Posts

Showing posts from October 31, 2019

நீங்கள் வாங்கும் நிலத்திற்கு Title Deed எளிமையாக எப்படி பாரக்க வேண்டும்!!!

Image
  நீங்கள் சொத்து  வாங்கும் போது அந்த சொத்து ஆதியில் அதாவது முதன்முதலில் யாருக்கு பதியப்பட்டது அல்லது உரிமையானது என்பதை அறிந்து கொள்வதுதான் நிலத்தின் நதிமூலம் ரிஷிமூலம் பார்ப்பது ஆகும். நதிமூலம் ரிஷிமூலம் எப்படி பார்ப்பது என்றால் அந்த சொத்தினுடைய ஆவணங்கள் மூலம் அதனுடைய தாய் பத்திரங்கள் மூல பத்திரங்கள் மூலம் அந்த சொத்தின் மூல உரிமை யாருக்கு இருந்தது என்று சொல்வார்கள் . எல்லா சொத்தையும் ஒரு புரிதலுக்காக இரண்டு வகையாக நாம் பிரித்து கொள்ளலாம் 1)ஆதியில் அரசுக்கு சொந்தமானவை 2)ஆதியில் தனிப்பட்ட ஒரு மனிதருக்கு சொந்தமானவை ஆதியில் அரசுக்கு சொந்தமானவை என்று தெரிந்தால் அரசிடம் இருந்து அந்த தனிநபருக்கு எப்படி சொத்து வந்து இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டபடி சொல்வதென்றால் அரசு நிலத்தை அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அரசு அனாதீனம் நிலம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அது என்ன அரசு புறம்போக்கு நிலம் அரசு அனாதீன நிலம் என்று கேட்கிறீர்களா? புறம்போக்கு நிலம் என்றால்  அது ஆரம்பத்தில் இருந்தே அரசின் கையிருப்பு நிலம் அதாவது அரசினுடைய சொத்து .அனாதினம் என்றால் தனியார் நில உடைமையாளர்க