ஆழமாக சர்வே பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 29 செய்திகள்..

1)சர்வேக்கள் பல வகைபடும் அவை பூமியின் கீழடுக்கில் உள்ள (lower crust) இல் இருக்கிற பலவிதமான பொருட்களை ஆய்வு செய்வதற்கும்(geological survey )கனிமவளங்கள் தாதுக்கள் நிலக்கரி எரிவாயு போன்றவற்றை ஆய்வு செய்வதற்கும்(mine survey )         

2)இராணுவத்திற்காக தாக்குதல் எதிர்தாக்குதல் பாதுகாத்தல் புள்ளிகளை குறித்தல் சர்வே செய்வதும்,தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பழங்கால நினைவு சின்னங்களை கண்டுபிடிக்கவும்
சர்வேக்கள் உதவிகரமாக இருக்கிறது.

3)மேற்கண்ட சர்வேக்கள் எல்லாம் மிக முக்கியமானது ஆனால் நிபுணர்களுக்கு மட்டும் புரிய கூடியது சாரதாரண மக்களுக்கு இவ்வளவு பின்புலம் இந்த சர்வேக்களில் இருக்கிறதா என்று தெரியாது.
4)நம்ம மக்களுக்கு தெரிந்ததைல்லாம் நம்ம வயற்காட்டை நிலத்தை அளக்க வரும் சர்வேயர் மற்றும் சர்வே தான்.அந்த சர்வேக்கு பெயர் வருவாய்துறை நிலதீர்வைக்கான சர்வே என்று பெயர்.

5)சர்வே (Survey)என்பது ஒரு அற்புதமான கலைஅவை நிலத்தையோ வானத்தையோ கடலையோ படுக்கையான நீளத்தை அகலத்தை பலவிதமான கணிதமுறையில் பலவிதாமான உபகரணங்கள் கொண்டு அளப்பது ஆகும்.
6)அதுவே செங்குத்தளவு உயரங்களை பல்வேறுவிதமான உபகரணங்களை கொண்டு பல்வேறுவிதமான கணிதமுறையில் அளப்பதும் சர்வே தான் ஆனால் அதற்கு வேறு தொழிலநுட்ப பெயர் லெவலிங் (Levelling)என்று பெயர்.

7)மேற்படி சரவே மற்றும் லெவல்லிங் முறையில் அளப்பதை ஒரு கைக்கு அடக்கமான தாளில் வரைபடம் ஆக உருவாக்கி தருவதே சர்வேவின் குறிகோள் ஆகும்.

8)மேற்படி வரைபடத்தை பிளான் என்றும் மேப் என்றும் நாம் அழைக்கிறோம் மிகச்சிறிய அலகுகளில்(அளவுகளில்)மினியேச்சர் செஞ்சு வரைபடம் வரைந்தா அதற்கு பெயர் மேப்(Map).கொஞ்சம் பெரிய அலகுகளில்(அளவுகளில்)வரைபடம் உருவாக்கினால் அதற்கு பெயர் பிளான்.மேப்பிக்கு நம்ம இந்திய வரைபடத்தையும் பிளானிற்கு நமது டிடிசிபி அப்ரூவடு பிளானையும் சொல்லலாம்.

9)சர்வேவை இரண்டு அடிப்படைகளாக பிரிக்கலாம்

a) புவிசார் சர்வே (Geodetic Survey)

b)பிளேன் சர்வே (PlaneSurvey)

10)geodetic survey அதிகபட்சமாக பூமியின் மேற்பரப்பை அளப்பதும் நம்ம தோட்டத்துக்கு எப்படி நாலு மூலையிலும கல்லு போட்டு மார்க் செஞ்சி வைக்கிறோமோ அது போல உலகத்தையே அங்கே அங்கே ஒரு மார்க் செஞ்சு வைக்கிறாங்க.அதுக்கு கன்ட்ரோல் ஸ்டேசன் என்று பெயர்.

