புயலில் கவிழந்த தவணை முறை ரியல்எஸ்டேட் கப்பலை நிமிர்த்து இருக்கிறேன்!!

புயலில் கவிழந்த தவணை முறை ரியல்எஸ்டேட்
கப்பலை நிமிர்த்து இருக்கிறேன்!!

 

1990 to 2000 களில் ஆண்டுகளில் முதன்முதலில் எல்.ஐ.சி.லைஃப் இன்சூரன்ஸ் முகவர்கள் பத்தாயிரம் போட்டா இருபதாயிரம் வரும் என்று யுலிப் திட்டங்களில் கேன்வாஸ் செய்து ஆள் சேர்த்தனர் பல பேருக்கு போட்ட முதலே வரவில்லை!

வாரம் தோறும் வீட்டுக்கு இரண்டு கிலோ மட்டன் வரும் கொஞ்சம் நிலம் வரும் என்று Goat farm நிறுவனங்களில் வசூல் செய்தவர்களை பாரத்து விட்டேன், கலைமகள் சபா பெயரில் collective investment திரட்டி நிலங்கள் வாங்கி முதலீடு செய்தவர்களுக்கு திருப்புதொகை கொடுக்காத நிறுவனத்தையும் PACL  நிறுவனம் Sterling Tree magnum நிறுவனம்,
அனுபவ் பௌண்டேசன் என்று பல நிறுவனங்கள் மக்கள் பணத்தை திரட்டி நிலங்களில் முதலீடு செய்தார்கள்.மேற்படி நிறுவனங்களில் எனக்கு நேரடியாக நிறைய களபணி அனுபவங்கள் இருக்கிறது.(அவற்றை பற்றி எல்லாம் அடுத்து தனிபுத்தகமாக எழுதவிருக்கிறேன்) இந்த முதலாளிகள் எல்லாம் மிகவும் பத்திரமாக இருக்கிறார்கள்.

ஆனால்திருநெல்வேலி,கோவில்பட்டி,சாத்தூர்,தூத்துகுடி,சிவகாசி திருத்தங்கல் விருதுநகர் மதுரை பகுதிகளில் மாத தவணை சீட்டு திட்டம் மூலமாக வீட்டு மனை விற்பனைகள் பல தொழில் முனைவர்கள் செய்து வந்தார்கள்.ரியல் எஸ்டேட் துறை வரன் முறைபடுத்தாமல் இருக்கின்ற காலங்களில் இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு கட்டு பட்டு தொழில் செய்து வருகின்றனர் .

தொழில் முனைவர்கள் பெரும்பாலும் ஆன்மீக நம்பிக்கை மட்டுமே (நான் அதனை hope strategy என்று சொல்வேன்) இடைவிடாதல் உழைப்பு அனைவருக்கும் பகிரந்து கொடுத்தல் என்றே பண்புகளை முதலாக வைத்து தொழில் செய்து வந்துள்ளனர்.

பத்திரபதிவு தடை, நோட்பந்தி, புதிய வரிகொள்கைகள், ரொக்க பணபுழக்கம் கட்டுபடுத்துதல் என பல சந்தை நெருக்கடிகள்.முறையான தொழில் முனைவு தன்மை இல்லாத தனிபட்ட நிர்வாக தவறுகள், மேலும் என்ன தடைகள் வந்தாலும் அதை தாண்டிகிற மன வலிமை அதற்கான உணர்பூர்வமான துணைகள் இல்லாமையால் ஐந்தாம் படை முகவர்கள், பயந்தாகொள்ளி முகவர்கள் பொறாமை எண்ண முவர்கள் சோம்பேறி முகவர்களிடையே நடுவில் மாட்டிகொண்டு மீள முடியாமல்
பல தொழில் முனைவர்கள் சப்போட்டா பழம் விற்பதாக, மாடுகளுடன் மினி டெய்ரி நடத்துவதாக, வேறு வேலைகளுக்கு செலவதாக, ஆவண எழுத்தராக மாறிவிட்டதாக கேள்விபடும்போது கொஞ்சம் மன வேதனை அடைவேன்.அரசின் வங்கி கடன் வசதியோ முறையான நிறுவன அமைப்போ இல்லாமல் அதிக வட்டிக்கும் இலாபத்தில் பங்கும் என்று முதலீட்டாளர்களை இணைத்து தரமற்ற ஊழியர்களை தூக்கி சுமந்து நில உரிமையாளர்களின் காட்டுகாரர்களின் அக்ரிமெண்ட் கெடு தேதிக்கு பயந்து தொழில் நடத்தி கொண்டு வரும் ரியல்எஸ்டேட் பார்ட்னஸ்கள் இந்த தொழில் முனைவர்கள்.

