இலாபமோ வருவாயோ வந்து கொண்டு இருக்கும். அதனை விற்று வெளியேறலாம். அதனை வைத்து கடன் பெறலாம் அதனை வைத்து பராமரித்து இலாபம் பெறலாம். அசையும் சொத்துக்கு உதாரணம் தங்க நகைகள் பங்கு சந்தை முதலீடுகள் போன்றவை நாம் ரியல் எஸ்டேட்டில் அசையும் சொத்தை பற்றி அதிகம் பேச தேவை இருக்காது. அசையா சொத்துக்கு உதாரணம் நிலம் தான். அப்படிபட்ட அசையா சொத்தை வாங்கும் போதும் விற்கும் போதும் பதிவு செய்ய வேண்டும் என்று பதிவு சட்டம் சொல்கிறது. ரியல்எஸ்டேட் தொழில் முழுக்க முழுக்க அசையாசொத்தை வியாபாரம் செய்வது தான் எனவே பதிவு செய்வது மட்டும் இல்லாமல் அதன் மதிப்பை கணக்கிட்டு முத்திரை தாள் வாங்க வேண்டும். அப்பொழுது எது அசையும் சொத்து அசையா சொத்து என்று குழப்பங்கள் வரும் அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அசையா சொத்து என்பது  கால நிலம் மனைகள் ,வயல்காடு ,பண்ணைகள் தோட்டங்கள் அதன்மீது இருக்கின்ற கட்டிடங