செட்டில்மெண்டு ஆவணங்கள், கதாஸ்ட்ரல் ஆவணங்கள், யுடிஆர் ஆவணங்களிடையே உள்ள 28 வேறுபாடுகள் என்னென்ன?

1) தமழ்நாட்டின் நில வருவாய் ஆவணங்களை பொறுத்தவரை அதனை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்
அ)செட்டில்மெண்ட் கால ஆவணங்கள்
ஆ)நில உடைமை மேம்பாட்டு திட்ட கால ஆவணங்கள்
2) பாண்டிசேரியை பொறுத்தவரை நில வருவாய் ஆவணங்களை இரண்டாக பிரிக்கலாம்
அ)கதாஸ்ட்ரல் ஆவணங்கள்
ஆ) நில உடைமை மேம்பாட்டு திட்ட ஆவணங்கள் ஆகும்
3) தற்பொழுது நாம் தமிழ்நாடு பாண்டிசேரியில் பயன்படுத்தி கொண்டு இருக்கும் பட்டா சிட்டா அ-பதிவேடு புலப்படம் என அனைத்தும் நில உடைமை மேம்பாட்டு திட்ட ஆவணங்கள் அதாவது யுடிஆர் ஆவணங்கள் ஆகும்
4) ஒரு நிலம் வாங்கும் போது இப்பொழுதெல்லாம் யுடிஆர் ஆவணங்கள் மட்டும் பார்த்தால் போதாது.
5) பட்டா சரியா இருக்கு அ-பதிவேடு சரியா இருந்தது என்று  சொத்து வாங்கினா திடீர் என்று அது கோவில் சொத்து, இது அறநிலைய சொத்து, இது பஞ்சமநிலம், நில உச்சவரம்பு, பூமிதானநில சிக்கல் மற்றும் இதுல குடிவார உரிமை, குத்தகை உரிமை  எங்களுக்கு இருக்கிறது என்ற புது புது பிரச்சினைகள் எல்லாம் வர ஆரம்பித்துவிடும்.
6) அதனால் தமிழ் நாட்டில் செட்டில்மெண்டு ஆவணங்களையும் பாண்டிசேரியில் கதாஸ்ட்ரல் ஆவணங்களையும் ஆழமாக பார்த்தபிறகு சொத்து வாங்க வேண்டிய கட்டாயம் இப்பொழுது நிலவுகிறது.
7) வழக்கறிஞர் நண்பர்கள் பலர் யுடிஆர் ஆவணங்களை மட்டும் பார்த்து விட்டு லீகல் ஒபீனியன் கொடுத்து வடுகின்றனர். இதனை படிக்கின்ற வழக்கறிஞர்கள் இனி செட்டில்மெண்டு ஆவணங்களையும் கதாஸ்ட்ரல் ஆவணங்களையும் தங்களுடைய செக்லிஸ்ட் சேர்க்கும்படி வேண்டுகிறேன்.
8) சரி செட்டில் மெண்டு ஆவணங்களுக்கும் கதாஸ்டரல் ஆவணங்களுக்கும் யுடிஆர் ஆவணங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? அதுவும் நிறைய பேருக்கு தெளிவாக தெரியாது ஆனால் மிகபெரிய வேறுபாடுகள் இருக்கிறது
9) செட்டில்மெண்டு ஆவணங்களில் கதாஸ்ட்ரல் ஆவணங்களிலும் இருந்த நில உரிமை முறை அடுக்குமுறை நில உரிமை முறை ஆகும்
10)அதாவது நிலமே வைத்து இருக்க கூட உரிமை இல்லாத அடிமைகள். ஆனால் வயலில் வேலை மட்டும் செய்யலாம் கூலியாக விளைச்சலை பெற்றுகொள்வார்கள் .
11) நிலத்தில் குத்தகை எடுத்து பயிர் செய்யும் உரிமை மட்டும் வைத்துள்ள குத்தகைதாரர்கள். அந்த குத்தகைதாரர்கள் விளைச்சலில் ஒரு பகுதியை  வைத்துகொண்டு பெரும் பகுதியை நிலத்தின் பட்டாதாரருக்கு கொடுப்பர்.
