Posts

Showing posts from January 1, 2020

தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுமான ஒப்பந்தம்

Image
            1.சென்னை, திருச்சி , கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் பெருநகரங்களில் அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகள் வாங்குவது சகஜமாக ஆகிவிட்டது என்பதை நாம் அறிவோம். அந்த வீடுகள் கட்டிமுடித்தபிறகு யாரும் வாங்குவதில்லை. 2.மேற்படி அடுக்குமாடி வீடுகளை கட்டிகொண்டிருக்கும் போதே கட்டுமானவர்கள் (Builders) அதனை சந்தைபடுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். மக்களும் மேற்படி சொத்தை வாங்கும்போது கட்டிமுடிப்பதற்கு முன்பே அதற்கு பணம் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். 3.அந்த நேரத்தில் Builders க்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கும் இடையே கட்டப்படும் வீடு சம்பந்தமாகி ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஆவணத்தில் என்னென்ன   ஷரத்துகள் எல்லாம் இருக்க வேண்டும் என்பதனைப் பார்போம். 4.மேற்படி கட்டுமான அக்ரிமென்ட்டை 2012 க்கு முன்பு கட்டிட அக்ரிம்மென்ட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 5.ஒரு ஆவணத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக அசையா சொத்து கைமாறுதல் நடந்திருக்க வேண்டும். ஆனால் கட்டுமான ஒப்பந்தத்தில் அந்த நேரத்தில் எந்தவித சொத்து பரிமாற்றமும் நடக்கவில்லை.அதனால