வழக்கறிஞர் காதலிக்கு சர்வே பற்றி ஒரு ரியல்எஸ்டேட் ஏஜென்டின் கடிதம் 2


கடிதம் 2
சர்வே என்றால் என்ன?சர்வேக்கள் பல வகை !!
சர்வே (Survey)என்பது ஒரு அற்புதமான கலை  நிலத்தையோ வானத்தையோ கடலையோ படுக்கையான நீளத்தை அகலத்தை பலவிதமான கணிதமுறையில் பலவிதமான உபகரணங்கள் கொண்டு அளப்பது ஆகும்.
அதுவே செங்குத்தளவு உயரங்களை பல்வேறுவிதமான உபகரணங்களை கொண்டு பல்வேறுவிதமான கணிதமுறையில் அளப்பதும் சர்வே தான் ஆனால் அதற்கு வேறு தொழிலநுட்ப பெயர் லெவலிங் (Levelling) என்று சொல்வார்கள் பெத்தவளே!
மேற்படி சர்வே மற்றும் லெவல்லிங் முறையில் அளப்பதை ஒரு கைக்கு அடக்கமான தாளில் வரைபடம் ஆக உருவாக்கி தருவதே சர்வேவின் குறிகோள் பெத்தவளே!
மேற்படி வரைபடத்தை பிளான் என்றும் மேப் என்றும் நாம் அழைக்கிறோம் மிகச்சிறிய அலகுகளில் (அளவுகளில்) மினியேச்சர் செஞ்சு வரைபடம் வரைந்தா அதற்கு பெயர் மேப் (Map).
கொஞ்சம் பெரிய அலகுகளில் (அளவுகளில்) வரைபடம் உருவாக்கினால் அதற்கு பெயர் பிளான். மேப்பிக்கு நம்ம இந்திய வரைபடத்தையும் பிளானிற்கு நமது டிடிசிபி அப்ரூவடு பிளானையும் சொல்லலாம்
என்ன யோசிக்கறாய் இப்பொழுதுதான் மேப்பிற்கும் பிளான்ற்கும் வித்தியாசம் தெரிந்து கொண்டாயா? நல்லது
சரி பெத்தவளே!! சர்வே உண்மையில் பல வகை இருக்கிறது  அவற்றையெல்லாம் சுருக்கமாக பார்ப்போம்மா!
சர்வேயில் மொத்தம் மூன்று புலம் (Filed) இருக்கிறது. சர்வேயர்கள் பட்டா மாற்றும் போது full field ஆ  உட்பிரிவு இனமா என்ற வார்த்தைகளை கேட்டு இருப்பாய் பெத்தவளே நிறைய பேருக்கு field புலம் என்றால் நிலம் மட்டும் என்று நினைக்கிறார்கள்
சர்வேவில் புலம் மூன்றாக இருக்கிறது,ஆம் வானத்தில் இருக்கிற  நட்சத்திரக் கூட்டங்களை சர்வே செய்து வரைபடம் தயாரிப்பது Astronomical survey என்று சொல்வார்கள். இந்த சர்வேயில் புலம் (filed )ஆகாயம் பெத்தவளே!
அதேபோல கடலின் மேற்பரப்பு , கடலின் ஆழத்தில் எண்ணெய் வள ஆராய்ச்சிக்காக கடலை அளந்து வரைபடம் தயாரிப்பது Hydrographic Surveys என்று சொல்வார்கள் இதில் புலம்(Filed) தண்ணீர் பெத்தவளே!
பூமியின் மேற்பரப்பை அளந்து காடு மலை நிலங்கள் என சர்வே செய்வது வரைபடம் தயாரிப்பது land surveys என்று சொல்வார்கள் இதில் புலம் (filed) நிலம் ஆக மூன்று சரவே ஃபீல்டு இருக்கிறது
நாம் பார்க்க போவது நில சர்வேதானே பெத்தவளே அந்த நில சர்வேவிலும் பல விதங்கள் இருக்கிறது. அவைகளை இனி சுருக்கமாக பார்க்கலாம் பெத்தவளே
நில சர்வேக்களில் பூமியின்மேல் உள்ள இல் இருக்கிற பலவிதமான பொருட்களை ஆய்வு செய்வதற்கும் பெயர் ஐ இயோலஜிகல் சர்வே (geological survey) என்று பெயர்
பூமியின் கீழடுக்குல் உள்ள கனிமவளங்கள், தாதுக்கள், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை நிலத்தின் மீது ஆய்வு செய்வதற்கும் (mine survey ) என்று சொல்லுவார்கள் பெத்தவளே!
