நிலத்தின் நலமறிய ஆவல் -3வது வழிகாட்டுதல் முகாம் விழுப்புரத்தில் செழிப்புற நடைபெற்றது!

  நிலத்தின்  நலமறிய ஆவல் -3வது வழிகாட்டுதல் முகாம் விழுப்புரத்தில் செழிப்புற நடைபெற்றது!



கடந்த 30 .10 .2021 அன்று விழுப்புரத்தில் நகரத்தில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் மூன்றாவது நேரடி வழிகாட்டுதல் முகாம் ஆனந்தா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . காலை 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது .வந்து இருந்த நண்பர்கள் தூத்துகுடி,மதுரை,திருச்சி,திருப்பூர்,பெரம்பலூர்,குளித்தலை,சென்னை,கடலூர்,கள்ளகுறிச்சி பகுதிகளில் இருந்து வந்து இருந்தனர்,விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் நிறைய நபர்கள் வந்து இருந்தனர். நீதிதுறை பத்திரிக்கை துறை,காவல் துறையில் இருந்தும் நிறைய நண்பர்கள் வந்து இருந்தார்கள்.

காலையில் வருகின்றவர்களுக்கு பதிவு செய்தல் முடிந்த பிறகு அவர்களின் பிரச்சினைகள் அரசினுடைய கோரிக்கையா?அல்வது பிறத்தியாருடன் தாவாவா என்று வகை பிரித்து அதற்கேற்ற விண்ணப்ப படிவங்களை கொடுத்து தன்னார்வலர்களான சோளிங்கர் மோகன்,ஓமலூர் தமிழ்,ஊத்தங்கரை அருள்,கிருஷ்ணகிரி முத்து,திருப்பூர் இரவி ஆகிய தன்னாரவலர்கள் இரண்டு மணி நேரம் வரை வந்த நபர்களின் பிரச்சனையை தொகுத்து ஆவணபடுத்தினர். திண்டிவனம் கலைமணி அவர்கள் வருகின்றவர்களை வரவேற்கின்ற வேலைகளை மாலை வரை செய்து கொண்டு இருந்தார்.

உண்மையில் ஒரு நில சிக்கலை தீர்ப்பதற்கு முதலில் சிக்கலை ஆவணபடுத்துதுதான் அதனை தீர்ப்பதற்கு முதல் வழி அதனை வந்து இருந்தவர்களுக்கு செயல்முறை வடிவில் புரிய வைத்தோம். அதன் பிறகு வந்து இருந்த அனைத்து பிரச்சனைகளையும் நிலசிக்கல் வாரியாக பிரித்து எண்ணிடபட்டு அதன் அடிப்படையில் வந்து இருந்த மக்கள் புரிதலுக்காக அடிப்படை பாலபாடம் தெளிவாக எடுக்கப்பட்டது.

அதன் பிறகு மேடைமரியாதை நிகழ்வுகள் நிகழ்ச்சியை ஆவண எழுத்தர் திரு மோகன் அவர்கள் துவக்கி வைத்து விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்று பேசினார் அதன்பிறகு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் தலைவரும் நூலாசிரியரும் சமூக சிந்தனையாளருமான திரு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் சிறப்பு முன்னுரை அளித்து விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த வழக்கறிஞர் திண்டிவனம் திரு.தமிழரசன் அவர்களுக்கும் இன்வெஸ்டிகேட்டர் திரு. கதிரேசன் ஈரோடு அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசாக நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை பெயர் பொறித்த கேடயத்தினை வழக்கறிஞர் திண்டிவனம் தமிழரசன் அவர்கள் நினைவு பரிசினை வழங்கினார் இன்வெஸ்டிகேட்டர் திரு. ஈரோடு கதிரேசன் அவர்களுக்கு வழங்கினார் அதேபோல் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் செயலாளர் திரு. பாபநாசம் ஜெயக்குமார் அவர்கள் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் பெயர் பொறித்த கேடயத்தை விழுப்புரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திரு.இராவணன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு வழங்கினார் .

அதன்பிறகு விழுப்புரத்தில் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த தன்னார்வலர் விழுப்புரம் ஜெயமூர்த்தி அவர்களுக்கு மற்றும் ஆவண எழுத்தர் திரு தமிழ்ச்செல்வன் ஈரோடு ஆகியோருக்கும் தலைவர் திரு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டுகளை தெரிவித்தார் .

