வீணாண முத்திரைதாளை அரசிடம் கொடுத்து திரும்ப பணம்பெறுவது எப்படி?

      


1) ஒரு சொத்து வாங்குவதற்காக கிரய பத்திரம் உருவாக்க முத்திரை தாள் சில இலட்சங்களுக்கோ சில ஆயிரங்களுக்கோ வாங்கிவிட்டீர்கள்.முத்திரைதாளில் கிரய ஷரத்துகள் எல்லாம் அடித்து வைத்துவிட்டீர்கள் ஆனால் கிரயம் நடக்கவில்லை நின்று போய்விட்டது .அடித்து வைத்த பத்திரம் வீணாகிவிட்டது.

2) இருபதாயிரம் ரூபாய்கு முத்திரைதாள் வாங்கி பத்திரம் உருவாக்கும் அன்று தேங்காய் எண்ணெய் பாட்டில் உடைந்து முத்திரைதாள் முழுதும் தேங்காய் எண்ணெய் அபிஷேகம் நடந்து முத்திரைதாள் வீணாகிவிட்டது.

3) 17 ஆயிரம் ரூபாய்கான பத்திர ஆபிஸ்கிற்கு டைப்பிங் அடித்து வைத்த முத்தரை தாளை வீட்டம்மாவுடன் சண்டை போட்டு துண்டு துண்டாக கிழித்துவிட்டார்.இன்னொரு அம்மா சங்கீதா ஓட்டல் சாம்பார் வடை பார்சல் டப்பாவுடன் 6ஆயிரம் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரை   வீணாக்கவிட்டார்.

4) இப்படி முத்திரை தாள்கள் எழுதியோ எழுதபடாமலோ இருந்து பதியமுடியாமல் அல்லது மேற்சொன்ன சம்பவங்கள்படி வீணாகிவிடும்.அப்பொழுது பணம் வீணாக போய்விட்டதே என்று அழுவார்கள்.

5) பத்திரம் வாங்கிய ஆறு மாத்த்திற்குள் சென்றால் கழிவு போக அரசிடம்பணத்தை திருப்பி வாங்கலாம்.அதன் வழிமுறைகள் பின்வருமாறு:
6) எப்பொழுது முத்திரைதாள் வாங்கினாலும் முடிந்தவரை அரசு கருவூலத்தில் வாங்க பாருங்கள்.முத்திரைதாள் விற்பனையாளரிடம் வாங்கினால் எந்த மாவட்டத்தில் பதிவு செய்கிறீர்களோ அந்த மாவட்டதிலேயே இருக்கும் அல்லது எந்த சார்பதிவகமோ அந்த சார்பதிவக முத்திரைதாள் விற்பனையாளரிடம் வாங்கினால் முத்திரைதாள் வீணாகிவிட்டால் திருப்புதொகை பெற ஏதுவாக இருக்கும்.

7) வீணாகி போன முத்திரை தாளை அனைத்தையும் ஒரு மனுவுடன் இணைத்து நீங்கள் எந்த முகவரியில் வசிக்கிறீர்களோ அந்த ஆட்சி எல்லைக்குட்பட்ட வட்டாட்சியருக்கு மனு செய்ய வேண்டும்.

8) மேற்படி மனுவை பரிசீலித்து வட்டாட்சியர் பதிவுதுறையின் மாவட்ட பதிவாளருக்கு முத்திரைதாள் எண்கள் மற்றும் அதன் வாங்கிய விவரங்களை கொடுத்து அதன் மெய்தன்மையை அறிந்து கொள்ள சான்றகேட்டு கடிதம் அனுப்புவார்கள்.

9)  கடித்ததின் நகல் நமக்கும் நம் பகுதியின் வருவாய் ஆய்வாளருக்கும் கிடைக்கும் வருவாய் ஆய்வாளரும் நம்மை விசாரித்து வட்டாட்சியருக்கு அறிக்கை சமர்பிப்பார்.அதே நேரத்தில் மாவட்ட பதிவாளரும் சம்மந்தபட்ட முத்திரை தாள் விற்பனையாளரிடம் அறிக்கை பெற்று மேற்படி முத்திரதாள்கள் மெய்தன்மை உடையதா என்று சான்று அளித்து வட்டாட்சியருக்கு அனுப்புவார்.
               


10) மேற்படி வேலைகள் தானாக நடக்காது நாம்தான் மாவட்ட பதிவுதுறைக்கும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கும் நடந்து பைல்களை நகர்த்த வேண்டும்.

11) அனைத்து வேலைகளும் முடிந்த உடன் நம்முடைய பைல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு கிளர்க்கிடம் வந்து விடும் தொடர்பின் தொடரலைக்கு பிறகு கழிவு போக மீதி தொகையை காசோலையாக உங்களிடம் வட்டாட்சியர் வழங்கிவிடுவார்.

12) முடிந்தவரை முத்திரைதாளை வீணடிக்காமல் இருப்பதே மிகவும் நல்லது. அதிக கவனத்துடன் சமயோசித புத்தியுடன் பத்திரபதிவு நேரங்களில் இருத்தல் வேண்டும்.

இப்படிக்கு:
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில்முனைவர்.
9841665836.

(குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்டநிலம் உங்கள் எதிர்காலம்புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#முத்திரைதாள்  #வட்டாடசியர்  #stamppapers #registration  #patta  #chitta    #Documentation #Ec #plots #na_plots #na_sites #sites#bda_sites #bmrda_sites #bda_plots #bmrda_plots    #பத்திரம்  #பதிவு #முத்திரைதாள் #பட்டா #கடன் #அடமானம் #mortage #பத்திரம்பதிவு #கிரயம் #செட்டில்மெண்ட்#சிட்டா #அடங்கல்




Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்