வாருங்கள்!! உங்கள் கிராமத்தை முழுசா மெகா சர்வே செய்யலாம்!!!(தொடர் கட்டுரை-1)

1)எப்படி உங்கள் கிராமத்தை அல்லது நீங்கள் நிலங்கள் வைத்து இருக்கும் கிராமத்தை முழுவதும சர்வே செய்து புல எண் வாரியாக பிரித்து இருப்பார்கள் எப்படி கிராமத்தில் உள்ள ஏரி,குளம்,மலை எல்லாம் எங்கே எங்கே இருக்கிறது என்று குறித்து இருப்பார்கள்




எப்படி கிராமத்தை அளந்து கண்டங்களாக அதனைப் பிரித்து இருப்பார்கள்?
2)போன்ற விவரங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? இவையெல்லாம் புரிந்தால் சர்வே பற்றிய விவரங்களும் உங்கள் நிலங்களில் உள்ள சர்வே சிக்கல்களும் இருந்தால் அதை எப்படி தீர்க்கலாம் என்ற ஐடியாவும் சர்வேயர் உங்களுடன் பேசும் பொழுது அல்லது வருவாய் துறையினருடன் பேசும்பொழுது எளிமையாக நிலசிக்கல்களை விளங்கி கொள்வதற்கும் அது சம்மந்தமாக மனு எழுதுவதற்கும் அந்தச் சிக்கல்களை தீர்ப்பதற்கும் மிகவும உதவிகரமாக இருக்கும்

3)எனவே கற்றுகொள்ள கூடாது என்று மறைக்கபட்டு கற்று கொடுத்தாலும் புரியகூடாது என்ற படி அதிக தொழில்நுட்ப வாரத்தைகளை பயன்படுத்தி எழுத பட்டு இருக்கும் சர்வே பற்றிய செய்திகளை நான் உங்களுக்கு எளிமையாக புரிகின்ற மொழியில் புரிகின்ற எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.

4)இப்பொழுது நாம் இருப்பது திருப்பூர் மாவட்டம், புளியம்பட்டி வட்டம்,மொண்டிபாளையம் கிராமம் என்று வைத்துக்கொள்வோம் இந்த கிராமத்தை ஒட்டுமொத்தமாக அளந்து அதில் புல எண் வாரியாக இடங்களை பிரித்து நில தீர்வை வாங்குவதற்காக நிலங்களை நஞ்சை புஞ்சை மானவாரி என வகைபடுத்தி தீர்வை வரிகளை நிர்ணயித்து அதனை யெல்லாம் சர்வே எண் வாரியாக வரிசை படுத்தி ஒரு ஆவணத்தை நாம் உருவாக்க போகிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.

5) மேலும் அந்த நிலதீர்வை ஆவணத்தின்படியும் தோராயமாக உருவாக்கி இருக்கிற வரைபடத்தின் படியும் கிராம மக்கள் உபயோகப்படுத்தி கொண்டு இருக்கிற அல்லது அனுபவிக்கின்ற இடத்தை பூமியிலே பிரித்து கற்கள் நட்டு கொடுக்கின்ற வேலையை தான் நாம் இப்பொழுது செய்யபோகிறோம்.இப்படி செய்கின்ற சர்வேக்கு தான் நிலத் தீர்வை சர்வே என்று சொல்கிறாரகள்

6) நாம் இப்பொழுது சர்வேக்காக நின்று கொண்டு இருக்கிற மொண்டிபாளையம் கிராமத்தில் இதுவரை ஒரு சர்வே கூட நடக்கவில்லை (நமது கற்பனைதான் )என்று வைத்துக்கொள்வோம். அதாவது நத்தம் நிலவரிதிட்ட சர்வே கிராமத்தில் உள்ள ந்த்தம் இடங்களுக்கு நடக்கவில்லை
பிரிட்டிஷ் அரசாங்க காலத்தில் செய்யபட்ட செட்டில்மெண்ட் சர்வே ஒரு நடக்கவில்லை 1980 களில் நடந்த மெகா சர்வே ஆன யுடீஆர் சர்வே வும் நடக்கவில்லை.அப்படியே மொட்டையா இருக்கிறது கிராம்ம் எந்த வரை படமும குறியீடும் இல்லாமல் என்று நாம் நினைத்து கொள்கிறோம்

