Posts

Showing posts from December 19, 2019

வீணாண முத்திரைதாளை அரசிடம் கொடுத்து திரும்ப பணம்பெறுவது எப்படி?

Image
       1) ஒரு சொத்து வாங்குவதற்காக கிரய பத்திரம் உருவாக்க முத்திரை தாள் சில இலட்சங்களுக்கோ சில ஆயிரங்களுக்கோ வாங்கிவிட்டீர்கள்.முத்திரைதாளில் கிரய ஷரத்துகள் எல்லாம் அடித்து வைத்துவிட்டீர்கள் ஆனால் கிரயம் நடக்கவில்லை நின்று போய்விட்டது .அடித்து வைத்த பத்திரம் வீணாகிவிட்டது. 2) இருபதாயிரம் ரூபாய்கு முத்திரைதாள் வாங்கி பத்திரம் உருவாக்கும் அன்று தேங்காய் எண்ணெய் பாட்டில் உடைந்து முத்திரைதாள் முழுதும் தேங்காய் எண்ணெய் அபிஷேகம் நடந்து முத்திரைதாள் வீணாகிவிட்டது. 3) 17 ஆயிரம் ரூபாய்கான பத்திர ஆபிஸ்கிற்கு டைப்பிங் அடித்து வைத்த முத்தரை தாளை வீட்டம்மாவுடன் சண்டை போட்டு துண்டு துண்டாக கிழித்துவிட்டார்.இன்னொரு அம்மா சங்கீதா ஓட்டல் சாம்பார் வடை பார்சல் டப்பாவுடன் 6ஆயிரம் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரை   வீணாக்கவிட்டார். 4) இப்படி முத்திரை தாள்கள் எழுதியோ எழுதபடாமலோ இருந்து பதியமுடியாமல் அல்லது மேற்சொன்ன சம்பவங்கள்படி வீணாகிவிடும்.அப்பொழுது பணம் வீணாக போய்விட்டதே என்று அழுவார்கள். 5) பத்திரம் வாங்கிய ஆறு மாத்த்திற்குள் சென்றால் கழிவு போக அரசிடம்பணத்தை திருப்பி வாங்கலாம்.அதன் வழிமு