தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு மக்களின் நிலம் சம்பந்தபட்ட கோரிக்கை மனு:

  தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு மக்களின் நிலம் சம்பந்தபட்ட கோரிக்கை மனு:




தமிழகம் முழுவதும் மீண்டும் யுடிஆர் சர்வே செய்யபட வேண்டும்,தமிழகம் முழுவதும் உள்ள கிராம நத்த நிலங்களை நிலவரி திட்ட சர்வே செய்து ஆன்லைன் ஆக்க வேண்டும் ,இந்து அறநிலையதுறை வக்பு போர்டு கீழ்வார உரிமையில் இருந்து ரெவின்யு பட்டா பெற்றவர்களின் சிக்கல்களை சரி செய்ய வேண்டும் வழங்கபடாமல் இருக்கின்ற பூமிதான நிலங்களை விநியோகிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அனைத்து கட்சி தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்காக நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் சார்பாக கோரிக்கை மனுக்கள் அனுப்ப உள்ளோம் .முதலில் தி.மு.க சார்பாக உருவாக்கபட்டுள்ள தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு பதிவு தபாலில் அனுப்பியுள்ளேன். விரைவில் அனைத்து கட்சியினருக்கும் தபாலிலும் நேரிலும் இமெயில் மூலமும் மேற்படி நிலம் சம்மந்தபட்ட மக்களின் பிரச்சனைகளை நானும் எனது குழுவினர்களும் எடுத்து செல்ல ஆரம்பித்து இருக்கிறோம் .ஏற்கனவே சில ஆண்டுகளாக இவையெல்லாம் நான் எழுதிகொண்டும் பேசிகொண்டும் இருக்கின்ற செய்திகள்தான்.மேற்படி விஷயங்களில் அரசியல் தலைவர்களுக்கே தெளிவான புரிதல் இல்லை அதனால் இந்த செய்திகளை அவர்களிடம் கட்டாயம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது.எனவே இதனை முடிந்த அளவுக்கு பகிர்தல் நன்று...

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
www.paranjothipandian.in
9962265834


#dmk  #தி.மு.க #யுடிஆர் #சர்வே #கிராம_நத்த #paranjothi_pandian #kirama_naththam #dmk #udr #survey #revenue_patta 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்