பாண்டிச்சேரியில் பிரஞ்சு காரர்களின் நில வரி வாங்கும் வரலாறு! தெரிந்து கொள்ள வேண்டிய 29 செய்திகள்!


  1. பாண்டிச்சேரி ,காரைக்கால்,மாகே (கேரளா) ஏனாம் ( ஆந்திரா) சந்திரநாகூர் (மேற்கு வங்காளம்) ஆகிய பிரஞ்சு இந்திய பகுதிகளுக்கு தலைநகரமாகவும் பாண்டிச்சேரியை வைத்து ஒட்டு மொத்த பிரெஞ்சு இந்தியாவை நிர்வாகம் செய்தனர் பிரெஞ்சுகாரர்கள்
  2. ஆங்கிலேயரை போல் காலனி ஆதிக்க வல்லாரசாக இந்தியாவில் ஆக வேண்டும் என்று பிரான்சுவா மார்ட்டின் காலம் முதல் டூப்ளக்ஸ் காலம் வரை பிரெஞ்சுகாரர்கள் முட்டி மோதி பார்த்தனர்.
  3. இரண்டு கர்நாடாக போரும் பல்வேறு இராஜ தந்திர நடவடிக்கைகளை பிரெஞ்சு காரர்கள் செய்து பார்த்துவிட்டு ஏன் ஒரு வாட்டி சென்னை -செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றியும் பார்த்துவிட்டு பிறகு ஆங்கிலேயர்களிடம் மோதாமல் இருக்கின்ற பகுதிகளை பிஸினஸ் சென்டர்களாக வைத்து நாட்டை நிர்வாகம் செய்தனர்.
  4. அப்படி இந்தியா முழுவதும் வியாபாரம் செய்ததால் பாண்டிசேரியை வியாபார தலைநகராக வைத்து தங்களுடைய வணிகத்துக்கு ஆதாரமாக பாண்டிச்சேரியை பெரிய வியாபார மையமாக மாற்ற பாண்டிசேரியை சுற்றியுள்ள நிலங்களையும் தோட்டங்களையும் நூறு ஏக்கர் இருநூறு ஏக்கர் என்று வாங்கி நிலபரப்பினை அதிக படுத்தினர்.
  5. கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி நிலத்தையும் அதில் வாழ்ந்த மக்களையும் நிர்வாகம் செய்தனர். காலாபட்டு பொம்மியார்பாளையம் பகுதிகள் எல்லாம் தோட்டமாக கொல்லியாக தான் பிரெஞ்சு காரர்கள் வாங்கினார்கள். மேற்படி பாண்டிசேரி ஒட்டியோ இணைந்தோ இன்றும் இருக்காது. இந்த ஊர்களை சுற்றியும் தமிழ்நாடு தான் எல்லைகளாக இன்றும் இருப்பதை பார்க்கலாம்.
  6. பாண்டிசேரி பிரான்சின் மக்களாட்சியில் பங்கு பெற்று ஒட்டு அளித்து பிரான்சு நாட்டின் தலைவரகளை தேரந்தெடுத்தனர். பாண்டிசேரியல் இருந்து பிரதிநிதிகள் பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு சென்றனர். ஆக முழுமையான பிரெஞ்சிந்தியா இறையாண்மை மிக்க மக்களாட்சி அரசு ஆனது.
  7. இப்படி உருவான பிரஞ்சுகாரர்களின் ஆளுமைக்கு உட்பட்ட நிலங்கள் அனைத்திற்கும் முதலில் பிரஞ்சு அரசர் லுயி அவர்களின் மேன்மையான கட்டுப்பட்டிலும் பிரஞ்சு புரட்சி  உருவான பிறகு பிரான்சில் நடந்த மக்கள் ஆட்சி அரசின் கட்டுபாட்டிலும் பிரெஞ்சு நிலங்களின் மேல்வார உரிமை இருந்தது.
  8. ஆங்கிலேய இந்தியாவில் உள்ளது போல நிலத்தின் மீதான மேல்வார உரிமையும் அதற்கும் மேல் அனைத்து உரிமைகளையும் பிரெஞ்சு அரசாங்கமே வைத்து இருந்தது.
