திருநாகேசுவரத்தில் சிரமண நாக நாதர்

   

திருநாகேசுவரத்தில் சிரமண நாக நாதர்


கள்!!

ஒரு காலத்தில் சுத்தமான பருத்தி கைத்தறி வேட்டிக்கு புகழ் பெற்ற திருநாகேசுவரம் ஊர் கும்பகோணத்தின் அருகில் இருக்கின்ற அழகான பேருராட்சி ஆகும். இன்றும் ஐயங்கார்கள் திருநாகேசுவரம் எட்டு முழ வேஷ்டி விரும்பி அணிகிறார்கள் என்பதை கேள்விபட்டு இருக்கிறேன்

அந்த ஊரில் இருக்கின்ற சிறப்பான கோயில் தான் நாகநாதசுவாமி திருக்கோவில்
ரியல்எஸ்டேட் களப்பணிக்காக சமீபத்தில் திருநாகேசுவரம் செல்லும் பொழுது அந்த கோவிலையும் பார்த்தேன்.

கும்பகோணம் டூ காரைகால் செல்லும் சாலையில் பத்து ஏக்கருக்கு மேல் பரப்பளவு இருக்கிற பெரிய சமய நிறுவனம் தான் நாகநாதசுவாமி திருக்கோயில்.

சமூக இடைவெளி சோப்பு நீரால் கைகழுவுதல் காய்ச்சல் சோதித்தல் என்று சோதித்த பிறகு தான் உள் அனுப்பினார்கள். இராகு தோஷம் நிவர்த்தி அடைகின்ற கோயில் என்று சந்தைபடுத்தபடுகிறது. அதனால் நிறைய பேர் வருகிறார்கள்.

பெரிய குளம், கோட்டை போல் மதில் சுவர்கள் ,சிறப்பான கோபுரம் என்று நல்ல அமைப்பான கோயில்.நாகநாதர் பெரிய சிவலிங்கம் வடிவில் இருந்தார். கார்த்திகை மாதம் நிலவின் ஒளி அம்மன் சந்நிதியில் விழுமாறு பிறையணி நுதலாள் இருக்கிறார்கள். தனியாக மலைமகள் சந்நிதி இருக்கின்றது. சுதை சிற்பம் என்பதால் அபிஷேகம் செய்யாமல் இருந்தார்கள்.

அந்த மலைமகளின் பிரகாரத்தை சுற்றி வரும்பொழுதுதான் நம்ம பங்காளிகள் சிலை இரண்டு வெளிசுவற்றை ஒட்டி தரையில் அமரந்தபடி இருந்தார்கள்
ஒருத்தர் புத்தர் இன்னொருத்தர் தீர்த்தங்கர்ர் புத்தர் சீவர மேலாடையுடன் இன்னொருவர் மேலாடை இன்றி தியான நிலையில் அமர்ந்து இருக்கிறார்கள்.

என்னடா இந்த இரண்டு பேருக்கும் வந்த சோதனை இங்கு வந்து உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன். 10ம் நூற்றாண்டில் இருந்துதான் இப்படி மூலையில் குத்த வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு முன் நன்றாக பூசை எல்லாம் வாங்கி சிறப்பாக இருந்து இருப்பார்கள் என்று என் எண்ணங்கள் ஓடியது.

சென்னை குன்றத்தூர் சேக்கிழார் வேற அடிக்கடி வந்து போன கோவில் என்று சொல்கிறார்கள். ஒருவேளை சேக்கிழார் வேலையாதான் இருக்கும் இந்த இரண்டு பங்காளிகளையும் இங்கே ஓரமாக வைத்து இருப்பதற்கு என்று தோன்றியது.

பேசாம இவங்க இரண்டு பேரையும் மியூசியத்துக்கு கொண்டு போனால் நல்லா இருக்கும்.இங்கு அமர்ந்துகொண்டு கடந்தகால சிரமண -சைவ வைணவ வேத சண்டைகளை நினைவுபடுத்தாமல் இருப்பார்கள். யாராவது சிரமண ஆர்வலர்கள் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.இரண்டு பேரும் அங்கு இருக்க வேண்டிய இடமல்ல..

தியானம் செய்து கொண்டு இருக்கும் புத்தரை பெரும் மழை மற்றும் காற்றில் இருந்து காத்து தியானத்தை கலைய விடாமல் செய்த இராஜநாகம் முசலிந்தா கதையை புத்தர் கதைகளிலும் சமண தீர்தங்கர்கள் ஒருவரான பார்சுவநாதர் நாகத்தை குடையாக கொண்டும் இருப்பார் என்று சமண வரலாறுகளிலும் படித்து இருக்கிறேன்.

திருநாகேசுவரம் நாகநாத சுவாமிகள் பத்தாம் நூற்றாண்டுக்கு முன் சிரமண நாகநாதராக கூட இருந்து இருக்கலாம்.பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு பௌத்த சமண ஒழிப்பாளர் இராஜ இராஐன் காலத்தில்தான் புத்தர் தீரத்தகரர்களை கோயிலில் இருந்து வெளியில் கொண்டு வந்து கீழே உட்காரவைத்துவிட்டு சைவ நாகநாதரை கோயிலுக்குள் அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in

#முசலிந்தா #பார்சுவநாதர #புத்தர் #தீர்த்தங்கர் #திருநாகேசுவரம் #கும்பகோணம் #வேஷ்டி #இராகு #சேக்கிழார் #பிறைநுதலாள்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்