7) ஆக இந்த மொண்டிபாளையம் கிராமத்திலேயே எந்தவிதமான சர்வேவும் நடக்காத்தால் நிலங்களுக்கு புல எண்கள் எல்லாம் கொடுக்காமல் அப்படி அப்படியே அந்த காலத்துல நிலங்களை எப்படி வெறுமனே பயன்படுத்தினார்களோ அது போல
நிலங்களை இப்பொழுதும் கிராம மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.விவசாயம் செய்கிறார்கள் பயிர் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் இதுபோன்ற காலகட்டத்தில் சர்வே எண் இல்லாமல் மண் வயணம் பிரிக்காமல் எப்படி விவசாய நிலத்திற்கு வரி வாங்குவார்கள்
என்றால் பைமாஷ் நம்பர் முறையை வைத்து நிலதீர்வையை வசூல் செய்வார்கள்

8)இங்கு ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும் அரசு நிலவரி காலங்காலமாக வரி வாங்குகிறது பிரிட்டிஷாருக்கு முன்பு விவசாயம் செய்யும் மக்களிடம் வரியாக விளை பொருடகளைவரியாக(பண்டமாக)வாங்கஇனார்கள். பிரிட்டிஷார் அதனை பணமாக கட்ட வைத்தனர் அப்பொழுது ஜமீன் கிராம நிலங்களுக்கு permanent settlements land records என்றும் கிராம மக்களுக்கு royal settlement records என்றும் பண்ட வரியில் இருந்து பணவரிக்கு மாற்றும் போது நிலத்தின் தீர்வைக்கான ஆவணங்களை உருவாக்கி வைத்து இருந்தனர் அந்த ஆவணத்தில் தான் பைமாஷ் நம்பர் இருக்கிறது

9)அதாவது எந்தவித சர்வே எண்ணும் அந்த கிராமத்தில் இல்லை எந்தவித வரைபடமும் புல எண் வாரியாக நாம் சரவே செய் போகும் மொண்டிபாளையம் கிராமத்தில் இல்லை ஒவ்வொரு விவசாய மக்களும் 5 ஏக்கர் 3 ஏக்கர் 10 ஏக்கர் 20 ஏக்கர் 2 ஏக்கர் 50 சென்ட் 20 சென்ட் என்ற கணக்கில் நிலங்களை அனுபவித்தும் விவசாயம் செய்து கொண்டும் வருகிறார்கள் அப்பொழுது அந்த விவசாயிகளிடமிருந்து அரசு பணவரி வாங்கும் பொழுது யார் யார் எந்தெந்த இடத்தில் எத்தனை எத்தனை ஏக்கர் அனுபவிக்கிறார்களோ அதற்கு வரி வாங்குவார்கள்

10)அப்பொழுது வரி வாங்க ஒரு அடங்கலில்
பதிவு செய்வார்கள் அப்பொழுது ஒரு வரிசை எண் கொடுப்பார்கள் அதன் பெயர்தான் பைமாஷ் நம்பர் அந்த எண் நிலத்திற்கான் எண் கிடையாது அது வரி வாங்குவதற்கான ஆவணத்தின் ஒரு வரிசை எண்.அந்த எண்ணை பயன்படுத்தியே ஆண்டுதோறும் ஒவ்வொருவருக்கும் வரி விதிக்கப்படும்
அந்த நில தீர்வைக்கான பைமாஷ் படி உள்ள அடங்கல் இப்பொழுது நம் கையில் உள்ளது

