பரிவரத்தனை பத்திரம் (Deed of Exchange)புரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!!

                      

1) கிரயபத்திரம் கேள்வி பட்டு இருக்கிறோம் அது என்ன பரிவரத்தனை பத்திரம் எனகிறீர்களா? கிரயபத்திரத்தில் இடத்தை கொடுக்கும்போது கைமாறாக பணத்தை  பெறுவோம். ஆனால் பரிவரத்தனை  பத்திரத்தில் கைமாறாக வேறு ஒரு இடத்தை பெறுவோம்.

2) கிரயம் என்பது பணம்மூலம் மாற்றும் முறை பரிவரத்தனை என்பது நிலம்மூலம் மாற்றும் முறை சரி இந்த மாதிரி நிலம் மூலம் மாற்றும் எங்கெல்லாம் நடக்கிறது. என்பதை பார்ப்போம்.

3) உங்கள் நிலத்திற்கு பக்கத்தில் ஒட்டியுள்ள  நிலம் விற்பனைக்கு வருகிறது. நிலத்தை விற்பனை செய்பவருக்கு உங்களுடைய வேறு ஒரு இடத்தில் இருக்கும் நிலம் தேவைபடுகிறது. அந்த மாதிரி நேரத்தில் சொத்தை பரிமாறி கொள்வது பரிவரத்தனை பத்திரம்  (Deed of Exchange ) ஆகும்.

4) இன்னொரு உதாராணம் கிராமங்களில் இரண்டு பங்காளிகள் பட்டாபடி புலப்பட புரிதல்படி சர்வே எண் 12/1 ஒருநபருக்கும் 12/2 ஒரு நபருக்கும் உரிமை ஆனால் அனுபவ படி மாற்றி அனுபவிக்கின்றனர்.

5) அதாவது சர்வே எண் 12/1 உரிமையாளர் சர்வே எண் 12/2 ஐ அனுபவிக்கிறார். சர்வே எண் 12/2 உரிமையாளர் சர்வே எண் 12/1 ஐ அனுபவிக்கிறார்.சரி பட்டாபடி இடத்தை மாற்றி கொள்ள வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம்.அவர்கள் அவர்களுக்கான பங்கைதான் அனுபவிக்கிறார்கள்.

6) யூடீஆர் பட்டா செய்த போது நடந்த பல தவறுகளில் இதுபோல பட்டாவை உரிமையாளரை மாற்றி போட்டுவிட்டு போய்விட்டார்கள். இப்பொழுது அனுபவத்தையும் பட்டாவையும் நேர்கோட்டில் கொண்டு வர  பரிவரத்தனை பத்திரம் போட்டு கொள்கிறார்கள்.

7) பாகபிரிவினையில் இரு சகோதரர்களுக்கும் நன்செய் கிணற்று உரிமையுடன் 5 ஏக்கரில் சரிபாதி புன்செய் கிணற்றுடன் 8 ஏக்கரில் சரிபாதி பாகபிரிவினை செய்துவிட்டார்கள் அனுபவத்து வருகிறார்கள்.
8) இரு சகோதரர்களுடைய வீட்டம்மாக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் கிணற்றடியில் சண்டை பிடித்து கொண்டே இருப்பார்கள் அப்பொழுது சகோதரர்கள் இருவரும் நீ நன்செய் நின்னுக்கோ நான் புன்செய் ல நின்னுக்குறேன்னு சொல்லிக்குவாங்க.

9) அது மாதிரி நேரத்துலேயும் ஒருத்தர் பங்கை இன்னொருத்தர் பரிவரத்தனை செய்து கொள்வார்கள்.பரிவர்த்தனைக்கு கிரயத்தற்கு என்ன முத்திரை தீர்வையோ அதே முத்தரை தீர்வைதான் அதில் எந்த சலுகையும் இல்லை.

இப்படிக்கு:
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில்முனைவர்.
9841665836.

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்டநிலம் உங்கள் எதிர்காலம்புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#கிரயபத்திரம் #பரிவரத்தனைபத்திரம்  #Deed  #உரிமை #யூடீஆர்  #முத்திரை #சொத்து  #இனாம்கள் #மானியம் #உயில் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா#கடன் #அடமானம் #mortage #பத்திரம்பதிவு #கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #செட்டில்மெண்ட் #சிட்டா

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்