11)சர்வே இல் நிறைய ஸ்டேசன் என்ற வார்த்தை வரும் அது நம்ம ஊரு போலிஸ் ஸ்டேசன் போல நினைக்க வேண்டாம்.சர்வேயில் ஸ்டேசன் என்றால் பாயிண்ட் என்று எடுத்து கொள்ளலாம்.
 
12)இந்த சர்வே டோபோகிராபிகல் சர்வே(topographical survey) மைன் சர்வே (mine survey) என்ஜினீரிங் சரவே(Engineering Survey)கடாஸ்டரல் சரவே (cadestal survey) போன்றவற்றிறகு இந்த முறை பயன்படுகிறது.

13)இந்த சரவ்வேயில் படிப்பவரகள் சர்வே ஆப் இந்தியா அரசு நிறுவனத்தில் பணிபுரியலாம்.இந்த சர்வேக்களை சர்வே ஆப் இந்தியாதான்(survey of India) நிறுவனம்தான் மேற்கொள்கிறது.

14)இந்த சர்வேயில் இந்தியா மற்றும் உலகம் முழுக்க 500 லிருத்து 1000 கி.மீ தூர இடைவெளியில் ஒரு கன்ட்ரோல் ஸ்டேசன் இருக்கிறது.இவை உலகம் மற்றும் இந்தியா முழுக்க வலைபின்னல் போல இருக்கிறது என்று புரிந்து கொண்டால் போதுமானது.

15)பிளேன் சர்வே (plane survey)சுமார் 200 கி மீ தூரத்திற்குள் அளக்கபடுகிற சர்வே ஆகும்.இவை பொதுபணிதுறை,நெடுஞ்சாலைதுறை,இர்யில்வே துறைகளில் பயன்படுத்த படுகிறது.

16)மேற்கண்ட இரண்டு சர்வேவும் முக்கோணவியல் கணிதம் அடிப்படையில்தான் இயங்குகிறதுஆனால் geodetic survey யில் கோள முக்கோண கணக்குகள் (spherical triangle,) பிளேன் சர்வேயில் தட்டை முக்கோண கண்குகள்(plane survey )

17)ஏன் கோள முக்கோணம் என்றால் உலகமே ஒரு கோளம் தான் உலகத்தின் மேற்பரப்பு வட்ட வளைவுகளாக தான் இருக்கிறது அவைதான் டிகிரி(கோண) பாயிண்டுகளாக அலகிடபட்டு அளக்கபடுகிறது.எனவே அது கோள முக்கோணவியல்.

18)பிளேன் சர்வேயில் (plane survey)பூமியல் நீளமான மேற்பரப்பு அதில் அளவிடுவது தட்டை முக்கோணவியல் ஆகும்.
அதில் டிகிரி பாயிண்டுகளோ கிடையாதுஇது இரண்டு புள்ளிகளுக்கு இடையேயான நீளத்தை அளக்க இந்த கணக்கு முறை பயன்படுத்தபடுகிறது.

19)சர்வேயில் மொத்தம் மூன்று புலம் (Filed) இருக்கிறது.வானத்தில் இருக்கிற நட்சத்திரகூட்டங்களை சர்வே செய்து வரைபடம் தயாரிப்பது Astronomical survey என்று சொல்வார்கள். இந்த சர்வேயில் புலம் (filed )ஆகாயம் ஆகும்.

20)கடலின் மேற்பரப்பு ,ஆழம் எண்ணெய் வள ஆராய்ச்சிக்காக கடலில அளந்து வரைபடம் தயாரிப்பது Hydrographic Surveys என்று சொல்வார்கள் இதில் புலம்(Filed) நீர்.

21)பூமியின் மேற்பரப்பை அளந்து காடு மலை நிலங்கள் என சர்வே செய்வது வரைபடம் தயாரிப்பது land surveys என்று சொல்வார்கள்இதில் புலம்(filed) நிலம்.

