மோசடி பத்திரங்களை தடுக்க வருவாய் பதிவுத்துறை தவறான பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.



ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலோ-இந்திய பதிவு சட்டத்தில் கீழ் நடந்த அனைத்து கிரயபத்திரங்களும் மற்றும் பிற பத்திரங்களும் அந்தந்த சட்ட எல்லைக்குள்ள நீதிமன்றத்தின்  திவான் அதாலத் (தற்போது பதிவாளர்) கீழ்தான் நடந்தது.

அதன் பிறகு அதிக வேலை பளு சீரன பதிவு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்திலிருந்து அதனைப் பிரித்து பதிவுத்துறை என்று தனியாக ஒரு துறை  உருவாக்கி அதில் பதிவு நடவடிக்கைகள் எல்லாம் செய்யபட்டது

பதிவு செய்யும் நடவடிக்கைகள் மட்டும்தான் செய்யவேண்டும்.பதிவிற்கு வரும் ஆவணங்களில் எழுதி கொடுப்பவருக்கு நில உரிமை இருக்கிறதா என்று ஆய்வெல்லாம் செய்ய சார்பதிவாளருக்கு உரிமை இல்லை
மற்றும்  மோசடியாக பத்திரங்கள் செய்து விட்டால் அதனை இரத்து செய்கின்ற அதிகாரம் பதிவுதுறைக்கு கிடையாது என்ற இந்த இரண்டு கட்டபாடுகளை விதித்து பதிவு துறையை பதிவு வேலைகளை மட்டும் செய்யும் இயங்குதல் நடவடிக்கை மட்டுமே செய்ய வேண்டும் தீர்மானிக்கின்ற உரிமை எல்லாம் நீதிமன்றமே வைத்து இருந்தது

அதற்கு காரணமும் இருந்து அந்த காலத்தில் ஜமீன் நிலம் இனாம் நிலம் மற்றும் பல நில உரிமைகள்  மேல்தட்டு மக்களின் கட்டுபாட்டில் இருந்தது அதனால் தீரமானிக்கிற உரிமைகள் மேலேயே வைத்துகொண்டாரகள் ஆனால் நிலைமை தற்பொழுது அப்படி இல்லை எல்லா ஆதிக்க நில உரிமையும் ஒழிக்கபட்டு விட்டது இப்பொழுது பாமரனும் கல்வி கற்று வெளிநாடு போய் சம்பாதித்து நிலம் வாங்கி வைத்துகொள்கிறார்கள்.அவர்கள் மோசடி பத்திரங்களால் பாதிக்கபடாமல் இருக்க மேற்சொன்ன இரண்டு கட்டுபாடுகளையும் தளர்த்தி பதிவு துறைக்கு அந்த சட்ட உரிமையை அளிக்க வேண்டும்

ஆள்மாறாட்டம் செய்த பத்திரங்கள்,உரிமை இல்லாத நபர்கள் எழுதி கொடுக்கும் பத்திரங்கள்,தவறான ஆவணங்கள் தாக்கல் செய்து செய்யபட்ட பத்திரங்கள்,போர்ஜரி செய்யபட்டு உருவாக்கபட்ட பத்திரங்கள் ஆவணங்கள் மூலம் தாக்கல்செய்த பத்திரங்கள் இப்படி பல தவறான பத்திரங்களை பதிவின் போது கூராய்வு செய்கின்ற உரிமையும் பத்திரம் பதிந்து விட்டால் விசாரித்து அதனை ரத்து செய்கின்ற உரிமையையும் நீதிமன்றமே இன்றுவரை வைத்திருக்கிறது

தற்பொழுது ஆவணங்களை திருத்துபவர்கள் ஆவணங்களை உருவாக்குபவர்கள் போலியாக உருவாக்குபவர்களை  சார் பதிவாளர் அல்லது பாதிப்பு அடைந்தவர்கள் காவல் துறையில் குற்ற வழக்கில் கிரிமினல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது அப்படி இருந்தாலும் குற்றம் செய்தவர்களுக்கு தண்டணை மட்டுமே காவல்துறை  வழங்கும் அவரகளால் பதியபட்ட ஆவணங்கள இரத்து செய்ய வேண்டும் என்றால் நீதிமன்றத்தைதான் நாட வேண்டி இருக்கிறது

அதுவே வருவாய்த்துறை ஆவணங்களில் போர்ஜரி செய்தல்,வருவாய்துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து சதித்திட்டம் செய்து போலி ஆவணங்கள் உருவாக்கல், நத்தம் பட்டாவை திருத்தினார்கள் என்றெல்லாம் எழுகின்ற புகார்களை வருவாய்துறையில் இருக்கின்ற ஆர் டி நீதிமன்றம் விசாரணை மூலம் கொடுக்கப்பட்ட பட்டாவை விசாரித்து அதனை தேவைப்பட்டால் நத்தம் செய்யுமளவிற்கு வருவாய்துறையினருக்கு அதிகாரம் இருக்கிறது

அதுபோல மோசடி பத்திரங்கள் ஆகியவற்றை விசாரித்து ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவு துறைக்கே கொடுப்பது பொதுமக்களுக்கு மிகவும் நல்ல பயனுள்ளதாக அமையும் பதிவு துறையில் இதுபோன்ற மோசடி  ஆவணங்களை விசாரிப்பதற்கு தனி விசாரணை நீதிமன்றம் பதிவுதுறையிலேயே அமைக்க வேண்டும்