  9. மேற்படி நிலங்களை ஆங்கில இந்தியாவில் உள்ள குடிவார உரிமை போல பிரெஞ்சு இந்தியாவில் குடிவார உரிமை என்று நிலங்களை ஒப்படைக்கவில்லை.  நில அடமானம் உரிமை பெற்றவர்கள் என்று தான் நிலங்களை பிரெஞ்சு அரசு ஒப்படைத்தது. அதாவது பட்டா பாத்தியதையே ஒப்படைத்தது என்று சொல்வார்கள்.
  10. பட்டா பாத்தியதை உள்ளவர்களும் (பெரும்பாலும் முதலி செட்டி பிராமணர்) விவசாயம் செய்பவர்களும் குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டு சாகுபடிவேலைகளை செய்வார்கள்.
  11. மேற்படி குத்தகை ஒப்பந்தம் என்பது எப்படி எப்படி என்பதை பார்ப்போம்.. முதலில் கிராமம் தோறும் கொட்டடித்து விவசாயிகள் (பெரும்பாலும் வன்னியர்கள்) வரவழைத்து நிலங்களை அடமானம் கொடுக்கப்போவதாக சொல்லுவார்கள். விவசாயிகளும் குத்தகைக்கான தொகையை வாய்வழியாக நிச்சயித்து முன்பணம் ஏது தராமல் விளைச்சலுக்கு பின் தருகிறேன் என்று கிராமத்தில் இருக்கின்ற தேபிலியன் முன்னிலையில் குத்தகை செய்யப்படும். அந்த நேரத்தில் ஒரு சிறு தொகை (டோக்கன் அட்வான்ஸ்) தேபிலியன் (கிராம அதிகாரி) முன்பு பட்டா பாத்தியதை உள்ளவரிம் கொடுக்க வேண்டும்
  12. ஆக பட்டா பாத்திதையாளர்கள் என்பவர்கள் பாண்டிச்சேரியில் முதலியார் செட்டியார் பிராமணர் போன்றவர்களும் குத்தகை விவசாயிகள் வன்னியர்கள் போன்ற சாதியினரும் ஆதி திராவிடர்கள் நிலத்தில் கூலிக்கு வேலை செய்பவர்கள் .என்றே அன்று இருந்தது.
  13. பட்டா பாத்தியதைதாரர்களிடம் இருந்து விவசாயம் செய்யும் மக்கள் குத்தகை எடுத்து உழைத்து தீர்வையாகவோ அல்லது விளைச்சலில் ஒரு பங்காகவோ (வாரத்திற்கோ) மேலே உள்ள பட்டா பாத்தியதை உள்ளவர்களுக்கு செலுத்துவார்கள்
  14. பட்டா பாத்தியதைதாரர்கள் தங்களுக்கு வருகின்ற பங்கில் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு பணமாக அல்லது விளைச்சல் பொருளாக ஒப்படைப்பார்கள்
  15. பிரஞ்சுகாரர்கள் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு வந்து கிராமகணக்குகளை பார்வையிட்டு பணமாகவோ விளை பெற்றுக்கொண்டு அவர்கள் பாண்டிசேரி டவுனுக்கு திரும்புவார்கள்.
  16. இந்த வேலைகளை செய்யும் பிரஞ்சுகாரர்கள் தமிழ்நாட்டு தாசில்தார் போல் இவர்களை அமல்தார் என்றே சொல்லுவார்கள். தாலுக்காவிற்கு பதிலாக கிராமங்களின் தொகுதியை பர்கலா என்று சொல்லுவார்கள் ஆக ஒரு பர்கலாவிற்கு ஒரு அமல்தாரர் என்று புரிந்துகொள்ள வேண்டும். இந்த அமல்தாரர்கள் பெரும்பாலும் பிரெஞ்சுகாரர்கள் ஒரு சில நேரத்தில் பிள்ளைவாள்கள் அல்லது முதலியார்கள் இருப்பார்கள்
  17. ஒவ்வொரு வரி கணக்கு முடிக்கும் ஆண்டில் அமல்தாரரும் கிராமத்தில் நுழையும் போது கொடிகட்டி தோரணம் கட்டியும் இருப்பார்கள் வரி வசூல் முடித்து திரும்பும் போது அந்த கிராமத்தில் இருந்து கொடி இறக்கபடும்.
