Posts

Showing posts from December 29, 2019

2007 ஆம் ஆண்டு அரசின் நில அஜிர்த குறைபாடுகளை எதிர்த்து நான் அனுப்பிய அரைவேக்காட்டு மனுவும் அதற்கு பதிலும்.

Image
1)2007- களில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சொழிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வரியத்தால் நில எடுப்பு நடைபெற்றது.அதற்கு நஷ்ட ஈடாக சென்ட்டுக்கு 500 ரூபாய் என்று நிர்ணயித்து இருந்தனர். அதனை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சென்ட்டுக்கு 3500 ரூபாய் ஆக்கினர். 2) அந்தத் தொகையும் பத்தாது என்று அதற்கும் மேல்முறையீடு செய்து சென்ட்டுக்கு 5500 ரூபாய் தீர்ப்பு பெற்றனர். ஆனால் அந்த தீர்ப்பை பெற 10 ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடைபெற்றது. 3) 1 ஏக்கர், ½ ஏக்கர் என்று சிறு சிறு நிலங்கள் வைத்திருந்த மக்கள் தங்கள் நிலத்தினை இழந்தனர்.அந்த மக்களுக்கு போதுமான கல்வி அறிவும், நிலஎடுப்பு பற்றிய சட்ட அறிவும் எதுவும் இல்லாததால் நஷ்டஈடை வாங்குவதற்கும் விவரம் தெரிந்தவர்களின் உதவியை நாடியும், நிலஎடுப்பு வழக்கறிஞர்களை நம்பியும் கையில் இருந்த சேமிப்பு பணங்களை எல்லாம் வீணாக்கி கொண்டிருந்தனர். 4) அப்புழுது தான் ஒரு உண்மையை உணர ஆரம்பித்தேன். நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாம் செல்வந்தர்கள் அல்ல நிலத்தைப்பற்றிய அறிவு இருப்பவர்கள்தான் செல்வந்தர்கள் நிலம் மற்றும் நிலம் சம்மந்தபட்ட அறிவை வைத்திருப்பவர்கள