Posts

Showing posts from November 29, 2022

செட்டியாரும் முறுக்கு! சரக்கும் முறுக்கு!

Image
  செட்டியாரும் முறுக்கு!  சரக்கும் முறுக்கு! பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் பசுமையான மலையடிவாரத்தின் கீழ் சின்ன வெங்காயம் விளையும் பள்ளத்தாக்கில் விளம்பரமில்லாத அழகு பிரதேசத்தில் எனக்கான ஆசான்களில் ஒருவரான ஸ்ரீமான் தங்கமாமுனி அவர்களை சந்தித்தேன். நின்னு நிதானாமாக நேரம் செலவழித்து நிறைய நேரம் பேசி அவரிடம் இருந்து நிறைய கற்றுகொள்ள வேண்டும் என்று சொன்னாலும் வாடிக்கையாளர் களபணியின் ஊடே சந்தித்ததால் கற்று கொள்ள முடியாமல் கிளம்பிவிட்டேன். இப்பொழுதுதான் என் ஆசான் கடைவிரித்து இருக்கிறார்! கொள்வாருண்டா தெரியவில்லை! இனிதான் பார்க்க வேண்டும்! என் தொழில் முனைவு பயணத்தில் புரிந்து கொண்டது என்னவென்றால் "செட்டியாரும் முறுக்கு! சரக்கும் முறுக்கு!   என்று சொல்வார்கள். அதாவது விற்கப்படுகிற   சரக்கும் நல்லா இருக்க வேண்டும்! விற்கின்ற செட்டியாரின் மார்க்கெட்டிங் பேச்சும் நல்லா இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பொருள் மக்களிடம் போய் சேரும்! ஆசானின் சரக்கு முறுக்குதான். ஆனால் அது அறிவு வசப்பட்டது ... செட்டியார் முறுக்கா என்பது மனிதர்களின் உணர்ச்சி சம்மந்தபட்டது , சாதாரண மனிதர்களின் உணர்ச்சி அறிவை ஜெயித

பூமியை அளந்த கதைகள்

Image
  பூமியை அளந்த கதைகள்: தன் கோலால் உலகின் சுற்றளவை அளந்த எரஸ்தோனிஸ் - இன்று நிலத்தை சர்வே செய்வதை மிக எளிதாக பல்வேறு நவீன கருவிகள் வைத்து செய்து விடுகிறோம். இனி வரும் காலங்களிலும்   பல விதமான அதிநுட்ப கருவிகள் வந்து விடும். அதை வைத்து சூரிய குடும்பத்தை பால்வெளி மண்டலத்தை கூட அளந்து விடுவார்கள் எதிர்கால தலைமுறையினர் ஆனால் கி.மு. 200 களில் பண்டைய கிரேக்கத்தில் நைல் நதி நாகரீகத்தில் அலெக்சாண்டிரியா மாநகரின் பெரும் நூலகத்தின் நூலகர் எரஸ்தோனிஸ் , கணிதவியலாளர் , அவருக்கு முன்பே பண்டைய கிரேக்கத்தில் சாக்ரடீஸ் , பிளாட்டோ, பித்தாகரஸ், ஹிப்பாகிரிட்டிஸ் என்று மூளை வலிமைகள் பெருத்தவர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் பூமி உருண்டையானது தட்டையானது அல்ல என்பதை உறுதி செய்துவிட்டு சென்று விட்டார்கள் என்று எரஸ்தோனிஸ் புரிந்து வைத்து இருந்தார். இந்த நூலகர் அலெச்சாண்டிரியா என்ற அவரது நூலகம் இருக்கும் ஊரில் ஒரு காலி மனையில் ஐந்தடி உயர கோலை சரியாக 12 மணி வெயிலில் நட்டு வைத்து வெயில் கோலின் தலையில் பட்டு கீழே விழும் கொம்பின் நிழலை அளந்து ஒரு முக்கோணத்தை உருவாக்கினார். அதாவது சூரியான் கொம்ப