தமிழகத்தில் நில நிர்வாக முறை இரண்டாக இருந்தது

தமிழகத்தில் நில நிரவாக முறை இரண்டாக இருந்தது

                         






1) இருந்த நில உரிமை முறை அடுக்குமுறை உரிமையாளர்களாக இருந்தாரகள். நிலமே வைத்து இருக்க கூட உரிமை இல்லாத அடிமைகள். வயலில் வேலை மட்டும் செய்யலாம் கூலியாக விளைச்சலை பெற்றுகொள்வார்கள் . நிலத்தில் குத்தகை எடுத்து பயிர் செய்யும் உரிமை மட்டும் வைத்துள்ள குத்தகைதார்கள் விளைச்சலில் ஒரு பகுதியை வைத்துகொண்டு ஒரு பகுதியை நிலத்தின் பட்டாதாரருக்கு கொடுப்பர். நிலத்தின் பட்டாதாரர் வாங்கிய விளைச்சலை வெள்ளி பணமாக மாற்றி ஜமீன்கள் அல்லது இனாம் தாரர்களுக்கு தருவார்கள்.ஜமீன்கள் அதிலிருந்து ஒரு பகுதியை பகோடா தங்க நாணயங்களாக மாற்றி வெள்ளையர்களுக்கு கொடுப்பார்கள். இப்படி ஒரு துண்டு நிலத்தில்
அடிமை முறை உரிமை,
குத்தகை உரிமை,
குடிவார உரிமை
மேல்வார ஜமீன் உரிமை
மேல்வார இனாம் உரிமை
இறையாண்மை அரசு

என்று நில உரிமை இருந்தது. இந்த முறையை அன்னை இந்திரா காந்தி அவர்களின் சுய முயற்சியால் தமிழகத்தில் காமராஜர் மிதமாக நடைமுறைபடுத்த ஆரம்பித்து கலைஞர் அவர்கள் 1970 களில் மிக தீவிரமாக மேற்கண்ட அனைத்து உரிமைகளையும் அடித்து நொறுக்கி அரசு மற்றும் நிலத்தில் உழுதோர் என இரண்டு உரிமை முறையை கொண்டு வந்தார். அதன் பிறகுதான் நில சீர்திருத்த துறை என்று நில நிர்வாக துறை என்று உருவாக்கபட்டது.

அதன் பிறகு இன்று இருக்கிற அடிதட்டு நடுத்தர மக்களுக்கு நிலங்கள் உரிமை ஆக்கபட்டு நாம் இப்பொழுது பயன்படுத்தி கொண்டு இருக்கும் நில உடைமை மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுதுதான் பட்டா பாஸ்புத்தகமாக அனைவருக்கும் கொடுக்கப்பட்டது
அதுவே 1980 களில் UDR ஆவணமாக உருவாக்கபட்டு இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. அப்படி கணிணி மயமாக்கபட்ட பொழுது அனைவருக்கும் நிலம் பகிர்ந்தளிக்க படுவதை விரும்பாத மேல்தட்டு வகுப்பினர் அவர்கள் சம்மந்தபட்ட அதிகாரிகள் UDR இல் பல்வேறு விதமான ஆவண குழப்பங்களை உருவாக்கி வைத்துவிட்டனர்.

பிரச்சனை என்னவென்றால் நில நிர்வாக துறை இன்னும் பழைய சிலபஸிலேயே உச்சவரம்பு, பூமிதானம் ,பஞ்சம நிலம் ,கோவில் இனாம் நிலம் போன்ற வேலைகளை முடிக்காமலேயே இருப்பதால் SLR வைத்தைகொண்டு மேல்வார உரிமையை மட்டும் வைத்து இருந்த கோவில்கள் இப்பொழுது பல நடுத்தரமக்கள் வாங்கிய வீடுகளை காலி செய்ய சொல்கிறது. பல பூமிதான நிலங்கள் பூமீதான பெயிரிலேயே பட்டாவை வைத்து கொண்டு தானம் கொடுத்தேன் என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறது அதனை உண்மையாகவே தானம் செய்ய யாரும் வலியுறுத்த வில்லை. பஞ்ச நிலம் மீட்க வேண்டும் என்றும் இப்போதான் படிப்பும் அறிவும் வந்ததனால் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். udr குழப்பங்களால் பலர் சித்தம் கலங்கி போயிருக்கிறார்கள்.

இப்படி இருந்தால் இப்பொழது வருகின்ற அம்மியே உரலே பார்க்காத தலைமுறை வெளிநாட்டில் போய் கஷ்டபட்டு சம்பாதித்து இங்கு சொத்து வாங்கி அதனால் அவன் பல கஷ்டங்களை பட்டு கொண்டு இருக்கிறார்கள்
அதனால் நில நிர்வாக துறைக்கு எனது 22 அம்ச கோரிக்கைகளை அனுப்பி இருக்கிறேன் அதனை முதலமைச்சர் தனி பிரிவிற்கும் மனுவாக கொடுத்து இருக்கிறேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் ஆலோசகர்
9962265834
www.paranjothipandian.in

குறிப்பு:அன்பு வாசகரகளே!!நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளரத்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்துசெயல்பட முடியும்-

புத்தகம வேண்டுவோர்:8344489222

#நில உரிமை முறை #அடுக்குமுறை உரிமையாளர் #குத்தகை #குத்தகைதார்கள் #ட்டாதாரர் #ஜமீன்கள் #இனாம் தாரர் #பகோடா தங்க நாணயம் #அடிமை முறை உரிமை #குத்தகை உரிமை #குடிவார உரிமை #மேல்வார ஜமீன் உரிமை #மேல்வார இனாம் உரிமை #இறையாண்மை அரசு #இந்திரா காந்தி #காமராஜர் #நில சீர்திருத்த துறை #நில நிர்வாக துறை #அடிதட்டு நடுத்தர #நில உடைமை மேம்பாட்டு திட்டம் #மேல்தட்டு வகுப்பினர் #உச்சவரம்பு #பூமிதானம் #பஞ்சம நிலம் #கோவில் இனாம் நிலம்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்