அசையும் சொத்து அசையா சொத்து என்பது என்ன? புரிந்துகொள்ள வேண்டியவை!!

  • முதலில் நாம் சொத்து என்றால் என்ன என்று தெரிந்தால்தான் அசையும் சொத்து அசையா சொத்து என்பதை நாம்  பிரித்து தெரிந்து கொள்ள முடியும்.
  • ஆக சொத்து என்று எதை சொல்கிறோம் என்றால் அதிலிரிந்து தொடர்ந்து நமக்கு இலாபமோ வருவாயோ வந்து கொண்டு இருக்கும். அதனை விற்று வெளியேறலாம். அதனை வைத்து கடன் பெறலாம் அதனை வைத்து பராமரித்து இலாபம் பெறலாம்.
  • அசையும் சொத்துக்கு உதாரணம் தங்க நகைகள் பங்கு சந்தை முதலீடுகள் போன்றவை நாம் ரியல் எஸ்டேட்டில் அசையும் சொத்தை பற்றி அதிகம் பேச தேவை இருக்காது.
  • அசையா சொத்துக்கு உதாரணம் நிலம் தான். அப்படிபட்ட அசையா சொத்தை வாங்கும் போதும் விற்கும் போதும் பதிவு செய்ய வேண்டும் என்று பதிவு சட்டம் சொல்கிறது.
  • ரியல்எஸ்டேட் தொழில் முழுக்க முழுக்க அசையாசொத்தை வியாபாரம் செய்வது தான் எனவே பதிவு செய்வது மட்டும் இல்லாமல் அதன் மதிப்பை கணக்கிட்டு முத்திரை தாள் வாங்க வேண்டும். அப்பொழுது எது அசையும் சொத்து அசையா சொத்து என்று குழப்பங்கள் வரும் அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
  • அசையா சொத்து என்பது  கால நிலம் மனைகள் ,வயல்காடு ,பண்ணைகள் தோட்டங்கள் அதன்மீது இருக்கின்ற கட்டிடங்கள், வீடுகள் ,கிணறுகள், மின் மோட்டார்கள் , அதன்மீது தலைமுறை தலைமுறையாக இருந்துவிடும் உரிமைகள், மேலும் பாதை ,வழி,வண்டிபாட்டை,சாலை மீதுள்ள உரிமைகள், படகுத்துறை மீன் வளங்கள் ஆற்று நீர்,ஏரி நீர் உரிமை போன்றவற்றில் உள்ள உரிமைகள் எல்லாம் அசையா சொத்துக்கள்,மலை இடுக்குள்ளில் இருந்து வரும் நீர் சுனைகள் சூரிய வெளிச்சம் (சோலார் பிளாண்ட் போட்டவுடன் இதற்கு டிமாண்ட் கூடிவிட்டது).
  • ஒரு தொழிற்சாலை இருக்கிறது அதில் பல எந்திர தளவாடங்கள் தரையோடு தரையாக பிணைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அது அசையா சொத்து.அந்த எந்திர தளவாடங்களை பிரித்து எடுக்க முடியும் ஆனாலும் பிரித்தெடுக்காமல் விற்பனை செய்தால் அதனையும. அசையா சொத்தாக கணக்கில் கொண்டு அதற்கும் பதிவு கட்டணம் கட்டி பதிய வேண்டும்.
  • மேற்படி எந்திரங்களை பதிவு செய்யாத ஆவணத்தினால் உரிமை மாற்றினால் அந்த உரிமை மாற்றம் செல்லாது.அதுவே பிரித்து எடுத்து பதிவு செய்யாமல் விற்காலாம்.கொஞ்சம் எளிமையா சொல்கிறேன் வயற்காடு நிலத்துடன் ஒரு கிணற்று பம்பு செட் இருக்கிறது.பம்பு செட் இன்ஜின் கழட்டி தனியா விற்காலாம்.அதை விற்பனையை பதிய தேவையல்லை.
  • அதுவே அந்த பம்பு செட் இருக்கும் நிலத்தை விற்கும் போது அதன் மேல் இருக்கும் பம்பு செட்டையும் விற்பனை செய்தால் அந்த இடத்தில் பம்பு செட்டும் அசையா சொத்தாக மாறிவிடுகிறது. அதாவது பூவோடு நாறும் போல வயலோடு பம்புசெட்.
