சமத்துவபுர வீடுகளை வாங்கலாமா? தெரிந்து கொள்ள வேண்டிய 15 செய்திகள்!

                                            


1) தமிழகம் முழுவதும் ஊர் சேரி என இரண்டாக பிரிந்து கிடப்பதும் தீண்டாமை வேறுபாடு ஏறத்தாழ்வு என மனிதர்களை பிரிக்கும் சைக் எண்ணங்கள் வீரியமிகுந்து இருக்கின்றதை குறைக்க மாற்று மருந்து (Antidote) திட்டமாக சமத்துவபுரம் திட்டத்தை மாவட்டந்தோறும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உருவாக்கினார்கள்.

2) இந்த சமத்துவபுரம் அமைந்த இடங்கள் எல்லாம் பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்களாக இருக்கும்.அதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேர்ந்தெடுத்து நத்தம் நிலமாக மாற்றுவார்கள்.

3) சமத்துவபுரத்திற்கு ஒப்படைதாரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நத்தம் நிலவரிதிட்டம் செய்து நத்தம் புலப்படம் நத்தம் தூய அடங்கல் பதிவேடு அரசு உருவாக்கும்.

4) மேற்படி நத்தம் நிலத்தை கிராமங்களில் வீட்டுமனை ஒப்படை செய்வது விஷயமாய் கொடுக்கப்படும் நமூனா பட்டா பயனாளிகளுக்கு கொடுக்கப்படும்.
5) சமத்துவபுரம் வீடுகளை பொறுத்தவரை அதன் அடிமனை ஒப்படை பட்டா விதிகளின் படி கொடுக்கப்படுகிறது.

6) பல சமத்துவபுரங்களில் ஒதுக்கபட்ட இடங்களை நத்தம் கிராம கணக்கில் உடனடியாக ஏற்றிவட்டனர்.சில இடங்களில் நத்தம் கணக்கில் மாற்றாமால் அப்படியே சர்க்கார் புறம்போக்காகவே வைத்துள்ளனர்.

7) அடிமனைமேல் கட்டபட்டுள்ள வீடுகளை பொறுத்தவரை அரசு மானியம் மற்றும் ஒதுக்கபட்ட தொகையை வைத்து வீடு கட்டி விடுகிறது.

8) அந்த வீட்டை மற்றும் இடத்தை அந்த அந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்திறகு ரூபாய் 10 ஆயிரத்திற்கோ 15 ஆயிரத்தற்கோ அடமான கடன் பத்திரம் போட்டு ஒரு 10 வருஷத்தற்கோ 15 வருஷத்தற்கோ மாதாந்தர தவணையாக பயனாளிகள் செலுத்த வேண்டும் என நிம்பந்தையுடன் தான் சமத்துவபுரவீட்டின் சாவி பயனாளிகளுக்கு ஒப்படைக்கபடுகிறது.

9) சரி இந்த சமத்துவபுர வீட்டை வாங்கலாமா விற்கலாமா என்றால் அதில் இருக்கின்ற கண்டிசன்கள் மீறாபடாமல் இருந்தால் வாங்கலாம் விற்கலாம்.

10) அடிமனை பயனாளிக்கு ஒப்படை பட்டா மூலம் வழங்க படுவதால் அந்த ஒப்படை பட்டாவில் பத்தாண்டுகளுக்கோ இருபது ஆண்டுகளுக்கோ யாருக்கும் விற்க கூடாது என்று கண்டிசன் இருந்தால் அந்த காலத்திற்கு பிறகுதான் விற்க வேண்டும் வாங்கவேண்டும்.

11) அதேபோல அந்த மனையும் வீடும் கூட்டுறவு வங்கியில் அடமானத்தில் இருப்பதால் அங்கு கட்ட வேண்டிய முழுபணத்தையும் கட்டி பதிவுத்துறையில் கேன்சல் பத்திரம் போட வேண்டும்.

12) பல இடங்களில் அடிமனை ஒப்படை  கண்டிசன் மீறபடுகிறது அதாவது பத்தாண்டுக்கு விற்க கூடாது என்றால் அதனை மீற கூடாது ஆனால் பல இடங்களில் அடிமனைக்கான ஒப்படை கண்டிசன் மீறபடுகிறது.

13) பல சமத்துவபுரங்கள் நத்தம் பட்டா கொடுத்து இருப்பதால் அதற்கு முன் கொடுத்த ஒப்படை கண்டிசன்களை மக்கள் சார்பதிவாளரும் மறந்துவிடுகிறார்கள்.

14) சமத்துவபுரத்தில் இருக்கின்ற வெறும் அடமானம் மட்டும் ரத்து செய்துவிட்டு வேறு  கிரயம் செய்துவிடுகிறார்கள்.இவையெல்லாம் விதி மீறல்கள் ஆகும்.

15) சமத்துவபுர வீடுகளை வாங்கலாம் அவை ஒப்படை கண்டிசன்களை மீறி இருக்ககூடாது கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் இருக்கும் அடமானத்தை இரத்து செய்து இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளல் வேண்டும்.

இப்படிக்கு:
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில்முனைவர்.
9841665836.

(குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்டநிலம் உங்கள் எதிர்காலம்புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#Antidote #கூட்டுறவு  #சமத்துவபுரம்  #ஒப்படைபட்டா #ரியல்எஸ்டேட் #எதிர்மறைசுவாதீனம் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா #சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே
#Dtcp  #approved #consultancy #patta #village #map #Fmb #praptham #realtors #entrepreneur   #plotpromoters #builders #land_Identification  #Land-acquisitionissues #landvaluation  #land_registration #registration  #patta  #chitta #stamppapers #fmb  #saledeed  #registration

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்