Posts

Showing posts from December, 2019

2007 ஆம் ஆண்டு அரசின் நில அஜிர்த குறைபாடுகளை எதிர்த்து நான் அனுப்பிய அரைவேக்காட்டு மனுவும் அதற்கு பதிலும்.

Image
1)2007- களில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சொழிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வரியத்தால் நில எடுப்பு நடைபெற்றது.அதற்கு நஷ்ட ஈடாக சென்ட்டுக்கு 500 ரூபாய் என்று நிர்ணயித்து இருந்தனர். அதனை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சென்ட்டுக்கு 3500 ரூபாய் ஆக்கினர். 2) அந்தத் தொகையும் பத்தாது என்று அதற்கும் மேல்முறையீடு செய்து சென்ட்டுக்கு 5500 ரூபாய் தீர்ப்பு பெற்றனர். ஆனால் அந்த தீர்ப்பை பெற 10 ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடைபெற்றது. 3) 1 ஏக்கர், ½ ஏக்கர் என்று சிறு சிறு நிலங்கள் வைத்திருந்த மக்கள் தங்கள் நிலத்தினை இழந்தனர்.அந்த மக்களுக்கு போதுமான கல்வி அறிவும், நிலஎடுப்பு பற்றிய சட்ட அறிவும் எதுவும் இல்லாததால் நஷ்டஈடை வாங்குவதற்கும் விவரம் தெரிந்தவர்களின் உதவியை நாடியும், நிலஎடுப்பு வழக்கறிஞர்களை நம்பியும் கையில் இருந்த சேமிப்பு பணங்களை எல்லாம் வீணாக்கி கொண்டிருந்தனர். 4) அப்புழுது தான் ஒரு உண்மையை உணர ஆரம்பித்தேன். நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாம் செல்வந்தர்கள் அல்ல நிலத்தைப்பற்றிய அறிவு இருப்பவர்கள்தான் செல்வந்தர்கள் நிலம் மற்றும் நிலம் சம்மந்தபட்ட அறிவை வைத்திருப்பவர்கள

எதற்காக ஜாமீன் கடன் பத்திரம் (Deed of Indematy ) போடப்படுகிறது?

Image
1.ஒரு சொத்தை வாங்கும்போது அதன் கிரயப்பத்திரத்தை நாம் எழுதுகிறோம். அந்தக் கிரயப்பத்திரம் உண்மையில் ஒப்பந்தச் சட்டம் சொத்து பரிமாற்றச் சட்டம் வாரிசு உரிமைசட்டம், உயில் சட்டம் போன்ற பல சட்டங்களை இணைத்து எழுதப்படுகின்ற ஷரத்துகள் எல்லாம் கிரயப்பத்திரத்தில் உள்ளது. 2.ஜாமின் கடன் பத்திரம் என்பதும் ஒரு கிரயப் பத்திரத்தில் இறுதியாக நாம் எழுதுகிறோம். என்னவென்றால் இந்த சொத்தில் எதிர்காலத்தில் ஏதாவது வில்லகங்கள் வந்தால் நானே முன்னின்று தீர்த்துவைக்கிறேன் என்ற உறுதி மொழியை சொத்தை விற்பவர் கொடுக்கின்றார். அதுதான் ஜாமீன் கொடுக்கும் முறை இந்த ஜாமின் கொடுக்கும் முறையை நாம் பொதுவாக கிரயப்பத்திற்குள்ளேயே எழுதிவிடுகிறோம். 3.இருந்தாலும் நீங்கள் வாங்கப்போகின்ற சொத்தில் ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. தீவிபத்தில் கருகிவிட்டது உண்மையிலேயே தொலைந்துவிட்டது என்று சொன்னால் அவர் உண்மையைத்தான் சொல்கிறார் நம்பும்   பட்சத்தில் மேற்படி சொத்தை நீங்கள் கிரயம் வாங்குகிறீர்கள் ஒரு அச்சம் வருகிறது. 4.அப்படி நீங்கள் நம்பி வாங்கினாலும் உங்களுக்கு ஒரு சட்ட பாதுகாப்பு, சட்ட அந்தஸ்த்து உள்ள ஆவணம்

சமத்துவபுர வீடுகளை வாங்கலாமா? தெரிந்து கொள்ள வேண்டிய 15 செய்திகள்!

Image
                                             1) தமிழகம் முழுவதும் ஊர் சேரி என இரண்டாக பிரிந்து கிடப்பதும் தீண்டாமை வேறுபாடு ஏறத்தாழ்வு என மனிதர்களை பிரிக்கும் சைக் எண்ணங்கள் வீரியமிகுந்து இருக்கின்றதை குறைக்க மாற்று மருந்து (Antidote) திட்டமாக சமத்துவபுரம் திட்டத்தை மாவட்டந்தோறும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உருவாக்கினார்கள். 2) இந்த சமத்துவபுரம் அமைந்த இடங்கள் எல்லாம் பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்களாக இருக்கும்.அதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேர்ந்தெடுத்து நத்தம் நிலமாக மாற்றுவார்கள். 3) சமத்துவபுரத்திற்கு ஒப்படைதாரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நத்தம் நிலவரிதிட்டம் செய்து நத்தம் புலப்படம் நத்தம் தூய அடங்கல் பதிவேடு அரசு உருவாக்கும். 4) மேற்படி நத்தம் நிலத்தை கிராமங்களில் வீட்டுமனை ஒப்படை செய்வது விஷயமாய் கொடுக்கப்படும் நமூனா பட்டா பயனாளிகளுக்கு கொடுக்கப்படும். 5) சமத்துவபுரம் வீடுகளை பொறுத்தவரை அதன் அடிமனை ஒப்படை பட்டா விதிகளின் படி கொடுக்கப்படுகிறது. 6) பல சமத்துவபுரங்களில் ஒதுக்கபட்ட இடங்களை நத்தம் கிராம கணக்கில் உடனடியாக ஏற்றிவ