  • அதேபோல் நிலம்  ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி பேரில் இருக்கிறது. அல்லது கூட்டு நிறுவனத்தில் (partnership firm) பேரில் இருக்கிறது அப்பொழுது பங்காக(share) ஆக கணக்கிடும் போதும் அந்த இடத்தில் நிலம் அசையும் சொத்தாக மாறிவிடும் அதேபோல் ஒரு கம்பெனியை கலைக்கும்போது அதிலுள்ள நிலங்கள் எல்லாம் அசையும் சொத்தாக மாறிவிடும் அப்பொழுது அவற்றை பகிர்ந்தளிக்கும் போது அதனை அசையும் சொத்து என்பதால் பதிவு தேவை இல்லை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அதாவது நிலமோ அதன் மேல் பிணைக்கபட்டு இருக்கும் பொருளோ அசையா சொத்து ஆனால் அதன் இடம் பொருள் ஏவல் க்கு  ஏற்றவாறு சில இடங்களில் அசையும் சொத்தாக மாறிவிடுகிறது என்பதை தெரிந்து கொள்ளல் வேண்டும்.
  • மேலும் நிலமோ நிலத்தில் இருந்து கிடைக்கும் வேறு பயனோ நிலத்துடன் அனைத்து பொருட்களையும் உள்ளடக்குவது  தான் அசையா சொத்துக்கள் ஆகும்.  நிலம் அசையா சொத்து சரிதான் அதென்ன நிலத்தில் இருந்து வரும் பிற பயன்களையும் அசையா சொத்தில் சேர்க்க படுகிறது.
  • ஒரு நிலத்தில் இருந்து வரும் லாபமும் வருங்கால வாடகையும் நிலத்தில் பயனாக கருதலாம். வீட்டு வாடகை இருப்பவர்களிடம் இருந்து வரும் வீட்டு வாடகை தொகையை வசூலிப்பது ஒரு பயன்ஆகும் அந்த பயனையும் மதிப்பீடு அசையா சொத்தாக கணக்கிடலாம்.
  • ஒரு நிலத்தில் தின சந்தை வாரசந்தை பொதுகூட்டம் கட்சிகூட்டம் சரக்கஸ்,கண்காட்சி,பொருட்காட்சி நடத்துவதற்கான உரிமை மற்றும் அதிலிருந்து வரும் வருமானம் அசையா சொத்து என்றே கணக்கிடப்படும்,
  • அசையும் சொத்து என்பது நிலத்தில் நிரந்தரமாக பிணைக்கபட்டு இருக்காது அறுத்து எடுக்கின்ற பயிர்கள், புல்,தோட்டங்கள் மரங்கள் என அனைத்தும் அசையும் சொத்து என்றே கணக்கிடபடும். அதனால் மரங்களில் இருந்து வரும் பயன்கள் பழங்கள் அதன் சாறுகள்,காய்கள்,இலைகள் கள்ளு போன்றவை எல்லாம் அசையும் சொத்து இதனை பதிவு செய்யாமல் உரிமை மாற்றம் செய்யலாம்.
  • இப்படி அசையும் அசையா சொத்தை பற்றி தெளிவு இருந்தால் எதனை பதிவு செய்ய வேண்டும் எதனை பதிவு செய்யலாம் என்ற விவரம் பிடிபடும்.

  • சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!! இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
    தொடர்புக்கு : 9841665836

    ( குறிப்பு ); சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
  •  
  • இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#அசையும்சொத்து #அசையாசொத்து #பங்கு #சந்தை #முதலீடுகள்  #ரியல் #எஸ்டேட்டி #பதிவு #சட்டம் #முத்திரைதாள் #நிலம் #மனைகள் #வயல்காடு #பண்ணைகள் #தொழிற்சாலை #கூட்டுநிறுவனம் #partnership #firm #share #வாடகை #உரிமை #share-market #invesment #stamp #land #plot #company #asset #fram #indestry
 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்