Posts

Showing posts from December 10, 2019

பரிவரத்தனை பத்திரம் (Deed of Exchange)புரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!!

Image
                       1) கிரயபத்திரம் கேள்வி பட்டு இருக்கிறோம் அது என்ன பரிவரத்தனை பத்திரம் எனகிறீர்களா? கிரயபத்திரத்தில் இடத்தை கொடுக்கும்போது கைமாறாக பணத்தை  பெறுவோம். ஆனால் பரிவரத்தனை  பத்திரத்தில் கைமாறாக வேறு ஒரு இடத்தை பெறுவோம். 2) கிரயம் என்பது பணம்மூலம் மாற்றும் முறை பரிவரத்தனை என்பது நிலம்மூலம் மாற்றும் முறை சரி இந்த மாதிரி நிலம் மூலம் மாற்றும் எங்கெல்லாம் நடக்கிறது. என்பதை பார்ப்போம். 3) உங்கள் நிலத்திற்கு பக்கத்தில் ஒட்டியுள்ள  நிலம் விற்பனைக்கு வருகிறது. நிலத்தை விற்பனை செய்பவருக்கு உங்களுடைய வேறு ஒரு இடத்தில் இருக்கும் நிலம் தேவைபடுகிறது. அந்த மாதிரி நேரத்தில் சொத்தை பரிமாறி கொள்வது பரிவரத்தனை பத்திரம்  (Deed of Exchange ) ஆகும். 4) இன்னொரு உதாராணம் கிராமங்களில் இரண்டு பங்காளிகள் பட்டாபடி புலப்பட புரிதல்படி சர்வே எண் 12/1 ஒருநபருக்கும் 12/2 ஒரு நபருக்கும் உரிமை ஆனால் அனுபவ படி மாற்றி அனுபவிக்கின்றனர். 5) அதாவது சர்வே எண் 12/1 உரிமையாளர் சர்வே எண் 12/2 ஐ அனுபவிக்கிறார். சர்வே எண் 12/2 உரிமையாளர் சர்வே எண் 12/1 ஐ அனுபவிக்கிறார்.சரி பட்டாபடி இடத்தை ம