10) geological  survey ஜியோலஜிகல் சர்வேயில் அதிகபட்சமாக பூமியின் மேற்பரப்பை அளப்பதும் நம்ம தோட்டத்துக்கு எப்படி நாலு மூலையிலும கல்லு போட்டு மார்க் செஞ்சி வைக்கிறோமோ அது போல உலகத்தையே அங்கே அங்கே ஒரு மார்க் செஞ்சு வைக்கிறாங்க.அதுக்கு கன்ட்ரோல் ஸ்டேசன் என்று பெயர் கொடுத்து இருக்கிறார்கள் பெத்தவளே
சர்வே இல் நிறைய ஸ்டேசன் என்ற வார்த்தைகள் வரும் அது நம்ம ஊரு போலிஸ் ஸ்டேசன் போல நினைக்க வேண்டாம். நீ வக்கீல் வேற ஸ்டேசன் என்றாலே போலிஸ் ஸ்டேசதான் நினைவுக்கு வரும் ஆனால் சர்வேயில் ஸ்டேசன் என்றால் பாயிண்ட் என்று எடுத்து கொள்ளனும் பெத்தவளே!
இந்த சர்வே ஸ்டேசன்கள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க வலைபின்னல் போல இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்
நாம் இந்தியாவுக்குள் மட்டும் தற்போது பாரப்போம் இந்தியாவையே பல பெரிய முக்கோணங்களாக பிரித்து இருக்கின்றனர். இந்த முக்கோணத்தின் ஒரு பக்கம் மட்டும் சுமார் 500 கிமீ இருந்து 900 கிமீ வரை இருக்கும் என்றால் பாரத்துகொள்ளேன் பெத்தவளே!! இந்த முக்கோணத்தின் ஒவ்வொரு பாயிண்டும் பெரும்பாலும் மலைகள் போன்ற உயரமான இடத்தில் இருக்கும் அதனை ஜி.டி.ஸ்டேசன் (Great Trigonometrical Station) என்று சொல்வார்கள், மலையோ கோபுரமோ இல்லாத இடத்தில் உயரமாக மேடை கட்டி அதில் இந்த சர்வே கல்லை நட்டு வைத்து இருப்பாரகள்
இப்படி உருவாக்கபட்ட சர்வே ஸ்டேசன்களை அடிப்படையாகவும் எல்லையாகவும் வைத்துதான் நிலத்திற்கு மேலே செய்யபடும் எல்லா சர்வேவும் செய்கிறார்கள் அதாவது டோபோகிராபிகல் சர்வே (topographical survey) என்ஜினீரிங் சர்வே (Engineering Survey) கடாஸ்டரல் சர்வே (cadestal survey) மற்றும் இராணுவத்திற்காக தாக்குதல் எதிர்தாக்குதல் பாதுகாத்தல் புள்ளிகளை குறித்தல் சர்வே செய்வதும்,தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பழங்கால நினைவு சின்னங்களைகண்டுபிடிக்கும் சரவே க்களும் செய்ய படுகிறது பெத்தவளே!
இப்படி பல வகையாக உள்ள ஜியோலஜிகல் சர்வே துறையும் இந்தியா முழுக்க உள்ள ஜிடி ஷ்டேசனும் சர்வே ஆப் இந்தியா என்ற மத்திய அரசு துறையின் கட்டுபாட்டில்  இருக்கிறது .இந்த சர்வேக்களை படிப்பவரகள் இந்த சர்வேக்களை சர்வே ஆப் இந்தியாதான் (survey of India) நிறுவனத்தில் பணி புரிய வாய்ப்பு இருக்கிறது பெத்தவளே
மேற்கண்ட நான் சொன்ன சர்வேக்கள் எல்லாம் மிக முக்கியமானது ஆனால் நிபுணர்களுக்கு மட்டும்தான் புரிய கூடியது சாரதாரண மக்களுக்கு இவ்வளவு பின்புலம் இந்த சர்வேக்களில் இருக்கிறதா என்று தெரியாது பெத்தவளே!