ஆனாலும் என்னுடன் பயணித்த பல ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்கள் தோல்வி முகந்தில் சுருங்கியும்சக்தி இழந்தும் நிறகின்றதை பார்க்கின்றேன் முடிந்த அளவுக்கு நான் பாரக்கின்ற என்னுடன் பயணிக்கின்ற பல ரியல்எஸ்டேட் நிறுவன திறுவனர்கள் மற்றும சீனியர் முகவர்களுக்கு ஊக்கமும் மன தைரியமும் கொடுத்து வியாபாரத்தை மறுமலர்ச்சி அடைய ஆலோசனைகள் ஆறுதல்கள் கூட நின்று களபணியாற்றுதல்கள் என என் நிறுவனத்தின் வலிகளோடு மற்ற நிறுவனங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று உளமாற நான்வேலை செய்கிறேன் !!

ஏன் தெரியுமா என் ரியல் எஸ்டேட் தொழிலை அதில் உள்ள குறைகளோடு அதனை நேசிக்கிறேன். சோதனை காலத்தில் ஒரு வியாபார தலைவர் எப்படி நடந்து கொண்டார் என்பது முக்கியம் .என்னால் முடிந்தவரை எனர்ஜி கொடுக்கிறேன் யாருடைய. எனர்ஜியும் உறியாமல் இருக்கிறேன்.என்னை பார்த்தால் சுறுசுறுப்பை தொற்றி கொள்ள வைக்கவேண்டும் என்ற drive ல் லேயே என்னுடைய நாட்களை வாழ்ந்து கடக்கிறேன்
எந்த தடை எந்த அவமானம் எந்த பேச்சு வந்தாலும் கொண்ட குறிகோளில் மனம் உடல் உயிர் ஒரே நேர்கோட்டில் பயணித்தால் அனைத்து பிரச்சினைகளை தீர்த்து வெற்றி கோட்டை தொடலாம் என்ற உண்மையை நான் உணர்ந்து உள்ளேன்.அதுபோல தீராத மன உறுதி பலருக்கு இருப்பதில்லை!!

கடந்த இரண்டுஆண்டுகளாக எனக்கும் பலவேறு விதமான தொழில் சவால்கள் அவமானங்கள் கெட்ட பேச்சுகள் ,நன்றியற்றவர்களின் வசவுகள், வலிமை அற்றவர்களின் புலம்பல்கள் எனக்கும் இதே நெருக்கடி தான் ஆனால் என் களபணி அனுபவமும் மன உறுதியும் ஓரளவுக்கான டீம் பலமும் பிரச்சினைகளின் காயங்கள் ஆற்றி வியாபாரத்தை முன்னெடுத்து சென்று கொண்டு இருக்கிறேன்.புயலில் கவிழந்துவிட்ட மாத தவணை ரியல் எஸ்டேட் நிறுவன கப்பலை நிமிரத்தி இருக்கிறேன்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல் எஸ்டேட் முகவர்
www.paranjothipandian.in
9962265834

சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள:9841665836

குறிப்பு:அன்பு வாசகரகளே!!நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளரத்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்துசெயல்பட முடியும்-
புத்தகம வேண்டுவோர்:8344489222

#real #estate #business #agreement #montly-installment #registration #ajent #invesment #பத்திரபதிவு #ரியல்எஸ்டேட்


Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்