ட்ரஸ்ட் சொத்துக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்!!



1) அறக்கட்டளை,நம்பகம்,டிரஸ்ட்(Trust) என்று சொல்லபடுகின்ற அமைப்புகள் எல்லாம் கல்வி ,மருத்துவம், சுகாதாரம், ஆரோக்கயம், ஆன்மீகம், உணவு, உடை, வீடு போன்றவற்றிற்கு நலதிட்ட உதவிகளை பொதுமக்கள் பெறுவதற்காகவும் அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ பயனடைவதற்க்காகவும் மக்களில் தரம் சிந்தனை உள்ளவர்களால் ஆரம்பிக்கபடுகிறது.

2) அவ்வாறு அவர்கள் ஆரம்பிக்கும்போது டிரஸ்டின் நோக்கம்,எதற்காக என்னென்ன வேலைகள் செய்ய போகின்றன டிரஸட்,எவ்வளவு தொகை ஆரம்பிக்கும் பொழுது இருப்பு வைக்க படுகிறது என்ற விவரங்களை எல்லாம் ஒரு ஆவணமாக எழுதி வைத்து இருப்பர் அதற்கு ட்ரஸ்ட் பத்திரம்(Trust Deed) என்று சொல்வார்கள்.

3) மேற்படி டிரஸ்ட் தன் கையிருப்பு தொகையிலும் அல்லது வேறு பலரின் நன்கொடையை பெற்றும் பல அசையா சொத்துக்களை வாங்கி வைத்து இருக்கும்.அப்படிபட்ட சொத்துக்களான நிலம் கட்டிடம் விற்பனைக்கு வரும் போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னென்னவென்றால்
4) டிரஸ்ட் சொத்து வாங்க போகிறீர்கள் என்றால் முதலில் பாரக்க வேண்டியது சொத்து பத்திரத்தை அல்ல!!டிரஸ்ட் பத்திரதைதான்.அதில் ட்ரஸ்ட் சொத்துக்களை ட்ரஸ்டின் நலனுக்காக விற்க இயலும் என்று கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும்.

5) ட்ரஸ்ட் பத்திரத்தில் அப்படி எழுதவில்லை,ஆனாலும் எல்லா ட்ரஸ்ட் உறுப்பினர்களும்  சேர்ந்து சொத்தை விற்க ஒத்துகொண்டு தீர்மானம் நிறைவேற்றினாலும் அதனை விற்க இயலாது.

6) என் அனுபவத்தில் நிறைய இதுபோன்ற சிக்கலில் தான் நிறைய ட்ரஸ்ட் சொத்துக்ள் இருக்கின்றன.ட்ரஸ்ட்  சாசனத்தில் டிரஸ்ட் சொத்துக்களை விற்க கூடாது என்றும் அல்லது விற்பது பற்றி எந்தவிதமான குறிப்பும் இருக்காது
7) அந்த சொத்தை விற்பதற்கு முயற்சிகள் நடக்கும் அதற்கு அந்த டிரஸ்ட் சாசனத்தை அழித்தல் திருத்தம் செய்ய முயல்வார்கள்.அதனால்  ட்ரஸ்ட் சாசனத்தின் ஒரிஜினல்  பிரதியை கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும்.

8) தேவைப்டடால் ட்ரஸ்ட் சாசனம்பதிவு செய்யபட்ட சார்பதிவகத்தில் இருந்து கூட சாசனத்தின் நகலை பெற்று உறுதிசெயது கொள்ளலாம்.
9) டிரஸ்ட் சாசனத்தில் சொத்துக்களை விற்க எந்த வழிவகையும் இல்லை என்றால் டிரஸ்டி உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் அனுமதி கேட்க வேண்டும்.

10) நீதிமன்றம் அனுமதி உடனடியாக தராது நன்கு ஆராய்ந்து டிரஸ்டின் நன்மைக்காக வளரச்சிக்காக விற்றுதான் ஆகவேண்டும் என்று நினைத்தால் நீதிமன்றம் விற்க அனுமதி கிடைக்கும்.

11) விற்க அனுமதி மட்டும் இல்லாமல் யார் அதனை வாங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்காணிக்கும் பெறும்பாலும் அதே நோக்கமுடைய இன்னொரு ட்ரஸ்டிற்குதான் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கும்.
12) எனக்கு தெரிந்து சென்னை ஓ.எம்.ஆர் பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல் என்று ஒரு டரஸ்டு மருத்துவமனை இருந்தது.பிறகு காஞ்சி சங்கரா மருத்துவமனையாக மாறியது பிறகு அந்த மருத்துவ மனை விற்பனைக்கு வந்தது அதனை வாங்குவதற்கு அதிக விலை கேட்டு ஶ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவனம் வியாபரத்தை முடித்து விட்டது .

13) ஆனால்  குறைவான விலை கேட்டு இருந்த குளோபல் ஹாஸ்பிட்டல் நீதிமன்றம் நாடி டிரஸ்டின் நோக்கபடி விற்பனை நடைபெறவில்லை என்றும்அவர்களுக்கு மருத்தவமனை நடத்துகின்ற அனுபவம் இருப்பதற்காக்கவும் பணிபுரியும் பணியாளர்களை அப்படியே பணியில் வைத்துகொள்வோம் என்ற உறுதிகளை கொடுத்தற்காக ,
14) ஶ்ரீராம் பிராப்பர்டீஸ் வியாபார ஒப்பந்ததை ரத்து செய்துவிட்டு குளோபல் மருத்துவமனையின் கேட்டு இருந்த குறைவான விலைக்கே வாங்கி கொள்ள அனுமதி அளித்தது டிரஸ்டின் நோக்கம் தான் முக்கியமென நீதிமன்றம் கருதுகிறது.

15) 50ஆண்டுகளுக்கு முன்பு பாகபிரிவினை,தான செட்டில் மெண்டு உயில் எழுதும் நிலசுவானதாரர்கள் எதாவது ஒரு சொத்தை விற்க கூடாது என்றும் அதில் இருந்து வரும் வருவாய் கொண்டு குலகோவிலுக்கு பூசை அன்னதானம் பிராமணர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்றும் எழுதியிருப்பார்கள். இதுவும் ஏறக்குறைய விற்க இயலாத டிரஸ்டுதான்.
16) டிரஸ்டு சொத்தை பொறுத்தவரை டிரஸ்டு சாசனத்தில் விற்காலம் என்று எழுதி இருந்தும் சொத்தை விற்க அனைத்து டிரஸ்டகளும் ஒத்துகொண்டால் அந்த டிரஸ்டு சொத்தை வாங்கலாம் அவ்வாறு இல்லையெனில் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வேண்டும் என்று நினைவில் கொண்டால் போதுமானது.

இவற்றையும் விற்க போகிறோம் என்றால் நீதிமன்றம் அனுமதி கட்டாயம் வாங்க வேண்டும்.

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில் முனைவர்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#bipolar  #Fixed #deposit  #உணர்வுகள் #உணரச்சிகள் #வெளிநாடு #சொத்த #Feelings #Feelings #Abroad #Property

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்