என்னை அரசர்கள் வரலாறுகளில் இருந்து
அடிமைகள் வரலாற்றை பார்க்க வைத்த
சீகன் பால்கு !!

1830 ற்கு முன்பு தமிழகத்தில் நடைமுறையில் இருந்த சாதிய விவசாய பண்ணைய தோட்ட தொழிலாள அடிமைமுறையின் தமிழக அடிமைகளை பற்றி ஒரு கட்டுரையை தமிழநாடு பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்று நான் எழுதி கொண்டு இருக்கும் புத்தகத்தில் சேர்க்க விருக்கிறேன்.வெளிநாடுகளான கரீபியன் தீவு பிஜி தீவு, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் கரும்பு தோட்டங்கள்,கஞ்சா தோட்டங்களில் கொத்தடிமைகாளக வேலை பார்க்க தமிழகத்தின் கடைநிலை மக்கள் பலர் அடிமைகளாக டச்சு போர்ச்சுகீயர்,டேனிஷ் கார்ர்களால் விற்கபட்டு கப்பலில் பண்டங்கள் போல ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தார்கள்.அந்த அடிமை வியாபாரத்தை பற்றி பற்றி இந்தியாவிற்கு வந்த முதல் புராட்டஸ்டாண்டு சாமியார் பார்த்தலோமியு சீகன்பால்கு தன் கப்பல் பயணத்தில் பார்த்த அடிமை வியாபரத்தையும் அடிமைகள் கொல்லபடுதலையும் பற்றி அகடமி ஆஃப் டெத் என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் .அந்த புத்தகத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு ஏதேட்சையாக வாசித்தேன் .அதன்பிறகு தமிழகத்தின் அடிமை முறை ,கூலி முறை ,படியாள் முறை, கொத்தடிமை முறை போன்றவற்றை விரிவாக ஆராய்ந்து ஒரு நீண்ட பரிதலை பெற்றுகொண்டேன்.
அரசர் வரலாறுகளை தேடிய என்னை அடிமைகள் வரலாறு பக்கம் திருப்பிவிட்டவர் சீகன் பால்கு!! மனுசன் 37 வயசுதான் வாழந்து இருக்கார் பலவீனமான உடல் கொண்டவர்.டேனிஷ் லுத்தரன் கிறிஸ்தவ சபைக்கு ஊழியம் செய்தாலும் அவர் டென்மாரக்கார் அல்ல ஜெர்மனி கார்ர்.தமிழ் எழுத்துக்களை வார்த்து தமிழமொழியில் பைபிளை மொழிபெயர்த்து அச்சிட்டவர்.தமிழ் எழுத்துக்கள் அச்சில் வந்ததும் இந்த மனிதாரால் தான்.இறுதியில் தரங்கம்பாடியில் ஜீவதிசை அடைந்துவிட்டார்.தமிழகத்திலேயே தரங்கம்பாடியில் தான் slave trade நிறைய நடந்து இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்

லுத்தரன் சபையினர் யாராவது இருந்தால் சீகன் பால்கு எழுதிய வேறு புத்தகங்கள் இருந்தால் வாசிக்க உதவவும்!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
www.paranjothipandian.in
9962265834

#சீகன் பால்கு #பண்ணைய தோட்ட #அரசர் வரலாறு #லுத்தரன் சபையினர் # slave trade #அகடமி ஆஃப் டெத் பிஜி தீவு # கரீபியன் தீவு #தென்ஆப்பிரிக்கா

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்