கிரய பத்திரத்தின் போது எழுதி கொடுப்பவருக்கு நில உரிமை இருக்கிறதா என்று சார்பதிவாளர் விசாரிக்கலாமா? தெரிந்து கொள்ள வேண்டிவைகள்!!



           


1) சார்பதிவாளர்கள் கிரய பத்திரத்தை பதிவுக்கு நீங்கள் தாக்கல் செய்ய சமர்பிக்கும்போது உண்மையான உரிமையாளர் தான் சொத்தை விற்கிறாரா அவருக்கு உரிமை கூறு இருக்கிறதா தாய்பத்திரம் சரியாக இருக்கிறாதா என்று இப்பொழுது சோதனை செய்கிறார் தானே

2)எத்தனை பங்கு விற்பவருக்கு இருக்கிறது இத்தனை பங்கு இல்லை என்று பாகபிரிவினை பத்திரங்களை அலசும் சார்பதிவாளரை பாரத்து இருக்கிறேன்.

3) ரியல் எஸ்டேட் ஏஎஜண்டுகளின் தலையிலுள்ள நுங்கை அந்த பதிவு முடிவதற்குள் சார்பதிவாளர் பிதுக்கி எடுத்துவிடுவார் சில நேரங்களில் பத்திர பதிவில் எந்த தடங்கலும் வரகூடாது சார்பதிவாளரை  மகா கணம் பொருந்திய மகானாகவே ரியல்எஸ்டேட் ஏஜெண்டான நான் பார்ப்பேன்.

4) ஆனால் பதிவு சட்டம் அவருக்கு ஆவணங்களை சோதிக்கும் உரிமை கொடுக்கவில்லை. ஒருவர் பத்திரப் பதிவுக்கு தாக்கல் ஆகும் ஆவணத்தில் உள்ள சொத்தை அதில் அவருக்கு முழு பங்கு அல்லது உரிமை அல்லது உரிமை பட்டம் இருக்கிறதா என்று மனநிறைவு பதிவாளர் அடைய வேண்டும்என்று அவசியம் இல்லை அதை வைத்து பதிவை நிறுத்த கூடாது சட்டமும்  நீதிமன்றத் தீர்ப்பும்கூட சொல்கிறது .

(அதன் விவரம் ஷேக் ரஹ்மத்துல்லாஹ் எதிர் ஷேக் சமயத்துல காக்சி ஒன்று அம்பி எல் ஆர்  85 எபிபி)

5) ஏன் இப்படி சட்டம் சொல்லுது சார்பதிவாளர் அதெல்லாம் கொஞ்சம் சரிபார்த்தால் அப்பாவி மக்கள் ரியல் எஸ்டேட்னால் பாதிக்கபடாமல் இருப்பார்களே வெளிநாட்டில் கஷ்டபட்டு சம்பாதிக்கிற பணத்தில் சொத்து வாங்குறோமே சார்பதிவாளர் பதியும் போது சரிபார்த்து சொன்னால் மக்களுக்கு பயனாகதானே இருக்கும் என்று நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது.

6) இந்த பதிவு சட்டம் நிலத்தில் மேல்வார உரிமை வைத்து இருந்த ஜமீன்கள் விளைச்சலுக்கு வரி கட்ட வேண்டாம் என்று மானியம் அனுபவித்த மேலதட்டு இனாம்தாரர்கள்,நிலத்தை உச்சவரம்பு இல்லாமல் வைத்து இருந்த பெரும்தனக்காரர்கள்,பெண்களுக்கு சொத்துரிமை இல்லாது அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு நிலங்கள் இல்லாத காலத்தில் போடபட்ட பதிவு சட்டம்

7) அந்த காலத்தில் பத்திர பதிவுக்கு வருபவர்கள் இப்பொழுது வருகிறது போல அடிதட்டு மற்றும் நடுத்தர மக்கள் அல்ல.எல்லாம் மிராசு மிட்டாக்கள் அப்பொழுது சார்பதிவாளர் நில உரிமை இருக்கிறதா உரிமை கூறு இருக்கிறதா என்றெல்லாம் கேட்க முடியாது.

8) அந்த காலத்து land tenure எல்லாம் சார்பதிவாளருக்கு துல்லியமாக புரிய வாய்ப்பில்லை அதனால் பதிவு நடவடிக்கை செய்தால் மட்டும் போதும் உரிமை இருக்கு இல்லை என்பதை எல்லாம் நீதிமன்றம் பார்த்துகொள்ளும் அப்பொழுது சட்டம் போட்டு விட்டார்கள்.

9) காலம் மாறிவிட்டது தலைமுறை மாறிவிட்டது கல்வி பரவலாக்கப்பட்டுவிட்டது சம்பாத்தியம் நிலம் பகிரபட்டது ஆனால் அதற்கு ஏற்றார் போல் பழைய சட்டம் customized ஆகாமல் அப்படியேதான் இருக்கிறது.

10) பதிவு துறை உத்தரவுகளையும் சுற்றறிக்கைகளையும் போட்டு சார்பதிவாளரை நிர்வாகம் செய்து கொண்டு இருக்கிறது.விவரம் தெரிந்தவர்கள் நீதிமன்றம் சென்று பதிவு துறை உத்தரவுகளை சட்டத்தை காட்டி தடை பெற்று விடுகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.


இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில் முனைவர்
தொடர்புக்கு : 9841665836

(குறிப்பு):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்டநிலம் உங்கள் எதிர்காலம்புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#கிரயபத்திரம் #பவர் #பஞ்சாயத்து #approved #dtcp #article #பஞ்சமநிலம் #பூமிதானநிலம் #அனாதீனநிலம் #நிலஅளவை #ஜமீன்நிலம் #அடமானம் #சுவாதீனம் #சான்றிதழ் #சார்பதிவகம் #பத்திரபதிவு #சொத்து #சர்வே #இனாம்கள் #மானியம் #உயில் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்