Posts

Showing posts from December 4, 2019

பத்திரங்களில் கையெழுத்தும் கைரேகையும் தெரிந்து கொள்ள வேண்டிய 12 செய்திகள்!!

Image
         1) பத்திரபதிவின் போது சார்பதிவாளர் ஆவணங்களிலும் பத்திரத்திலும் கைரேகை எடுப்பார்கள் அதில் கருப்பு இங்கில் அமுக்கி ஆவணங்களில் ரேகை வைக்கும்போது தெளிவில்லாமல் விழுந்துவிட்டது என்றால் ஒன்றும் பிரச்சினை இல்லை அப்படி விழுந்து விட்டதே ரத்து செய்யக்கூடாது அதற்குக் கீழே இன்னொரு ரேகை பதிவை பதிக்க வேண்டும். 2) அதன் பிறகு இரண்டு ரேகைகளுக்கு கீழே முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு என்று எழுதிட வேண்டும் இப்பொழுது ஆன்லைனில் பதிவு நடைபெறுவதால் ரேகையை இங்கில் எடுக்காமல் டிஜிட்டலில் எடுப்பதால் அது போன்ற பிரச்சினை இப்பொழுது இல்லை.அதுவே இப்பொழுது ஏதாவது காரணங்களுக்காக மேனுவலில் கைரேகை வைத்தால்  மேறகண்டவாறு செய்ய வேண்டும். 3) இதுவே பதிவுக்கு செல்லாத பிற ஆவணங்களில் கைரேகை வைத்தால் இது போல் முதல் ரேகை தவறாக இருந்தால் இரண்டாவது பதிப்பை (impression) வைக்க வேண்டும். 4) அதே போல் பத்திரபதிவு  நடக்கும் போது இடது பெருவிரல் ரேகை காயம் ஏற்பட்டு தெளிவில்லாமல் இருந்தாலும் அல்லது இடது பெருவிரல் இல்லாமல் இருந்தாலும் அல்லது இடது பெருவிரல் ஆபரேஷன் செய்யப்பட்டு கட்டுப் போடப்பட்டு இருந்தால் இடது