எதற்காக ஜாமீன் கடன் பத்திரம் (Deed of Indematy ) போடப்படுகிறது?



1.ஒரு சொத்தை வாங்கும்போது அதன் கிரயப்பத்திரத்தை நாம் எழுதுகிறோம். அந்தக் கிரயப்பத்திரம் உண்மையில் ஒப்பந்தச் சட்டம் சொத்து பரிமாற்றச் சட்டம் வாரிசு உரிமைசட்டம், உயில் சட்டம் போன்ற பல சட்டங்களை இணைத்து எழுதப்படுகின்ற ஷரத்துகள் எல்லாம் கிரயப்பத்திரத்தில் உள்ளது.

2.ஜாமின் கடன் பத்திரம் என்பதும் ஒரு கிரயப் பத்திரத்தில் இறுதியாக நாம் எழுதுகிறோம். என்னவென்றால் இந்த சொத்தில் எதிர்காலத்தில் ஏதாவது வில்லகங்கள் வந்தால் நானே முன்னின்று தீர்த்துவைக்கிறேன் என்ற உறுதி மொழியை சொத்தை விற்பவர் கொடுக்கின்றார். அதுதான் ஜாமீன் கொடுக்கும் முறை இந்த ஜாமின் கொடுக்கும் முறையை நாம் பொதுவாக கிரயப்பத்திற்குள்ளேயே எழுதிவிடுகிறோம்.

3.இருந்தாலும் நீங்கள் வாங்கப்போகின்ற சொத்தில் ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. தீவிபத்தில் கருகிவிட்டது உண்மையிலேயே தொலைந்துவிட்டது என்று சொன்னால் அவர் உண்மையைத்தான் சொல்கிறார் நம்பும்  பட்சத்தில் மேற்படி சொத்தை நீங்கள் கிரயம் வாங்குகிறீர்கள் ஒரு அச்சம் வருகிறது.
4.அப்படி நீங்கள் நம்பி வாங்கினாலும் உங்களுக்கு ஒரு சட்ட பாதுகாப்பு, சட்ட அந்தஸ்த்து உள்ள ஆவணம் வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் நாம் (Deed of Indematy) போட்டுக் கொள்ளலாம்.

5.இந்த ஜாமின் கடன் பத்திரத்தில் மேற்படி சொத்தை நான் இந்த தேதியில் இந்த ஆவண எண்ணாக உங்களிடம் இருந்து கிரயம் பெறுகிறேன். எதிர்காலத்தில் இந்த சொத்தில் ஏதாவது வில்லகங்களோ உரிமைப் பிரச்சனைகளளோ உரிமைக் கூறுகளோ வந்தால் என் சொந்த செலவில் தீர்த்துக் கொடுகிறேன். அப்படி இல்லை என்றால் அதற்கான இழப்பீட்டுத்தொகையை நான் பொருப்பேற்கிறேன் என்று எழுதிக்கொள்ள வேண்டும்.

6.கள நிலவரத்தை ஒரு சொத்தை ஒருவர் கிரயம் கொடுக்கும் போது கிரயப்பத்திரத்திற்கு பதிலாக முத்திரைத்தாள் செலவை குறைப்பதற்காக பொது அதிகார பத்திரம் எழுதிக்கொள்வார்கள்.

7.பொது அதிகாரப்பத்திரத்தில் பொது அதிகாரம் எழுதிகொடுப்பவர் கைமாறி எதுவும் பணபரிமாற்றம் எதுவும் நடைபெறவில்லை என்று எழுதிகொடுப்பார்கள் பொது அதிகாரம் எழுதிக்கொடுப்பவர் உண்மையில் கைமாறு பெற்றிருப்பார் அதற்குத் தனியாக பணப்பற்று ரசீதும் பதிவுசெய்யாமல் எழுதிக்கொள்வார்கள் இப்பொழுது பொது அதிகாரம் எழுதி கொடுப்பவருக்கு பொது அதிகாரம் எழுதி வாங்கியவர் சட்டவிரோதமாக தன்  சொத்தை வைத்து ஏதாவது செய்துவிட்டால் சொத்திற்காக வரியை ஏமாற்றுதல் சொத்தை இரண்டு பேருக்கு விற்றுவிடுதல் அல்லது ஒருவரிடம் அடமானம் போட்டும் வேறு ஒருவரிடம் விற்றுவிடுவதும் போன்ற நுன்மான் நுழைபுல தவறுகளை அதிகார முகவர் என்ற முறையில் இவர் செய்துவிட்டால் அதிகாரம் எழுதிக்கொடுத்தவர் அதாவது முதல்வர் சட்ட ரீதியாக குற்றவாளியாகிறார். இது போன்ற விஷயங்களை தவிற்ப்பதற்கு பொது அதிகாரம் கொடுத்தவர் வாங்கியவரிடம் ஜாமீன் கடன்பத்திரம் போட்டுக் கொள்ளலாம்.

8.ஜாமீன் கடன்பத்திரம் போட்டுக் கொண்டவருக்கு ஏதாவது பாதிப்புகள் எழுதிக்கொடுத்த நபரால் வரும் பட்சத்தில் அதனுடைய நஷ்டத்தை எழுதிக்கொடுத்தவரே திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை அனுகினால் வழக்குச் செலவோடு தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.


இப்படிக்கு:
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில்முனைவர்.
9841665836.

(குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) 



இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#ஜாமின் #கடன் #பத்திரம் #கிரயபத்திரம் #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா #சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே #ஜப்தி #பத்திரம்பதிவு #கிரயம் #பவர் #செட்டில்மெண்ட்
#registration  #patta  #chitta #stamppapers #fmb  #saledeed  #registration #Documentation #Ec #plots #Paranjothi_Pandian #millioner_mind #attraction_marketing  #entrepreneur  #realestate #Realestate_consultant #Realestate_analyst #bond #deed  





Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்