Posts

Showing posts from February 27, 2020

பாண்டிச்சேரியில் பிரஞ்சு காரர்களின் நில வரி வாங்கும் வரலாறு! தெரிந்து கொள்ள வேண்டிய 29 செய்திகள்!

Image
பாண்டிச்சேரி ,காரைக்கால்,மாகே (கேரளா) ஏனாம் ( ஆந்திரா) சந்திரநாகூர் (மேற்கு வங்காளம்) ஆகிய பிரஞ்சு இந்திய பகுதிகளுக்கு தலைநகரமாகவும் பாண்டிச்சேரியை வைத்து ஒட்டு மொத்த பிரெஞ்சு இந்தியாவை நிர்வாகம் செய்தனர் பிரெஞ்சுகாரர்கள் ஆங்கிலேயரை போல் காலனி ஆதிக்க வல்லாரசாக இந்தியாவில் ஆக வேண்டும் என்று பிரான்சுவா மார்ட்டின் காலம் முதல் டூப்ளக்ஸ் காலம் வரை பிரெஞ்சுகாரர்கள் முட்டி மோதி பார்த்தனர். இரண்டு கர்நாடாக போரும் பல்வேறு இராஜ தந்திர நடவடிக்கைகளை பிரெஞ்சு காரர்கள் செய்து பார்த்துவிட்டு ஏன் ஒரு வாட்டி சென்னை -செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றியும் பார்த்துவிட்டு பிறகு ஆங்கிலேயர்களிடம் மோதாமல் இருக்கின்ற பகுதிகளை பிஸினஸ் சென்டர்களாக வைத்து நாட்டை நிர்வாகம் செய்தனர். அப்படி இந்தியா முழுவதும் வியாபாரம் செய்ததால் பாண்டிசேரியை வியாபார தலைநகராக வைத்து தங்களுடைய வணிகத்துக்கு ஆதாரமாக பாண்டிச்சேரியை பெரிய வியாபார மையமாக மாற்ற பாண்டிசேரியை சுற்றியுள்ள நிலங்களையும் தோட்டங்களையும் நூறு ஏக்கர் இருநூறு ஏக்கர் என்று வாங்கி நிலபரப்பினை அதிக படுத்தினர். கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி நிலத்தையும் அதில் வாழ்ந்த