  18. அடுத்த ஊருக்கு போகும் போது அந்த கிராமத்தில் கொடியும் தோரணமும் ஏற்றபடும் இப்படி அடுத்த அடுத்த தொடர்ந்து கிராமத்தில் கொடியும் தோரணமும் ஏற்றபடும் இறக்கப்படும். இதனால் எங்கெங்கு வரிவசூல் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். கொடி என்றால் என்ன கொடி என்று யோசிக்கறீர்களா? கட்டாயம் பிரான்சு கொடி தான்
  19. மேற்கண்ட வரி வசூல் செய்த பணத்தில் தான் அமல்தாரர் சம்பளம் தன்னுடைய சிப்பந்தகளின் சம்பளம் ராணுவவீரர்களுக்கான செலவுகள் செய்ததுபோக கணக்கு எடுத்து மீதமுள்ள பணத்தை தங்க நாணயங்களாக மாற்றி பிரெஞ்சு கவர்னரிடம் ஒப்படைப்பார்கள் அமல்தாரர்கள்
  20. குத்தகை பெறும் விவசாயி தன்னுடைய விளைச்சல் பங்கை வாரத்தின் அடிப்படையிலோ அல்லது தீர்வையின் அடிப்படையிலோ பட்டா பாத்தியதாரிடம் கொடுப்பர். தீர்வையின் அடிப்படை என்றால் இவ்வளவு தொகை என்று மூன்று போகம் விளைச்சலில் இரண்டு போகத்திற்கு பயிர் செய்தால் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே நிர்ணயித்து அதற்கான விளைச்சல் இலாபத்தை முன் கூட்டியே பணமாக தீர்வை கொடுத்து விடுவர் மீதம் இருக்கும் ஒரு போகம் லாபம் என்று விவசாயிகள் சந்தோசப்பட்டு கொள்வார்கள்.
  21. வாரத்திற்கு என்றால் விளைச்சலில் இருந்து பங்கு தருவது அவை நீர்பாசனத்திற்கு எற்றவாறு தங்களுடைய பங்கு நிர்ணயிப்பார்கள் நிறைய தண்ணீர் இருந்தால் பட்டா பாத்தியதாரர்கள் ஐந்தில் மூன்று பங்கும் தண்ணீர் குறைவாக இருந்தால் இரண்டில் ஒரு பங்கு நிர்ணயித்து கொள்வார்கள்.
  22. பட்டா பாத்தியதைதாரர்கள் எப்போதுமே காசு காரியத்தில் “காரியத்தில் கண் வையடா தாண்டவர்கோனே” என்பது போல நெல் விளைகின்ற இடங்களில் எல்லாம் வாரத்திற்கும் அதாவது பங்குக்கும் சிறுதானிய மர விளைகின்ற அடங்களில் எல்லாம் தீர்வைக்கும் குத்தகை கொடுப்பார்கள்.
  23. தமிழகத்தில் நிலவகையை நெல்விளைகின்ற பகுதிகளை நஞ்சை என்றும் கம்பு, சோளம் விளைகின்ற பகுதிகளை புஞ்சை என்றும் நில ஆவணங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் பிரஞ்சுகாரர்கள் பாண்டிச்சேரியில் நெல்களம் (Rice field) புஞ்சையை சிறுதாணியகளம் (millet grain filed) என்றே தங்கள் நில ஆவணங்களில் குறிப்பார்கள்.
  24. மேலும் பாண்டிச்சேரியில் நிலங்களை மொத்தம் நான்கு வகையாக பிரஞ்சு அரசாங்கம் பிரித்து வைத்து இருந்தார்கள்.
  1. மனைகட்டு தோப்பு தோட்டம் தேவஸ்தான நிலங்கள்
  2. மானியம் தரபடிமானியம்
  3. பட்டா பாத்தியதை விளை நிலங்கள்
  4. பிரெஞ்சு அரசாங்க நிலங்கள்
25) மனை, தோப்பு,  தோட்டம்,  வீடு, தேவஸ்தானம், என்று  இப்படி சொல்லப்படுகின்ற வார்த்தைகள் எல்லாம் மக்கள் வாழ்ந்துக்கொள்ள புழங்கிகொள்ள குடியிருந்து கொள்ள கடவுளை வணங்கிக்கொள்ள பயன்படுத்திகொள்ள பிரஞ்சுகாரர்கள் வரி கொடுக்காமல் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்
26) மேற்படி இடங்களை உறவினர்களுக்கு கொடுத்து கொள்ளலாம்  வாரிசுகளுக்கு கொடுத்து கொள்ளலாம் ஆனால் அடமானம் வைத்து கொள்ளலாம் இடம் பரிவர்தனை செய்து கொள்ளலாம் ஆனால் விற்க கூடாது .விற்பது எனபது முழுக்க முழுக்க பிரெஞ்சுகாரர்கள் உரிமை மேலும்  தேவஸ்தானம் தன்னுடைய இடங்களை பிரெஞ்சு அரசின் விதிகள் மீறினால் அரசு எடுத்துகொள்ளும்.
