அதிராம்பட்டினத்தின் நெய்தல் அழகு!!

வாடிக்கையாளரின் மிகவும் சிக்கலான நில சிக்கலை புரிந்து கொள்வதற்காக தஞ்சை பள்ளதாக்கின் வங்க கடலோரம் இருக்கின்ற அதிராம்பட்டினத்திற்கு மதுராந்தகத்தில் இருந்து பைக்கிலேயே இருந்தேன்.

வாடிக்கையாளர் மீன்பிடிதொழிலாளர் என்பதால் அவரின் நில சிக்கலுக்கான ஆய்வெல்லாம் முடித்துவிட்டு படகில் கடலுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கேட்டு கொண்டேன்.மிக மகிழச்சியாக ஒத்து கொண்டு வாடிக்கையாளர் தன்னுடைய ஃபைபர் படகில் ஏற்றி கொண்டார்.

மீனவர் குப்பத்திற்கும் கடலுக்கும் இரண்டு கிமீட்டர் தூரம் இருக்கிறது கடலில் இருந்து குப்பத்திற்கு வாய்க்கால் வெட்டி அந்த வாய்க்காலில் இருந்து கடலுக்கு செல்கிறார்கள்.கடலில் அதன் கடற்கரை மண்ணாகதான் இருக்கும் அதாவது சென்னை மெரினா அல்லது பிற கடற்கனர போல மணற்பாங்காக இருக்கும் என்று நினைத்தால் நிச்சயம் அது தவறு.

இந்த கடற்கரை டிசைனே வேறு இங்கு பீச்சோ வெள்ளை மணலோ கிடையாது முழுதும் களி சேறுதான்.கடலை ஒட்டி பூரா இடமும் மாங்குரோவ் காடுகள்தான்.அதன் இடையில் வாய்கால் வெட்டி அந்த நீரில் இரண்டு கிமீ பயணம் அதன் பிறகு தான் வங்காள கடல் !மாங்குரோவ் காடுகள் பற்றி நாம் நிறைய கேள்வி படுகிறோம் சுனாமி போல கடல் கோள் நேரங்களில் கிராமங்களிக்கு தடுப்பாக இருக்கிறது

அலையின் வேகத்தை குறைக்கிறது.அலையின் வேகத்தை குறைப்பதாலேயே அலையாத்தி காடுகள் என்று சொல்கிறார்கள் மேற்படி காடுகளை முத்துபேட்டையில் ஏற்கனவே பார்த்து இருக்கிறேன்.முத்துபேட்டைதான் தமிழ்நாட்டில் மிகபெரியது என்று நினைக்கிறேன்.

பாண்டிசேரியல் செஞ்சியாறு கடலில் சேறும் இடத்தில் கொஞ்சம் துளிபோல் மாங்குரோவ் காடுகள் இருக்கிறது அதனை பிரமாதமாக சுற்றுலா பயணிகளுக்கு மார்கெட்டிங் செய்து கொண்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன்

ஆனால் அதிராம்பட்டினம் மாங்குரோவ் மீனவர்களோடு கலந்த ஒன்று .அது உண்மையில் மீனவர்களுக்கு காவல் மரங்கள்!பறவைகளுக்கு புகலிடங்கள்..அனைத்தையும் இயற்கையில் இருக்கும் ஆழத்தோடு உணர்ந்து ஒன்றி இரசித்தேன்.

அப்படியே கடலுக்குள்ளும் சென்றேன் அலை கடலாக வங்காள விரிகுடாவின் பிரமாண்ட விஸ்தீரணம் நாமெல்லாம் ஒரு கொசுதாண்டா என்று சொல்லியது.வானமும் கடலும் தொட்டு கொண்டு நிற்பதை கடலுக்குள் ஒருவனாக பார்த்தேன்.

மலை மலைசார்ந்த அழகையும் வயலும் வயலை சார்ந்த அழகையும் நமது திரைபட இயக்குனர்கள் இயற்கை பேரழகாக காட்டி மக்கள் மனதில் பதிய வைத்து கொண்டு இருக்கின்றனர்.அவையெல்லாம் இயற்கையின் பேரழகுதான் ஆனாலும் நெய்தல் நிலத்தின் இயற்கை அழகும் வேறு வகையான அழகு!!

காற்றோடு கலந்து இறைச்லோடு எழும்புகின்ற. அலையும்கடலுக்குள் புகுந்து கரையும் ஆறும் ஆற்றுக்குள் ஓடி வரும் கடலும்
கடலோரங்களில் இருக்கின்ற கோணல் கோணலான நீர்நிறைந்த கழிகளும் வாய்ககாலும்
அதில் மலரந்து நிற்கின்ற வெள்ளை லில்லி மலர்களும் செங்கால் நாரைகளும் தண்ணீரில் துள்ளும் பிஞ்சு மீன்களும் மண்ணின் கலரோடு கலந்து நிற்கின்ற தண்ணீரும்

நீர்கழிகளில் உள்ளுக்குள்ளும் நடுவிலும் ஓரத்திலும் நின்று கொண்டு இருக்கும் பனை மரங்களும் கருநிற சேற்றில் வளர்ந்து நிற
கும் பச்சை மாங்குரோவ் காடுகளும் கழிகளில் சின்ன படகில் இரவிலும் ஒத்தை லைட்டில் மீனை தேடிகொண்டு இருக்கும் செம்படவனும்
நீர்கழியோர கரையில் நின்று கொண்டு புழு கொடுத்து மீனை பொறி வைத்து பிடிக்கும் தூண்டில் வீர்ர்களும் வலையை விரித்து நீரோடையில் நின்று கொண்டே பிடிக்கின்ற கரையர்களும் பார்த்து பார்த்நு அழகை இரசிப்பது பெரும் உவகையாகும் இதனையெல்லாம் இரசிக்க உங்களுக்கு நேரமும் சஞ்சலமில்லா மனமும் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் ஆவார்கள்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
www.paranjothipandian.in

 

#அதிராம்பட்டினம் #மாங்குரோவ் #அலையாத்திகாடுகள் #லகூன்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்