வழக்கறிஞர் காதலிக்கு சர்வே பற்றி ஒரு ரியல்எஸ்டேட் ஏஜென்டின் கடிதம் !!!

கடிதம் 1

(காதலிக்கு நில அளவை சர்வே பற்றி கடிதம் மூலம் ஒரு ரியல்எஸ்டேட் ஏஜெண்டின் ஒரு பாடம்)


 என் அன்பு பெத்தவளே! வணக்கங்களும் வாழ்த்துக்களும், உன்னுடைய கோர்ட் வேலை,வழக்குகள்,விடுதி வாழ்க்கை , உன் நட்பு வட்டம் அனைத்தையும் கான்சியசாக தேர்வு செய்து வாழ்க்கையை பயணிப்பாய் என்று நம்புகிறேன்.

இங்கு நான் வழக்கம் போல் இரு சக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் சுற்றி கொண்டிருக்கிறேன். என்னுடைய MISSION காக அனுதினமும் உழைத்து கொண்டிருக்கிறேன். தினமும் காலையில் மட்டும் அதிகபடியாக முதுகு வலி இருக்கிறது. அந்த நேரத்தில் உன்னுடைய படங்களும் , உன்னுடைய கண்களும் எனக்கு மருந்தாய் இருக்கின்றன.

கடந்த முறை நாம் இருவரும் லாங் ட்ரைவ் ECR இல் பைக்கில் சென்ற போது நீ சொல்லி இருந்த இந்த நில வழக்குகளில் சர்வே பற்றிய செய்திகளும் அதன் உள்ள நுட்பங்கள் பற்றிய குறைவான அறிதலும் அதில் இருக்கின்ற கஷ்டங்களும் நீ மண்டையை போட்டு குழப்பி கொண்டு இருக்கின்றாய் என்று சொன்னதும் மேலும் நீ வழக்கறிஞராக இருந்து கொண்டு நிலதாவாக்களில் சர்வே விஷயங்கள் பாடம் சவாலாக இருப்பதாக நீ பீல் செய்வதும் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

ஒரு அன்பு காதலனாய் அந்த கஷ்டத்தில் உன்னுடன் எப்படி பங்கேற்பது, அந்த சுமையை எப்படி பிரித்து கொள்ளளலாம் , என் அன்புக்குரியவள் முன்னேறி, மேலே போவதற்கு நான் எந்த வகையில் துணை நிற்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன்.

சரி ! சர்வே சம்பந்தப்பட்டதை உனக்கு எளிமையாக விளக்கி கடிதம் எழுதலாம் என முடிவெடுத்தேன். ஏற்கனவே சர்வே சம்பந்தப்பட்ட பாடங்களும், அனுபவங்களும், ஆவணங்களும் நான் நிறைய பார்த்திருப்பதால் என்னால் உனக்கு விளக்கி சொல்ல முடியும்.

மேலும் உனக்கு சொல்லி கொடுப்பதறகாகவே பல சர்வே பற்றிய புத்தகங்களும் இன்னும் பல இணையதளங்களில் இருக்கின்ற சர்வே பற்றிய வலைப்பூ செய்திகளும் , தினமும் இரவு நேரத்தில் உனக்காக, ஆழமாக , நிதானமாக படித்தேன்.

மேலும் ரியல் எஸ்டேட் தொழில் கடந்த 16 ஆண்டு காலமாக நான் பெற்ற சர்வே நில அளவை பற்றிய தகவல்களையும், ஒன்று சேர்த்து உனக்கு புரிகின்ற மொழியில் எளிமையாக வரிசைபடுத்தி நில அளவை சர்வே பற்றி பாடமாக இந்த கடிதத்தை வரைகிறேன் பெத்தவளே!!

என்னடா நீ காதல் கடிதத்திலும் பாடமா? என்று நினைக்கின்ற பெண்ணல்ல!
உனக்கு தெரியும் உண்மையான அன்பு ஒருவருக்கொருவர் வெட்டியாக பொழுதுபோக்கி கொள்வதல்ல , ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டும், ஒருவர் மீது ஒருவர் அக்கறை எடுத்து கொண்டும். இந்த உலகத்தை எப்படி இருவரும் சேர்ந்து ஜெயிக்க வேண்டும் என்று புரிந்தவள் நீ. நாம் மற்றவர்களை போல் காதலில் விழுந்தவர்கள் அல்ல , காதலில் எழுந்தவர்கள் !அதனால் நானே உனக்கு சர்வே பற்றி கடிதமாக எழுதுகிறேன்!!
சரி நாம் பாடத்திற்கு போவோம்.

சர்வே என்றால் என்ன ? என்பதை முதலில் பார்ப்போம்.
சர்வே என்றால் ஆழமாக, அகலமாக நீளமாக புரிந்து கொள்வது. தெரிந்து கொள்வது ஆகும். நாம் கேள்விபட்டிருப்போம் , நம் பகுதிகளில் ரேஷன்கார்டு சர்வே எடுக்க வருகிறார்கள்.