22)சர்வே வை முக்கோணவியலில் அளந்தால் கோள முக்கோணமோ அல்லது தட்டை முக்கோணமோ அவை triangulation survey என்றும் வெறும் நீளவாக்கு (வரிசை பாயிண்டுகிளாக)மட்டும் அளந்தால் traverse survey என்றும செல்லுவர்

23)சர்வேயில் காம்பஸை பயனபடுத்தினால் காம்பஸ் சர்வே (compass survey)என்றும் செயினை பயன்படுத்தினால் செயின் சரவே chain survey என்றும் தியோடலைட் என்ற கருவியை பயனபடுத்தினால் theodalite survey என்றும்

24)மக்களுக்கு பயன்படும் நிலத்திற்கான சர்வேவை இரண்டாக பிரிக்கலாம்
a)தல சர்வே (Topographical Survey)
b)வருவாய்துறையினருக்கான நிலதீர்வைக்கான சர்வே

25)ஏரிகள்,குளங்கள்,நீர்வழிபாதைகள்,மலைகள்,குன்றுகள்,இருப்புப் பாதைகள்.சாலைகள் கோவில்கள்.இடுகாடுகள்,பூங்காக்கள் ஆகியவற்றை எல்லாம் எங்கெங்கே இருக்கிறது என்பதை அதனுடைய அமைவிடத்தை தரக்கூடிய நிலபடம் தான் டோபோஸ்கெட்ச் பொதுவாக நாம் அதனை டோபோ ஸ்கெட்ச்என்று சொல்வோம்

26)சந்தன கடத்தல் வீரப்பன் அவர்களைதேடுவதற்கு சத்தியமங்கலத்தை சுற்றி இருக்கின்ற காடுகள் மற்றும் கிராமங்களின்தல வரைபடம்(டோபொ) தமிழக சர்வே துறையினரிடம் இந்திய சர்வே துறையினரிடமும்  காவல் துறையினர் பெற்று பயன்படுத்தினர் மேலும்  தல வரைபடம் எல்லாவிதமான ராணுவ காரியங்களுக்கும் எல்லைகளை பாதுகாக்கும் படைகளுக்கும் துணை இராணுவ படைகளுக்கும் பயன்படுகிறது.

27)கிராம தல வரைபடம் A0 சைசில் இன்று வரை சேப்பாக்கம் நில அளவை அலுவலகத்தில் அதிகமாக விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது(சென்னைக்கு வெளியே வேறு மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு கிராம தல வரைபடம் எடுத்து கொடுக்கும சேவையை எனது குழுவினர் செய்து தருகிறாரகள்.வாய்ப்பு இருப்பவரகள் 9841665836 க்கு தொடர்பு கொள்ளவும்).

28)அடுத்து வருவாய் துறையில் நிலங்களை நஞ்சை புஞ்சை மானாவாரி தரிசு என்று பிரித்து அதனுடைய மண் வளத்தையும் பிரித்து சிறிய முக்கோன அளவுகளாக அல்லது பெரிய பெரிய முக்கோன அளவு பாகங்களாக நிலங்களை சர்வே செய்து பிரித்து கல் போடுவதும் மேலும் நில வரி தீரவைக்காக தண்ணீர் பாசன அடிப்படையில் வரி விதிப்பதும்  நிலதீர்வை சர்வே ஆகும்.

29)மேலும் தமிழகத்தின் நில தீர்வை சர்வேயில் தல சர்வேயின் விவரங்களையும் கிளப் (Club)செய்து இரண்டையும் ஒருங்கிணைத்து மிக அருமையான கிராம வரைபடங்களை நமது சர்வே துறை உருவாக்கியிருக்கிறார்கள்.

தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு );சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இப்படிக்கு :
பிராப்தம் குழு.

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#geological-survey #mine survey #plane-survey #சர்வே #வருவாய்துறை #புவிசார்சர்வே #geodetic-survey #பிளேன்சர்வே #planeSurvey #topographical-survey #theodalite-survey #astronomical #survey #triangulation #கிராமவரைபடங்கள் #புலம் #டிடிசிபி #அப்ரூவடு #சர்வேயர் #நிலம் #land #revenue

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்