Posts

Showing posts from October 20, 2019

ஆவண எழுத்தர்களுக்கு முறையாக லைசென்ஸ் வழங்க வேண்டும் ஏன்? புரிந்து கொள்ள வேண்டிய 19 செய்திகள்!!

Image
1) நாம் இப்போ பத்திர அலுவலகத்திற்கு செல்லும் பொழுது பத்திர அலுவலகத்திற்கு வெளியே ஆவண எழுத்தர்கள் டாக்குமென்ட் ரைட்டர் என்று பெயர் போட்டு கிரையம் பத்திரம் ,விடுதலை பத்திரம், தான பத்திரம் தான செட்டில்மென்ட் பத்திரம் ,செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் என்று பாத்திரங்கள் பெயர் எல்லாம் வரிசையாக போட்டு பத்திரங்கள் எழுதி அல்லது அடித்து தரப்படும் அல்லது தயார் செய்து தரப்படும் என்று விளம்பரம் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். 2) இப்படி ஆவணம் எழுதி தருபவர்களுக்கு பதிவுத்துறை உரிமம் அதாவது லைசென்ஸ் கொடுக்கிறது அந்த லைசென்ஸ் பெற்றவர்கள்தான் ஆவண எழுத்தர்கள் ஆகும். 3)ஒரே ஒரு சார்பதிவக எல்லைக்குள் ஆவண எழுத்தர் என்றால் C லைசெனஸ் சார்பதிவு  மாவட்டதிற்கு ஆவண எழுத்தர் என்றால் B லைசென்ஸ் மாநிலம் முழுமைக்கும் ஆவண எழுத்தர் என்றால் A லைசென்ஸ் என்று ஆவண எழுத்தர்களை வகைபடுத்தி இருக்கிறது பதிவுதுறை. 4) ஒரு ஆவண எழுத்தர் அங்கீகரிக்கபட்ட பல்கலைகழகத்தில் இருந்து டிகிரியும் தமிழ் ஆங்கிலம் கீழ்நிலை அல்லது உயர்நிலை தேர்வில் தேர்ச்சியும் கணிணி பயன்பாட்டில் டிப்ளமோவும் தேவைபடுவதாக