11)அதே போல ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம எல்லைகளை மிக துல்லியமாக அளந்து டோபொகிராஃபிகல் சர்வே செய்து பிரிட்டிஷ இந்தியா கிராமத்தின் பவுண்டரி களை அளந்து பெரிய பெரிய தியோடலைட் கற்களை கிராம எல்லை சுற்றில் நட்டு வைத்து இருப்பார்கள் .கிராமத்திற்கு உள்ளேயும் ஆறு ஏரி மலை போன்ற முக்கிய சர்வே புள்ளிகளை குறித்து ஒட்டுமொத்த கிராமத்திற்கு தல சர்வே வரைபடம் டோபொகிராஃபிகல் ஸ்கேட்ச்
பிரிட்டிஷ் இந்தியா உருவாக்கி இருந்தனர்

12)இந்த தல சர்வேயில் ஆறுகள் குளங்கள் மலைகள் சாலைகள் பெரிய வழிப்பாதைகள் வண்டிப் பாதைகள் இருப்பு பாதைகள் மற்றும் நிலத்தில் அமைந்து இருக்கும் முக்கிய அடையாளங்களை எங்கெல்லாம் இருக்கிறது என்பதை தல வரைபடத்தில் குறித்து இருப்பார்கள் அவை மிகத்துல்லியமாக அல்லது ஓரளவிற்கு துல்லியமாக இருக்கின்ற தல சர்வே வரைபடம் ஆகும் இந்த படத்தையும் நாம் கிராமத்தை சர்வே செய்ய துணையாக கையில் எடுத்து கொள்கிறோம்

13)உங்களுக்கு சந்தேகம் எழும்பலாம் சர்வே செய்யாத கிராமத்தில் தல வரைபடம்மட்டும் ஏன் வந்தது என்று. தல வரைபட சர்வே இந்தியாவை அளந்த மும்மூரத்திகள் என்ற தலைப்பில் ஏற்கனவே கட்டுரை எழுதி இருக்கிறேன்.எனது மானசீக தொழில் குரு மேஜர் வில்லியம் லேம்டன் உட்பட அவரது சீடர்கள் 1800 களில் 60 ஆண்டுகள் இந்தியாவை அளந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தல வரைபடம் உருவாக்கி விட்டனர்அவரகள் கொடுத்த வடிவத்திற்குள் தான் நாம் நிலதீரவை சர்வே செய்ய போகிறோம்.தல சர்வே நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் பட்டா சிட்டா சர்வே சிக்கலகளுக்கு தேவை இல்லாத்தது இருந்தாலும் தல சர்வே இராணுவ காரியங்களுக்கு தேவைபடுகிறது என்பதை மட்டும் நினைவில் கொண்டால் போதுமானது

14)ஆக மொண்டிபாளையம் கிராமத்தை நாம் நிலதீரவைக்கான சர்வே செய்து புல எண் வாரியாக பிரித்து புல எணகள் கொடுத்து சர்வே கற்கள் நடுவதற்கு நமக்கு இ்ண்டு ஆவணங்கள் தேவை படுகிறது1) கிராம தல சர்வே வரைபடம் 2) பைமாஷ் நம்பர் அடங்கிய நில உடைமையாளரகளின் பெயர் பட்டியல் அடங்கிய அடங்கல் மேலும் தியோடலைட் ,சங்கிலி,கம்பு,உட்பட பலசர்வே கருவிகளும் பல வகையான பல அளவுள்ள சர்வே கற்களும் கிராமத்தை சர்வே செய்ய தேவைபடுகிறதுஇதுவரை கிராமத்தை சர்வே செய்ய என்னென்ன தேவைபடுகிறது என்பதனைபார்த்தோம்
(அடுத்து வரும்….)

 
சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இப்படிக்கு :
பிராப்தம் குழு.

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
 
#சர்வே #வருவாய் #துறை #யுடீஆர் #சர்வே #சர்வேகற்கள் #பைமாஷ்நம்பர் #தலவரைபடம் #தொழில்நுட்பம் #நிலம் #அடங்கல் #சர்வே #எண் #கிராமம் #எல்லை #survey #revenue #technical  #village #measurement #land #asset #paranjothipandian #surveystone

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்