Posts

Showing posts from November 25, 2019

இரத்து பத்திரம் (Cancellation Deed) தெரிந்து கொள்ள வேண்டிய 21 செய்திகள்!!

Image
1) ஒரு பத்திரத்தை உருவாக்குகிறோம் அந்த பத்திரம் தேவையில்லை என்று உணரும் பட்சத்தில் அதனை வேண்டாம் என்று இரத்து செய்வதை ஒரு பத்திரம் எழுதி இரத்து செய்வதை   இரத்து (cancelation deed) என்கிறோம். 2) எந்த சொத்து வாங்கினாலும் இரத்து பத்திரம் அந்த   சொத்தினுடைய ஆவணங்களில் இருந்தால் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் .   3) சட்ட குழப்பங்கள் சட்டதடைகள் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன . 4) பொதுவாக ஆவணங்களை இரத்து செய்யகூடிய ஆவணம் இரத்து செய்ய முடியாத ஆவணம் என இரண்டாக பிரிக்கலாம் .  5) இரத்து செய்யமுடியாத ஆவணங்களை போலியாகவோ மோசடியாகவோ தவறான ஆவணங்களை வைத்து தாக்கல் செய்யபட்டு இருந்தால் உரிமை இல்லாதவர்கள் எழுதி கொடுத்து இருந்தால் அதனை நீதிமன்றம் மூலமாக அணுகி இரத்து செய்யலாம் . 6) இரத்து செய்ய கூடிய பத்திரங்கள்:   a) கிரய ஒப்பந்த பத்திரம் b) பொது அதிகாரம் மற்றும் சிறப்பு அதிகார பத்திரம் c) உயில் பத்திரம் 7) கிரய ஒப்பந்தம்   சார்பதிவகத்தில் பதிவு செய்யபட்டு இருக்கிறது . ஒப்பந்தத்தில் சோல்ல