12) நிலத்தின் பட்டாதாரர் வாங்கிய விளைச்சலை வெள்ளி பணமாக (வராகன்கள்) மாற்றி ஜமீன்கள் அல்லது இனாம் தாரர்களுக்கு (பெரும்பாலும் பிராமணரகள் சில பகுதிகளில் முதலியார்கள்) அல்லது கோவில்களுக்கு தருவார்கள்.
13) ஜமீன்கள் அதிலிருந்து ஒரு பகுதியை பகோடா என்ற தங்க நாணயங்களாக மாற்றி வெள்ளையர்களுக்கு கொடுப்பார்கள். இனாம் தாரர்கள் வெள்ளை அரசுக்கு வரி விலக்கு அளித்துருப்பதால் தங்க பகோடாவாக மாற்றி தாங்களே வைத்து கொள்வார்கள் (இனாம்தாரர் மற்றும் இனாம் நிலங்களை பற்றி பல தவறான தகவல்கள் ஆன்லைனில் சுற்றுகிறது அதனை நம்பிட வேண்டாம்)
14) இப்படி ஒரு துண்டு நிலத்தில்
அடிமை முறை உரிமை,
குத்தகை உரிமை,
குடிவார பட்டாஉரிமை
மேலவார பட்டா ஜமீன் உரிமை
மேல்வார இனாம் உரிமை
இறையாண்மை அரசு  என்று நில உரிமை இருந்தது.
15) இந்த முறையில் உருவாக்கபட்ட ஆவணங்களை நாம் செட்டில் ஆவணங்கள் என்றும் இந்த காலத்தில் செய்யபட்ட சர்வேவை செட்டில்மெண்டு சர்வே என்றும் சொல்லுவார்கள்,அதனையே பாண்டிசேரியில் கதாஸ்டரல் ஆவணங்கள் என்றும் அன்று செய்யபட்ட சர்வேவை கதாஸ்ட்ரல் சர்வே என்றும் சொல்லுவார்கள்.
16) இந்த செட்டிலமெண்டு சர்வேவில் நில அளவைகள் நில அளவை அலகுகள் எல்லாம் பிரிட்டிஷ் இம்பீரியல் சிஸ்டம் நடைமுறைக்கு இருந்தது.
17) ஆக செட்டில் மெண்டு காலத்தில் அடுக்குமுறை நில உரிமைமுறையும் அளவுகளில் பிரிட்டிஷ் சிஸ்டமும் இருந்தது என்று உணர்ந்தால் போதுமானது.
18) அன்னை இந்திரா காந்தி அவர்களின் சுய முயற்சியால் தமிழகத்தில் காமராஜர் மிதமாகா நடைமுறைபடுத்த ஆரம்பித்து கலைஞர் அவர்கள் 1970 களில் மிக தீவிரமாக மேற்கண்ட அனைத்து அடுக்கு முறை உரிமைகளையும் அடித்து நொறுக்கி அரசு மற்றும் நிலத்தில் உழுதோர் என இரண்டு உரிமைமுறையை கொண்டு வந்தார்.
19) அதன் பிறகுதான் நில சீர்திருத்த துறை என்று தனியாகவும் நில நிர்வாக துறை என்று தனியாகவும் இயங்கியது.
20) அதன்பிறகு இன்று இருக்கிற அடிதட்டு நடுத்தர மக்களுக்கு நிலங்கள் உரிமை ஆக்கபட்டு நாம் இப்பொழுது பயன்படுத்தி கொண்டு இருக்கும் நில உடைமை மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுதுதான் நில உடைமை மேம்பாட்டு திட்ட (யுடிஆர்) பட்டா பாஸ்புத்தகமாக அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
21) அதுவே 1985  களில் UDR கணிணி ஆவணமாக உருவாக்கபட்டு இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. இதில் நில உரிமை அரசு மற்றும் மக்கள் இவர்களை தவிர வேறு யாரும் நடுவில் இல்லை .
