டச்சு அடிமை வியாபாரிகள் இன்று கல்லறைகளில்!!!

  டச்சு அடிமை வியாபாரிகள் இன்று கல்லறைகளில்!!!




வீரானிகடே ஊஸ்ட்டிடின்சே கம்பெனிகே (Vereenigde Oostindische Compagnie) என்ற கம்பெனியை சுருக்கமாக VOC என்று சொல்வார்கள்.ஆப்பிரக்காவில் இருந்து அமெரிக்க கஞ்சா தோட்டத்திற்கும் கரும்புத் தோட்டத்திற்கும் அடிமைகளை ஏற்றுமதி செய்த மிகப் பெரிய கம்பெனி!! கருப்பின அடிமை வியாபாரம் தாண்டி ஒரு வெரைட்டிக்காக இந்தியாவிற்குள் 1600 களில் தன்னுடைய VOC கப்பல்களை அனுப்பி விடுகின்றனர். ஏற்கனவே வாஸ்கடகாமா என்ற போர்ச்சுக்கீசிய கேப்டன் போர்ச்சுகீசுக்கான இந்திய வைஸ்ராய் ஆக நிறைய மசாலா பொருடகளையும் அடிமைகளையும் கொச்சினில் இருந்து ஏற்றுமதி செய்துக் கொண்டு இருப்பதை ஒல்லாந்தர்கள் அறிந்து இருந்தார்கள். அதனால் ஒல்லாந்தர்களின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியது! இந்தியாவின் அரபிகடல் பகுதிகளில் போர்ச்சுக்கீசியர்கள் வலிமையாக இருந்ததால். ஒல்லாந்தர்கள் சோழ மண்டல கடற்கரையில் ஆந்திரா தமிழ்நாடு இலங்கை கடற்கரை ஓரங்களில் செட்டில் ஆகி இந்தியாவில் வயற்காட்டில் அடிமைகளாக இருந்த மக்களை குறைந்த விலைக்கு வாங்கி கொண்டு கப்பலில் ஹலாந்துக்கும் கரிபீயன் தீவிற்கும் கொண்டு சென்றனர். அப்பொழுது கப்பலில் போன நம்ம பங்காளிகள் அவ்கேயே செட்டில் ஆகிவிட்டு் இருக்கிறார்கள். ஆட்டுக் குட்டிய ஏற்றுவது போல ஏற்றிக்கொண்டு சென்று இருப்பார்கள். அப்படி அடிமை வியாபராம் தமிழகத்தில் நடைபெற்ற முதல் இடம் இந்த பழவேற்காடு! அவர்கள் இதற்கு புலிகாட் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.இவரகள் கட்டிய ஜெல்ரியா என்ற கோட்டை பிரிட்டிஷகாரன் அடையாளம் தெரியாமல் தகர்த்துவிட்டு இருக்கிறார்கள்! கல்பாக்கம் செட்ராஸ் கோட்டையும் இவர்களுடையது தான் மிக வலிமையான தோற்றத்துடன் இன்றும் இருக்கிறது. இந்தக் கோட்டையப் பார்த்தால் பாளையககாரர்கள் கோட்டை எல்லாம் சும்மா தான் இதுல வேற தேவேந்திர் கோட்டை, யாதவர் கோட்டை, பறையர் கோட்டை, மறவர் கோட்டை ன்னு மதுரைக்கு கீழே போன தெருவிளக்கு கம்பத்துல எழுதி சிரிப்பு காட்டுறானுங்க நம்மாளுங்க!! கொஞ்சும் செட்ராஸ் வந்து பார்த்துட்டு் போன நல்லா இருக்கும். நாகபட்டினத்தில் விஜி சின்னான் என்ற கோட்டையை கட்டி இப்பொழுது அங்கு மிச்சங்கள் மட்டும் இருக்கிறது. ஆனால் வேளாங்கண்ணி என்ற சமய நிறுவனம் பெரிதாக வளர்ந்துவிட்டது. இது இல்லாம் நாகபட்டினத்தில் இருந்து இலங்கைக்கு இரண்டு மணிநேரத்தில் கடல் வழியாக தொட்டு விடும் தூரத்தில் உள்ள இலங்கை -யாழ்பாணம் இராமேசுவரத்தில் இருந்து ஒரு மணிநேர கடல் பயணதூரமுள்ள மன்னார் பகுதிகளிலும் கோட்டைக் கட்டி அடிமை வியாபாரத்தை சிறப்பாக செய்து இருக்கிறார்கள் நான் தமிழ்நாட்டில் உள்ள கோட்டை சிதிலங்களை பார்த்து விட்டேன் .இவர்களின் கோட்டையை விட இவர்களின் கல்லறை கம்பீரமாக இருக்கிறது. கல்லறைகளில் செதுக்கிய சிற்பங்கள் உருவங்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது. (எனக்கு ஒரு கல்லறை முன்கூட்டியே நாமே இப்படி டிசைன் செஞ்சிட வேணும் என்று முடிவு செய்துவிட்டேன்.) நாகபட்டினம்,செட்ராஸிலும் கல்லறைகளை பார்த்து உள்ளேன் ஆனால் அவை பழவேற்காடு போல தூய்மையாக இல்லை ஒவ்வொறு கல்லறையும் ஒரு கவிதை போல அழகாக உருவாக்கி இருக்கிறார்கள் .நன்றாக வாழ்ந்து இருக்கிறார்களோ இல்லையோ நன்றாக இறந்து இருக்கிறார்கள் நம்மை அடிமை வியாபாரம் செய்த ஒல்லாந்தர்கள் இங்கு தான் கல்லறையாகி இருக்கிறார்கள்!! அதென்னப்பா ஒல்லாந்தர்கள் அவர்கள் தான் டச்சு மொழி பேசும் டச்சுகாரர்கள் அவர்கள் தான் ஒல்லாந்தர்கள் என்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் www.paranjothipandian.in #tachchu #nagappattinam #ollantharkal #cetras #fort #Vereenigde_Oostindische_Compagnie #sculpture #cemetery #paranjtohi_pandian #author #consulting #writer #trainer #realestate #elangai #ship
Show less

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்