மக்கள் தொகை சர்வே எடுக்க வருகிறார்கள். மலேரியா சர்வே எடுக்க வருகிறார்கள் என்றெல்லாம் கேள்விபடுகிறோம். அப்படியென்றால் ஒரு விஷயத்தை பற்றிய அதிக தகவல்களை கள ஆய்வு செய்வது தான் சர்வே ஆகும்.

முக்கியமாக ஒன்றை மறந்து விடாதே என்னை பெற்றவளே .
சர்வே என்பது கள ஆய்வு ! கள ஆய்வு ! கள ஆய்வு ! களத்தில் இருந்து பெற்ற தகவல்களை வைத்து தான் இந்த நாட்டை நிர்வாகம் செய்கிறார்கள் . முடிவுகளை எடுகின்றார்கள். கள ஆய்வின்றி எந்த ஒரு நிர்வாகமும் வெற்றிகரமாக நடந்ததாக சரித்திரம் இல்லை. அதே போல் நிலஅளவை சர்வேயும் கள ஆய்வின்றி தற்போது எந்த ஆவணங்களையும் உருவாக்கி இருக்க முடியாது. உனக்கு தெரியும். நீ அடிகடி என்னை கேட்பாயே .

நீ ஏன் நிறுவனத்தை நடத்தும் MD என்று சொல்லிகொள்வதில்லை. களப்பணியாளர் என்று சொல்லி தாழ்த்தி கொள்கிறாய் என்று கேட்பாய். நான் என்ன சொல்வேன் என்றால் களப்பணி தான் உண்மையான தகவல்களை கொடுக்கும். உண்மையான தகவல்களை நம்பி தான் நாம் உழைக்க வேண்டும்.

திட்டங்களை செயல்படுத்த வேண்டும். களப்பணி செய்வது தன்னை தாழ்த்தி கொள்வது அல்ல. அது மற்றவர்களை உயர்த்துவதற்கு பயன்படுத்துவதற்கு வேலை. ஆக பலவிதமாக நம்மிடம் சர்வே செய்ய வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நம்மை உயர்த்த, நம்மை ஆவணபடுத்த நம்மின் உண்மை நிலையை உயர் நிர்வாகத்திற்கு கொண்டு செல்ல களப்பணியாளர்கள் தேவைபடுகிறார்கள்.

சர்வே என்பது களப்பணி என்று பார்த்தால். இப்போது என்னென சர்வேக்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

கனிமவளங்கள், தாதுக்கள் , நிலகரி, எரிவாயு, போன்றவற்றை எல்லாம் ஆய்வு செய்வதும், கணக்கெடுப்பதும் அதற்கான வரைபடங்களை தயார் செய்வதும் MINE SURVEY என்று சொல்வார்கள்.

பழங்கால நினைவு சின்னங்களை, தொல்பொருள் ஆய்வுகளை செய்வதும், குரிப்பெடுப்பதும், ஆவணங்கள் தயாரிப்பதும், ARCHAELOGOCAL SURVEY என்று சொல்வார்கள்.

கடலில் உள்ள கனிமங்களையும் உயிர் சூழ்நிலைகளையும், ஆய்வு செய்வதும், ஆவணபடுதுவதும், HYDROLOGICAL SURVEY என்று சொல்வார்கள்.
வானில் உள்ள நட்சத்திரங்கள், விண்பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதும், ஆவணப்படுத்துவதும், ASTROLOGICAL SURVEY என்றும் சொல்வார்கள்.

பூமியின் மேற்பரப்பை அளப்பதும், ஆய்வு செய்வது, ஆவணபடுத்துவது.,. GEODEDIC SURVEY என்று சொல்வார்கள்.

இப்படி பல சர்வேக்கள் இருப்பதை இப்பொழுது தான் நீ கேள்விபட்டிருப்பாய்.
சரி நாம் படிக்க போகும் பாடம் நில அளவை சர்வே எதில் வருகிறது என்றால் பூமியின் மேற்பரப்பை இருக்கின்ற GEODEDIC SURVEY இல் ஒரு மூலையில் கொஞ்சமாக வருகிறது.

GEODEDIC SURVEY இல் TOPOGRAPHICAL SURVEY , ENGG SURVEY, MINE SURVEY , ARCHAELOGOCAL SURVEY வருகிறது. நாம் படிக்க போகும் நில அளவை சர்வேயும் (கதாஸ்டரல் சர்வே) GEODEDIC SURVEY இல் தான் வருகிறது.
நாம் கற்று கொள்ள போகும் நிலஅளவை சர்வே பாடத்தில் தொழில் நுட்ப பெயரால் கடாஸ்ட்ரல் சர்வே என்று சொல்கிறார்கள். வெகு மக்களுக்கு கடாஸ்ட்ரல் சர்வே என்றால் என்ன என்று தெரியாது.

