2007 ஆம் ஆண்டு அரசின் நில அஜிர்த குறைபாடுகளை எதிர்த்து நான் அனுப்பிய அரைவேக்காட்டு மனுவும் அதற்கு பதிலும்.

1)2007- களில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சொழிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வரியத்தால் நில எடுப்பு நடைபெற்றது.அதற்கு நஷ்ட ஈடாக சென்ட்டுக்கு 500 ரூபாய் என்று நிர்ணயித்து இருந்தனர். அதனை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சென்ட்டுக்கு 3500 ரூபாய் ஆக்கினர்.

2) அந்தத் தொகையும் பத்தாது என்று அதற்கும் மேல்முறையீடு செய்து சென்ட்டுக்கு 5500 ரூபாய் தீர்ப்பு பெற்றனர். ஆனால் அந்த தீர்ப்பை பெற 10 ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடைபெற்றது.

3) 1 ஏக்கர், ½ ஏக்கர் என்று சிறு சிறு நிலங்கள் வைத்திருந்த மக்கள் தங்கள் நிலத்தினை இழந்தனர்.அந்த மக்களுக்கு போதுமான கல்வி அறிவும், நிலஎடுப்பு பற்றிய சட்ட அறிவும் எதுவும் இல்லாததால் நஷ்டஈடை வாங்குவதற்கும் விவரம் தெரிந்தவர்களின் உதவியை நாடியும், நிலஎடுப்பு வழக்கறிஞர்களை நம்பியும் கையில் இருந்த சேமிப்பு பணங்களை எல்லாம் வீணாக்கி கொண்டிருந்தனர்.

4) அப்புழுது தான் ஒரு உண்மையை உணர ஆரம்பித்தேன். நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாம் செல்வந்தர்கள் அல்ல நிலத்தைப்பற்றிய அறிவு இருப்பவர்கள்தான் செல்வந்தர்கள் நிலம் மற்றும் நிலம் சம்மந்தபட்ட அறிவை வைத்திருப்பவர்கள் சொத்துகளை காப்பாற்றிக்கொள்கிரார்கள்.
5) நிலம் பற்றிய போதுமான அறிவு இல்லாதவர்கள் ஒரு பிரச்சனை வந்த போது என்ன செய்வது என்று தெரியாமல் அதனை காப்பாற்ற முடியாமல் இழந்துவிடுகின்றனர்.

6) அந்த நேரத்தில் நில அஜிர்தத்தால் நஷ்ட ஈடு பெறுவதற்கு படுகின்ற கஷ்டங்களை எல்லாம் எண்ணி தமிழக முதலமைச்சர் காட்டமாக கொஞ்சம் வேகமாக (இப்பொழுது இருக்கிண்ர பக்குவம் அப்பொழுது எனக்கு இல்லை என்று தெரிகிறது.) நான் வைத்திருந்த 6 கோறிக்கைகளில் 5 –ஐ நிரகரித்துவிட்டு 1 –ஐ மட்டும் எற்றுக்கொண்டிருந்தனர்.

7) அந்த கோரிக்கை என்னவேன்றால் நிலம் கையகப்படுத்தும் இடங்களிளேல்லாம் சட்ட உதவிமையங்கள், இலவச சட்ட உதவி முகாம்கள் நடத்தி நிலஎடுப்பு சட்டத்தை பமர மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும் இதன் மூலம் இடைத்தரகர்கள், கட்சிக்காரர்கள், வழக்கறிஞர்கள், பாதிப்புகள் இன்றி நஷ்ட ஈட்டுத்தொகை நிலத்தை இழந்தவர்க்கு கிடைக்கும் என்று ஏற்றுக்கொண்டு ஆவண செய்வதாக மாவட்ட வருவாய் அலுவலர் அப்போழுது ஏற்றுக்கொண்டிருந்தார்.

மாவட்ட வருவாய் துறைக்கு என்னுடைய மனு























 8)அப்பொழுது அனுப்பிய 3 பக்க அளவிலான என்னுடைய மனு, மாவட்ட வருவாய் அலுவலரின் இரண்டு பக்க அளவிலான பதிலும் இந்த கட்டுரையின் கீழே இணைத்து உள்ளேன்.

மாவட்ட வருவாய் அலுவலரின் பதில் கடிதம்


இப்படிக்கு:
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில்முனைவர்.
9841665836.

(குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#தமிழ்நாடு #வீட்டுவசதி #வரியம் #நிலஎடுப்பு #கிரயபத்திரம் #பவர் #பஞ்சாயத்து #approved #dtcp #article #பஞ்சமநிலம் #பூமிதானநிலம் #அனாதீனநிலம் #நிலஅளவை #ஜமீன்நிலம் #அடமானம் #சுவாதீனம் #சான்றிதழ் #சார்பதிவகம் #பத்திரபதிவு  #வருவாய் #நிலம் #சென்ட் #மேல்முறையீடு #நஷ்டஈடு







Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்