Posts

Showing posts from January 5, 2021

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் முன் பதிவு செய்தவர்களுக்கு!!

Image
   நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் முன் பதிவு செய்தவர்களுக்கு!! நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1மற்றும் பாகம் 2 இன் முன்பதிவு திட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பதிந்து பணம் கட்டி இருந்தார்கள்!!அந்த ஆதரவுக்கு முதலில் நன்றி!! டிசம்பர் 7 தேதி புத்தகம் பிரசுரித்து விடுவோம் என்று திட்டமிட்டு இருந்தோம் ஆனால் பிழைதிருத்த வேலையே என்னால் முடிக்காமல் போய்விட்டது. சிவகாசியில் உள்ள அச்சகமும் ஆண்டு இறுதி காலண்டர் வேலை முடித்த பிறகுதான் அச்சு ஏற்ற முடியும் என்று சொல்லிவிட்டார்கள். முன்பதிவு செய்தவர்களுக்கு print on demand இல் உடனடியாக கொடுத்துவிட முடியும் ஆனால் அதனின் அட்டையும் வடிவமும் சிவகாசி அச்சு போல வராது. நான் முழு நேர எழுத்து பணியில் இருந்தால் விரைவில் திருத்தம் செய்து இருப்பேன்.தொழில் முனைவோருக்கான வேலை !களபணி என்று சுற்றி கொண்டே செய்வதால் குறித்த நேரத்தில் வெளியட முடியவில்லை!! புத்தகம் நிச்சயம் தைமகள் பிறக்கும் பொழுது உங்கள் கைகளில் தவழும்!தாமதத்திற்கு மன்னிப்பீராக! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothi_pandian #book #author #land #realest

திருச்சி மாவட்டத்தில் விநியோகிக்கபடாத பூமிதான நிலங்கள் எங்கெங்கு இருக்கி...

Image

டச்சு அடிமை வியாபாரிகள் இன்று கல்லறைகளில்!!!

Image
   டச்சு அடிமை வியாபாரிகள் இன்று கல்லறைகளில்!!! வீரானிகடே ஊஸ்ட்டிடின்சே கம்பெனிகே (Vereenigde Oostindische Compagnie) என்ற கம்பெனியை சுருக்கமாக VOC என்று சொல்வார்கள்.ஆப்பிரக்காவில் இருந்து அமெரிக்க கஞ்சா தோட்டத்திற்கும் கரும்புத் தோட்டத்திற்கும் அடிமைகளை ஏற்றுமதி செய்த மிகப் பெரிய கம்பெனி!! கருப்பின அடிமை வியாபாரம் தாண்டி ஒரு வெரைட்டிக்காக இந்தியாவிற்குள் 1600 களில் தன்னுடைய VOC கப்பல்களை அனுப்பி விடுகின்றனர். ஏற்கனவே வாஸ்கடகாமா என்ற போர்ச்சுக்கீசிய கேப்டன் போர்ச்சுகீசுக்கான இந்திய வைஸ்ராய் ஆக நிறைய மசாலா பொருடகளையும் அடிமைகளையும் கொச்சினில் இருந்து ஏற்றுமதி செய்துக் கொண்டு இருப்பதை ஒல்லாந்தர்கள் அறிந்து இருந்தார்கள். அதனால் ஒல்லாந்தர்களின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியது! இந்தியாவின் அரபிகடல் பகுதிகளில் போர்ச்சுக்கீசியர்கள் வலிமையாக இருந்ததால். ஒல்லாந்தர்கள் சோழ மண்டல கடற்கரையில் ஆந்திரா தமிழ்நாடு இலங்கை கடற்கரை ஓரங்களில் செட்டில் ஆகி இந்தியாவில் வயற்காட்டில் அடிமைகளாக இருந்த மக்களை குறைந்த விலைக்கு வாங்கி கொண்டு கப்பலில் ஹலாந்துக்கும் கரிபீயன் தீவிற்கும் கொண்டு சென்றனர். அப்