கொங்கு பகுதிகளில் இன்றும் புல எண்ணுக்கு க.ச .எண் என்பார்கள் ஆனால் அதற்கு விரிவாக்கம் பலருக்கு தெரியாது.கடாஸ்டரல் எண் என்று அரத்தம். அப்படியே பாண்டிசேரிக்கு வந்தால் கதாஸ்டரல் ஆவணங்கள் என்றுதான் சொல்வார்கள் அதற்கு அரத்தமும் பலருக்கு தெரியாது .கடாஸ்டரல் என்பது நிலத்திற்கு வரி விதிப்பிற்காக செய்யும் சர்வே என்று பெயர்.

கொடாஷ்ட்டல் சர்வே என்பது ஒரு ரோமன் நிலவரி திட்ட பெயராகும். அதனையே நாம் இன்றும் பயன்படுத்தி இருகின்றோம். மக்களும் நில சர்வே என்று தான் சொல்கிறார்கள். மக்களின் புழக்க பெயராக நில சர்வே இருக்கிறது. இந்த கடிதமும் நில அளவை சர்வே என்று உனக்கு புரிகின்ற அளவிலே பெயரிட்டு இருகின்றது.

கடாஸ்டரல் சர்வே என்ற வார்த்தை அனைவரின் வாயிலும் வருவதில்லை. எளிமையாக நில சர்வே என்று சொல்கிறார்கள். நில சர்வே என்று சொல்வதை நாம் கொடாஷ்ட்டல் சர்வே என்று தான் புரிந்து கொள்கிறோம்,
நீ எப்படி உன் வசதிக்காக என்னை பேபி என்று அழைக்கிறாயோ அதே போல் கொடாஷ்ட்டல் சர்வே யை நில சர்வே என்று அழைகிறார்கள்.

சரி இந்த சர்வேக்கெல்லம் எந்த விஷயம் தெளிவாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்றால் கணக்குதான் கணிதம்தான்.
சர்வே கணிதம் என்பது சாதரணமான விஷயம் அல்ல அற்புதமான ஒன்று .

 நான் மேலே சொன்ன எல்லா சர்வேக்களும் ஒரே அடிப்படை மற்றும் ஒரே FOUNDATION தான் அது சர்வே கணிதம் தான்
நாம் படிக்கும் காலத்தில் போடுகின்ற கணக்குகளை தான் .எப்படி போட வேண்டும் என்று சொல்லிகொடுகின்றார்களே தவிர ஏன் போடவேண்டும் என சொல்ல மறந்து விடுகின்றார்கள். Start with why என்று சைமன் சைனிக் என்பவரின் யூடியுப் வீடியோவை நாம் இருவருமே நூலகத்திற்கு வெளியே பார்த்தோம் நினைவிருக்கிறதா!! Why ன் முக்கியத்துவத்தை அதேபோல்தான்
சர்வே கணிதம் எப்படி போடவேண்டும் என்று சொல்லுவார்கள் ஆனால் ஏன் போட வேண்டும் என்று சொல்லி கொடுக்காததால்
எல்லா சர்வேக்கும் அந்த சர்வே துறையின் ஆவணங்களின் அடிப்படையில் தான் இந்த நாட்டின் நிர்வாகமே இயங்குகிறது. அதனால்தான் படிச்சு IAS ஆகி கலெக்டர் ஆனபிறகும் அவரை சர்வே வை கற்றுகொள்ள மாவட்ட சர்வேயரிடம் வகுப்பிற்கு போகிறார்கள்.

அதனால் நீ SUM போடுவதற்கு கஷ்டபட்டால் நாளை நம்மிடம் வரும் மக்களுக்கு பயன்படும் நோக்கில் ஏதாவது நில சிக்கல்கள் நிலதாவாக்கள் சர்வே சிக்கல்கள் ஏற்பட்டால் உன் சம் போடும் திறமையும் அர்பணிப்பும் இந்த மக்களுக்கு பயன்படும். அதற்காக கொஞ்சம் சிரமபட்டாலும் அணைத்து சம் களையும் பால்மாராமல் போட்டு பழகிவிடு.
அடுத்த கடிதத்தில் சர்வே கணிதத்தை விரிவாக பார்போம் பெத்தவளே!!

கடிதம் 2 விரைவில்…….

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /ரியல்எஸ்டேட் ஆலோசகர்.

(குறிப்பு):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள்:9841665836

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#நிலஅளவை #சர்வே  #கடிதம் #காதலி #MISSION #அனுபவம் #ஆவணம் #சர்வேயர் #கலெக்டர் #கணிதம் #சைமன் #சைனிக் #கடாஸ்டரல் #கொடாஷ்ட்டல் #புலஎண் #geodedic-survey   #topographical-survey #engg-survey  #mine-survey #archaelogocal #hydrological  #ரியல் #எஸ்டேட் #களஆய்வு #real #estate #maths #letter #land #measurement #land #tax #collector #surveyar

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்