நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

   



1)அழகான பெயரகள் நிலவியல் சாலை அல்லது நிலவியல் ஓடை நிலவியல் கால்பாதை, நிலவியல் வண்டி பாட்டை, போன்ற பெயரகள் எல்லாம் கிராம அ-பதிவேட்டில் பார்க்கலாம். இதனை அந்த கால செட்டில்மெண்ட் கணக்கில் பூஸ்துதி ரோடு, பூஸ்துதி பாட்டை,பூஸ்துதிஓடை என்றும் குறிப்பிடபட்டு இருக்கும்

2) சில ஊரில் பேச்சு வழக்கில் பூஸ்டர் ஓடை பூஸ்டர் ரோடு என்றும் சொல்லிகொண்டு இருப்பார்கள். இப்படிபட்ட வார்த்தைகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்றால் பட்டா நிலத்திதல் இருக்கிற ஓடை,பட்டா நிலத்தில் இருக்கிற சாலை என்று அர்த்தம்

3) பட்டா ஓடை, பட்டா சாலை இரண்டுக்கும் தனி சர்வே எண் உட்பிரிவ கொடுத்து புலப்படத்தில் கூர் செய்து (தனியாக பிரித்து காட்டி இருப்பார்கள்) அபதிவேட்டிலும் நிலவியல் பாதை என்று குறிப்பிட்டு இருப்பார்கள்

4) போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலங்களில் நிலவு வெளிச்சத்தில் அந்த நடைபாதை வண்டி பாதை ஓடைஒரமாக நடத்து முக்கிய சாலையை அடைவார்கள் அதனை நிலவியல் சாலை என்பார்கள்

5) இயற்கையாகவே தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உருவாகி ஓடும் ஓடைகள் ,நீர்வழிபாதைகள், மக்கள் நடைபாதைகளை அவர்கள் வசதிக்கு ஏற்ப பட்டா நிலங்களில் நடந்து பாதையாக மாறிவிட்டு இருக்கும். இந்த பாதைகள் ,நீர்வழிபாதைகள் எல்லாம் புலப்படத்திலும் கிராம வரைபடத்திலும் குறிப்பிட்டு இருக்கும்

6)ஆனால் இதற்கு தனி சர்வே எண் உட்பிரிவு கொடுத்து பிரித்து இருக்க மாட்டார்கள். இவைகள் நிலவியல் சாலை நிலவியல் ஓடை அல்ல .இந்த பாதையை இந்த நீர்வழியை நாம்மாற்றலாம் ஆக்கிரமிக்கலாம் ஆனால் வேறு நடைபாதையை வேறு நீர்வழிபாதையை நமது பட்டா இடத்தில் மாற்றி ஒதுக்கி தர வேண்டும்

7)ஆனால் நிலவியல் என்று அ-பதிவேட்டில் குறிப்பிட்டு இருந்தால் அதனை ஆக்கிரமிக்க கூடாது அப்படி ஆக்கிரமித்து இருந்தால் அதனை ஆக்கிரமிப்ப அகற்றுதல் சட்டபடி அரசு நடவடிக்கை எடுக்கலாம்

8)நிறைய மக்கள் இது எங்கள் பட்டா நிலத்தில் இருக்கும் ஓடை இதனுரிமை எங்களுக்குதான் இது பட்டா பாதை இதை நாங்கள் தான் பயன்படுத்திவோம் என்று கோர்டுக்கு போனாலும் செல்லாது அது அனைவருக்கிமானது

9)மேலும் ஒரு சொத்து கிரயம் வாங்கும் போது இந்த நிலவியல் பாதையும் எங்கள் பட்டாவில் வருது நிலவியல் ஓடையும் எங்கள் பட்டாவில் வருகிறது அதனால் அதற்கும் சேர்த்து கிரயம் நிச்சயப்பாரகள் அப்படி நிச்சயித்தாலும் அதனை பத்திரம் போட்டாலும் கட்டாயம் நஷட படுவது நீங்கள்தான்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in

#பூஸ்துதி #தரைபடி #நிலவியல்சாலை #நிலவியல்ஓடை# பூஸ்டர் #பட்டா

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…