22) யுடிஆரில் செட்டில்மெண்டு ஆவணங்கள் போல அடுக்கு முறை உரிமை இல்லை!! இதில் உள்ள நில அளவை அலகுகள் மெட்ரிக் அலகுகளில் இருக்கும் இந்த ஆவணங்களை யுடிஆர் ஆவணங்கள் என்றும் இந்த சர்வேவை யுடி ஆர் சர்வே என்றும் சொல்லுவார்கள்.
23) இதுவே பாண்டிசேரி உட்பட்ட பிரெஞ்சு இந்தியாவில் ஜமீன்கள் என்று யாரும் இல்லை அதேபோல் ஆனால் அதற்கு கீழ் உள்ள பட்டாதாரர் (பெரும்பாலும் பிராமணர், செட்டி, முதலியார்கள்) இனாம் தாரர்கள் என்றும் யாரும் இல்லை. அதற்கு கீழ் குத்தகை உரிமை உடைய மக்கள் அதற்கு கீழ் நில உரிமை அற்றவர்கள் என்று மட்டுமே இருந்தார்கள்.
24) ஆண்டுதோறும் அமல்தாரர்கள் (பிரெஞ்சு கால தாசில்தாரர்கள்) கிராதந்தோறும் பட்டாதாரரிடம் வெள்ளி பணமாகவோ பிரெஞ்சு லிவர்களாகவோ அல்லது விளைச்சல் பண்டமாகவோ வசூல் செய்து பிரெஞ்சு கவர்னரிடம் ஒப்படைப்பார்கள்.
25) பிரெஞ்சு காரர்கள் ஆரம்ப கால கட்டத்திலேயே நில சர்வேவை  மெட்ரிக் முறையில் சர்வே செய்து விட்டனர் அந்த சர்வே முறைக்கு கடாஸ்டரல் சர்வே முறை என்று பெயர் அதனால் அந்த ஆவணங்களை கதாஸ்டரல் ஆவணங்கள் என்று சொல்லுவார்கள்.
26) பிறகு 1963 க்கு பிறகு பிரெஞ்சு காலணியாட்சி முழுமையாக வெளியேறிய பிறகு 1970 களில் நில உடைமை மேம்பாட்டு திட்டம் (யுடிஆர்) சர்வே நடைபெற்றது, இதில் நில உரிமை தமிழகத்தை போல மக்கள் மற்றும்  அரசு என இரண்டு மட்டும் தான்.
27) பாண்டிசேரியில் நில அளவை அலகுகளும் மெட்ரிக் முறைதான் ஆனால் இன்று வரை முழுமையாக கணிணி ஆகாமல் ஆன்லைன் ஆகாமல் வருவாய் ஆவணங்கள் இருக்கிறது.
28) ஆக இவைதான் செட்டில்மெண்டு ஆவணங்களுக்கும் கதாஸ்ட்ரல் ஆவணங்கள் மற்றும் யுடிஆர் ஆவணங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஆகும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /ரியல்எஸ்டேட் ஆலோசகர்.
(குறிப்பு):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள்:9841665836
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#நில வருவாய் ஆவணங்கள் #செட்டில்மெண்ட் கால ஆவணங்கள் #நில உடைமை மேம்பாட்டு திட்ட கால ஆவணங்கள் #கதாஸ்ட்ரல் ஆவணங்கள் #யுடிஆர் ஆவணங்கள் #அ-பதிவேடு #கோவில் சொத்து #அறநிலைய சொத்து #பஞ்சமநிலம் #நில உச்சவரம்பு #பூமிதானநில சிக்கல் #குடிவார உரிமை #குத்தகை உரிமை #அடுக்குமுறை நில உரிமை முறை #குத்தகைதாரர்கள் #பட்டாதாரர் #வராகன்கள் #ஜமீன்கள் #இனாம் தாரர்  #பகோடா #மேலவார பட்டா ஜமீன் உரிமை #மேல்வார இனாம் உரிமை #இறையாண்மை அரசு #செட்டில்மெண்டு சர்வே #பிரிட்டிஷ் இம்பீரியல் சிஸ்டம் #நில நிர்வாக துறை #நில சீர்திருத்த துறை #UDR #அமல்தாரர்கள் #பிரெஞ்சு லிவர்கள் #கடாஸ்டரல் சர்வே முறை

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்