வளர்தொழில்- நடுத்தர அடிதட்டு தமிழ் மக்களின் தொழில்முனைவுக்கான வழிகாட்டி..!!

                   

தமிழர்களின் தொழில் முனைவு தன்மை சுய வளர்ச்சியை தன்னம்பிக்கையை அதிகபடுத்தவும் அதற்கான மேடையாகவும் பாலமாகவும் பல ஆண்டுகாலமாக தொடர்ந்து இயங்குகின்ற பத்திரிக்கை வளர்தொழில் ஆகும்.

தமிழ்மட்டும் தெரிந்த இரண்டாம் நகர கிராமங்களின் இளைய தலைமுறையினருக்கு சுய வளர்ச்சி தொழில் வளர்ச்சி பற்றி தொழில்முனைவு தன்மை கற்றுகொடுக்கின்ற வரபிரசாத பத்திரிக்கை வளர்தொழில்!! பல பத்திரிக்கை துறை ஆற்றலாளர்கள் பலருக்கு அடிதளமாக வளர்தொழில் இருந்து இருக்கிறது.

என் வாழ்க்கையில் வளர்தொழில் மிக முக்கியமான அங்கம்! தொழில் ஆரம்பித்த புதிதில் தொழில்முனைவு தன்மையை வளர்த்து எடுக்க எனக்கு கையேடாகவே இருந்தது.மேலும் என்னை பற்றி என் ரியல் எஸ்டேட் தொழில் பற்றி 2009 ஆண்டு இரண்டு பக்க அளவில் கட்டுரை எனக்கு பெரிய பூரிப்பை உணரச்சிபூரவமான பலத்தை கொடுத்தது.

என்னை போல பல சிறு தொழில் செய்கின்றவர்களுக்கு இதுபோல pride feeling நம்ம வளர்தொழில் கொடுத்து இருக்கிறது என்பதை நான் சந்திக்கும் நபர்கள் எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொண்டதை நான் கேட்டு இருக்கிறேன்.
முதன் முதலில் 2008 களில் ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு நாள் தொழில் முனைவு பயிற்சிகளை வளர்தொழில் நடத்தியது அதில் கலந்து கொண்ட நான் அதுமுதல் வளர்தொழில் நடத்தும் அனைத்து பயிற்சிகளிலும் தொடர்ந்து கலந்து கொண்டு என்னை மேம்படுத்தி கொண்டு இருக்கிறேன்.

கடந்த சில ஆண்டாக ரியல் எஸ்டேட் சம்மந்தபட்ட என் கட்டுரைகளை தொடரந்து பிரசுரித்து என்னை அதிக அளவில் ஊக்கபடுத்தினார் வளர்தொழில் ஆசிரியர் மேலும் நான் எழுதிய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்திற்கு வழிகாட்டியதும் வளர் தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் அய்யா அவர்கள்.
வளர்தொழில் பத்திரிக்கை போல “தமிழ் கம்ப்யூட்டர் “கணிணி பற்றிய அறிவை தமிழ்மக்களுக்கு கொண்டு சேர்த்து கொண்டு இருக்கிறது. கணிணி துறை சார்ந்தவர்களுக்கு   தமிழர்களுக்கு பயனுள்ள மாத இதழ்.

கடந்த சில வருடங்களாக லீட் அகடாமி  என்ற பெயரில் தொழில் முனைவு workshop களை தொடர்ந்து நடத்துகிறது வளர்தொழில்
போட்டோ எடுக்கும் பயிற்சி,குறும்படம் எடுக்கும் பயிற்சி ,பாதுகாப்பு கேமரா பயிற்சி,அமேசான் Flipkart போன்ற ஆன்லைன் பிஸினஸ் பயிற்சி,social media பயிற்சி என பல பயிற்சிகளை குறைந்த கட்டணத்தில் நடத்துகிறது.தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரத்திலிருந்து பலர் வந்து கற்று கொள்கிறார்கள்.பயன் பெறுகிறார்கள்.இதனை அய்யா ஜெயகிருஷணன் அவர்களின் மகன் கெவின் அவர்கள் திறம்பட ஒருங்கிணைக்கிறார்.

இந்த லீட் அகடமி பயிற்சியில்  கடந்த சில மாதங்களாக நானும் ரியல் எஸ்டேட் கல்வியை என்னுடைய அனுபவ புரிதலை
(https://valar.in/product/events/real-estate-training-in-chennai) பயிற்றுவிக்கும் பயிற்சியாளாராக இருக்கிறேன்.எங்கு கற்றோமோ அங்கே பாடம் எடுக்க வருவதும் ஒரு உள்ள உவகைதான்.

மாறிவரும் ஆன்லைன் உலகில் மாத இதழ் படிப்பது குறைந்து வருவதால் கால மாற்றத்திற்கு ஏற்ப www.valar.in இணைய பத்திரிக்கையும் பிரபலமாகி வருகிறது.அடிதட்டு நடுத்தர தமிழ்மக்களின் தொழில் முனைவுக்காக பணியாற்றும் அய்யா ஜெயகிருஷ்ணன் அவர்களோடும் வளர்தொழில் குழுவினரோடும் பயணிப்பது.

பெருமை மிகுந்த தருணம்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில்முனைவர்
www.paranjothipandian.in
9841665836.


(குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#தொழில்முனைவு #பத்திரிக்கை #வளர்தொழில் #சிறு தொழில்  #workshop #குறும்படம் #ஆன்லைன்பிஸினஸ் #social media # லீட்அகடமி #entrepreneur #realestate #Realestate_consultant #Realestate_analyst #public #interest #information #valathozhil #press

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்