இந்திய நீதித்துறைக்கு ஏற்கனவே லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்க படாமல் நிலுவையில் இருக்கிறது .அதிலும் காலந்தாழ்த்தி காலம்தாழ்த்தி வாதி பிரதிவாதிகள் இறந்தே விடுவார்கள் அதன பிறகு தான் நீதி கொடுக்கவேண்டும் என்றே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் நீதி துறையினர்
 அப்படி இருக்கும் பட்சத்தில்மோசடி பத்திரத்தால் பாதிப்படைந்த ஒரு நபர்  அதனை இரத்து செய்ய சொல்லி பரிகாரம் கேட்க வேண்டுமென்றால் குடிமையியல் நீதிமன்றம் சென்றுதான் தன் சேமிப்பு பணத்தை எல்லாம் செலவு செய்து காலம் தாழத்தி அவர் உடலில் உணரவில் தெம்பு குறைந்ததற்கு பிறகுதான நியாயத்தை பெறவேண்டும் என்று சொன்னால் மோசடி பத்திரத்தால் பாதிக்கபட்டவருக்கு கிடைப்பது நீதி அல்ல !! அது ஒரு தண்டணை
எனக்குத் தெரிந்து சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் 1970களில் போடப்பட்ட கணபதி சிண்டிகேட் என்ற மனைப் பிரிவில் நிறைய மோசடி பத்திரங்கள் போலி ஆவணங்கள்  காப்பி ஆப்  டாகுமெண்ட்  வைத்து டபுள்அதில் உருவாக்கி இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார்
அதில் ஒரு மனைக்கு மோசடியாக ஒரு ஆவணம் தயாரித்து அம்மனையை ஆக்கிரமித்து வைத்து இருந்தனர் அதன்பிறகு 1970களில் அம்மனையை வாங்கிய உண்மையான உரிமையாளர்களின் வாரிசுகள் ஒரிஜினல் பாத்திரங்களுடன் நேரடியாக இடத்தை வந்து பார்த்த பொழுது இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது என்று தெரிந்து காவல்துறையில் மோசடி ஆவணம் வைத்திருந்தவர் மேல் புகார் கொடுத்தனர் போலி ஆவணம் வைத்திருந்தவர் காவல்துறை விசாரணைக்கு பயந்து வர மறுத்து நேரடியாக நீதிமன்றம் சென்று தான் வைத்திருக்கின்ற போலி ஆவணங்கள் எல்லாம் வைத்து விளம்புகை பரிகாரம் கேட்டு ஒரு வழக்கை உடனடியாக பதிந்து  விட்டனர்
அதாவது போலி ஆவணம் வைத்து இருப்பவர் தன்னுடைய பத்திரம் உண்மை என்றும் ஒரிஜினல் ஒனருடையது போலி  போலி
  சொல்லி வழக்கு போட்டு விட்டு இனி இந்த விஷயம் கோர்ட்டில் இருப்பதால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க கூடாது என்று சொல்லி காவல்துறை புகார் மனு விசாரணை மோசடி ஆவணம் தயாரித்தவருக்கு எந்த வித சேதமும் இல்லாம்ல் மூடபட்டது.

சரி நீதிமன்றம் சென்றாலும் மோசடி ஆவணம் செய்தவர் மாட்டதானே போகிறார் என்று நீங்கள் நினைக்கிறீரக்களா? கண்டிப்பாக மாட்ட போவது இல்லை நீதி மன்றத்தில் காலம் தாழ்த்தி காலம் தாழ்த்தி வழக்கை பல ஆண்டுகளாக வேண்டுமென்றே இழுத்து (வழக்கறிஞர் துணையுடன்) உண்மையாக பாதிக்கப்பட்ட மக்கள் மனம் நொந்து அந்த பிரச்சினைக்குரிய சொத்தை கைவிட வேண்டிய நிலையிலும் அல்லது ஏதாவது ஒரு சமாதான பேச்சுவார்த்தையில் ஒரு குறைந்த நஷ்ட ஈடு தொகையை பெற்றுக் கொண்டு அந்த சொத்தை விட்டு வெளியேறுகின்ற நிலையில் தான் தற்சமயம் வரை  நடக்கிறதே தவிர மோசடி பத்திரங்களால் நீதிமன்றம் சென்று நீதி பெற்றுவிட்டார்கள் என்ற நிலை மிகவும் சொற்பமே!!
மேலும் மோசடி பத்திரங்களுல் ஈடுபட்டவர்கள் காவல்துறையின் கெடுபிடிகள் காவல்துறையின் கிரிமினல் வழக்குகளுக்கு பயந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தைரியமாக போலி ஆவணங்கள் தயாரித்தவர்கள் தானாகவே நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு போடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்
இறுதியாக நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால் மோசடி  பத்திரங்களால்  பாதிக்கப்பட்ட ஒரு நபர் எடுத்தவுடன் நீதிமன்றம் சென்று தாமதிக்கபட்ட நீதி மறுக்கபட்ட நீதி  அதனால் அவருக்கு இரட்டை தண்டணை எனவே அதனை தவிர்க்க பதிவு துறையிலேயே பரிகாரம் தேடிக் கொள்வதற்கு  மோசடி பத்திரங்களை விசாரணை செய்து இரத்து செய்யும் அதுகாரத்தை பதிவு துறைக்கு வழங்குதல் வேண்டும்.

இப்படிக்ககு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழத்தாளர்/ரியல் எஸ்டேட் பயிற்சியாளர/ தொழில் முனைவர


 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3



#மோசடி #பத்திரம் #கிரயபத்திர #நீதிமன்ற #பதிவுத்துறை #சார்பதிவாள #ஆவணங்கள் #காவல்துறை #போலி #ஆவணம் #நஷ்டஈடு #காப்பிஆப்-டாகுமெண்ட்  #forgery deed  #attorney #court #registrar #defendant #documents #police #duplicate #register

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்