27) தரபடிமானியம் என்பது கிராம வேலை செய்யும் நாட்டார் தலையாரி நாவிதர் வெட்டியான் போன்றவர்களுக்கு பிரெஞ்சு அரசால் கொடுக்கப்பட்டது. மேற்படி நிலங்களை யாருக்கும் தானமாக கொடுக்கவும் கூடாது அடமானமும் வைக்ககூடாது பரிவர்த்தனையிம் செய்ய கூடாது ஆனால் அரசின் அனுமதி பெற்று இன்னொருவருக்கு மாற்றிக்கொள்வது லீசுக்கு விடுவதும் செய்து கொள்ளலாம்.
28) இந்த வகை நிலங்கள் முழுவதுமாக அரசு பட்டா பாத்தியதையாக கொடுத்துவிடுகிறது அவர்கள் ஆண்டுதோறும் வரியாக அரசுக்கு கொடுத்து விடுகிறார்கள். மேற்படி சொத்தை இவர்கள் இன்னொரு நபருக்கு பட்டாபாத்தியதை கிரயம் கொடுக்கலாம் அல்லது அரசுக்கு ஒப்படைத்துவிடலாம். அரசுக்கு ஒப்படைப்பதற்கு Receveur do Domaine ஆகும். மேற்படி நிலத்தி ஒப்படைக்கும் போது கிராமத்தில் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் ராஜினாமா டீடு (deed) எழுதிகொடுக்க வேண்டும்.
29) மேற்படி மூன்று வகை நிலங்கள் போக மீதம் இருக்கும் நிலங்கள் அரசாங்க நிலங்கள் அரசு பார்க், அரண்மனை, சாலை அரசிற்கான கம்பெனிகள் என்று பயன்படுத்தி கொள்ளும் மீதி நிலங்கள் காலியாகத்தான் இருக்கும். பட்டா பாத்தியதை கேட்டு மனு செய்து இந்த அரசு நிலங்களை பெற்று கொண்ட தனவந்நர்கள் அதனை வாரத்திற்கு விவசாயிகளுக்கு விடுவார்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /ரியல்எஸ்டேட் ஆலோசகர்
சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள:9841665836
குறிப்பு:அன்பு வாசகரகளே!!நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளரத்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்துசெயல்பட முடியும்-
புத்தகம வேண்டுவோர்:8344489222
#பாண்டிச்சேரி #காரைக்கால் #மாகே #ஏனாம் #சந்திரநாகூர் #பிரான்சுவா மார்ட்டின் #டூப்ளக்ஸ் காலம் #செயிண்ட் ஜார்ஜ் கோட்டை #பிஸினஸ் சென்டர் #காலாபட்டு #பொம்மியார்பாளையம் #பிரஞ்சு அரசர் லுயி #குடிவார உரிமை #நில அடமானம் உரிமை #பட்டா பாத்தியதை #குத்தகை ஒப்பந்தம் #சாகுபடிவேலை #தேபிலியன் #பிரெஞ்சு அரசாங்கம் #அமல்தார் #பர்கலா #பிரான்சு கொடி #சிப்பந்தகள் # தீர்வையின் அடிப்படை #சிறுதானிய #குத்தகை #நெல்களம் #சிறுதாணியகளம் #மனைகட்டு தோப்பு தோட்டம் தேவஸ்தான நிலங்கள் #மானியம் தரபடிமானியம் #பட்டா பாத்தியதை விளை நிலங்கள் #பிரெஞ்சு அரசாங்க நிலங்கள் # மனை #தோப்பு #தோட்டம் #வீடு #தேவஸ்தானம் #பரிவர்தனை #தரபடிமானியம் #நாட்டார் #தலையாரி #நாவிதர் #வெட்டியான் #லீசு #ராஜினாமா டீடு #அரசு பார்க் #அரண்மனை #சாலை #தனவந்நர்கள்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்