நம்ம மக்களுக்கு தெரிந்ததைல்லாம் நம்ம வயற்காட்டை அல்லது நிலத்தை அளக்க வரும் சர்வேயர் அவர் செய்கின்ற வேலை சர்வே அவ்வளவுதான் தெரியும்.சரிதானே பெத்தவளே!அந்த சர்வேக்கு பெயர் வருவாய்துறை நிலதீர்வைக்கான சர்வே
என்று சொல்கிறோம் பெத்தவளே!
மக்களுக்கு அதுகமாக புழக்கத்தில் நில நிலத்திற்கான சர்வேவை இரண்டாக பிரிக்கலாம்
a) தல சர்வே (Topographical Survey)
b) வருவாய்துறையினருக்கான நிலதீர்வைக்கான சர்வே
ஏரிகள், குளங்கள், நீர்வழிபாதைகள், மலைகள், குன்றுகள், இருப்புப் பாதைகள், சாலைகள் கோவில்கள், இடுகாடுகள், பூங்காக்கள் ஆகியவற்றை எல்லாம் எங்கெங்கே இருக்கிறது என்பதை அதனுடைய அமைவிடத்தை தரக்கூடிய நிலபடம் தான் டோபோஸ்கெட்ச் பொதுவாக நாம் அதனை டோபோ ஸ்கெட்ச்என்று சொல்வோம் பெத்தவளே!
தல வரைபடம் எல்லாவிதமான ராணுவ காரியங்களுக்கும் எல்லைகளை பாதுகாக்கும் படைகளுக்கும் துணை இராணுவ படைகளுக்கும் வனதுறை பொதுபணிதுறை சுரங்க துறை தொல்பொருள் துறை என நிரவாக வசதிக்காக பயன்படுகிறது பெத்தவளே!!
அடுத்து வருவாய் துறையில் நிலங்களை நஞ்சை புஞ்சை மானாவாரி தரிசு என்று பிரித்து அதனுடைய மண் வளத்தையும் பிரித்து சிறிய முக்கோன அளவுகளாக அல்லது பெரிய பெரிய முக்கோன அளவு பாகங்களாக நிலங்களை சர்வே செய்து பிரித்து கல் போடுவதும் மேலும் நில வரி தீரவைக்காக தண்ணீர் பாசன அடிப்படையில் வரி விதிப்பதும்  நிலதீர்வை சர்வே இதனைதான் கதாஸ்டரல் சரவே என்றும் சொல்கிறாரகள்
மேலும் தமிழகத்தின் நில தீர்வை சர்வேயில் தல சர்வேயின் விவரங்களையும் கிளப் (Club)செய்து இரண்டையும் ஒருங்கிணைத்து மிக கிராம வரைபடங்களை தமிழக சர்வே துறை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த கிராம வரைபடங்கள் நீ என்னிடம் அடிக்கடி பாரத்து இருப்பாய் பெத்தவளே!!
அடுத்த கடிதத்தில் சுவாரஸ்யமான சர்வே கதை உள்ளது பெத்தவளே!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /ரியல்எஸ்டேட் ஆலோசகர்.
(குறிப்பு):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள்:9841665836
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#land surveys #கணிதமுறையில்#செங்குத்தளவு#Levelling#சர்வேவின் குறிகோள் #பிளான்#மேப்#மினியேச்சர்#டிடிசிபி அப்ரூவடு #புலம்#Filed#full field #இனமா#Hydrographic Surveys #ஜியோலஜிகல் சர்வே (geological survey)#mine survey #கன்ட்ரோல் ஸ்டேசன் #cadestal survey#Engineering Survey#survey of India#வருவாய்துறை நிலதீர்வைக்கான சர்வே#தல சர்வே#Topographical Survey#டோபோஸ்கெட்ச்#நஞ்சை#புஞ்சை#மானாவாரி தரிசு #கதாஸ்டரல் சர்வே#Club#கிராம வரைபடங்கள்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்