அதன் தொடர்ச்சியாக வழக்கறிஞர் திண்டிவனம் திரு தமிழரசன் அவர்கள் நிலத்தில் ஏற்படும் வழக்கு சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எவ்வாறு என்பதை தெளிவாக குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார் அதன் தொடர்ச்சியாக இன்வெஸ்டிகேட்டர் ஈரோடு திரு . கதிரேசன் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது சம்பந்தமான வழிகாட்டுதலையும் காவல்துறை அதிகாரிகளை நாம் அணுகும் முறையையும் சிறப்பாக எடுத்து வைத்து பேசினார் அதன் தொடர்ச்சியாக நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையின் செயலாளர் பாபநாசம் திரு ஜெயக்குமார் அவர்கள் மூன்று கருத்தரங்குகளையும் வரிசைப்படுத்தி அதில் விழுப்புரம் கருத்தரங்கம் மற்றவற்றில் இருந்து எவ்வாறு வேறு படுத்தப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதையும் எழுத்தாளர் தலைவர் சமூக சிந்தனையாளர் திரு சாமு பரஞ்சோதி பாண்டியனின் உழைப்பு தேடல் அவரது எதிர்கால சிந்தனைகளை பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டும் தனித்தனி ஆலோசனைகள் வழங்குவது குறித்தும் சிறப்பாக பேசினார்.

இறுதியாக எழுத்தாளரும் தலைவருமான திரு சாமு பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் நிலத்தின் சிக்கல்களை எடுத்துரைத்து வில்லங்கம் இல்லாத சொத்துக்கள் வாங்குவது எப்படி என்பதை குறிப்பிட்டு மோசடி பத்திரங்களை மாவட்ட பதிவாளரிடம் எப்படி கையாள்வது என்பதையும் சிறப்பாக விளக்கி கூறி பேசினார்.

அதன் பிறகு மதிய உணவு வேளை முன்னா பிரியாணி கடையின் முட்டை பிரியாணி உணவும், சைவ உணவுபிரியர்களுக்கு அய்யர் மெஸ் பட்டை சாதமும் வழங்கபட்டது. அதன்பிறகு நேரடி கலந்துரையாடல் வழிகாட்டுதல் ஈரோடு கதிரேசன் பாபநாசம் ஜெயகுமார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் தனி தனி நாற்காலியிட்டு தன்னார்வலர்கள் உறுதுணையுடன் வழிகாட்டுதல் எழுத்து பூர்வமாக ஆவணபடுத்தி வழங்கபட்டது. மேற்படி தனிதனி வழிகாட்டுதல் முடிய இரவு 9 மணி ஆகிவிட்டது.

நிகழ்ச்சியில் உறுதுணையாக இருந்த தன்னார்வலர் அனைவருக்கும் மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டது. அதன்பிறகு இரவில் இரண்டாவது நாள் ஆவணவேலைகளுக்கான முகாம் பாண்டிசேரி க்கு தன்னார்வலர்கள் அனைவரும் கிளம்பினோம். மறுநாள் ஞாயிற்று கிழமை முகாமில் கலந்து கொண்ட பாண்டிசேரி கோவிந்த ராஜி,கடலூர் குப்புசாமி ஆகியோர் நேரடியாக வந்து முழுமையான ஆலோசனை எழுத்து மூலமாக பெற்றனர். மீதி 27 நபர்களின் ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் எழுத்து மூலமாக தயாரிக்கபட்டு தபால் அனுப்பபட்டது.

மேற்படி நிகழ்வுக்காக மொத்த செலவுக்காக ரூ.19,132 ஆகி இருக்கிறது!அதில் அறக்கட்டனை உறுப்பினர் கட்டணமாகவும் நுழைவுகட்டணமாகுவும் நண்பர்கள் ஆதரவாளர்கள் நன்கொடையாகவும் வந்த தொகை ரூ 9996 ஆகும் மீத தொகை பிராப்தம் குழுமத்தின் இருப்பில் இருந்து நன்கொடையாக செலவிடபட்டு இருக்கிறது

மேற்படி நிலம் உங்கள் எதிர்காலம் அறகட்டளையின் நிலத்தின் நலம் அறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் சிறப்பாக நடைபெற்றதற்கு உள்ளும் புறமும் உழைப்பை கொடுத்து கொண்டே இருந்த அறக்கட்டளை துணைதலைவர் மேலூர் இர.முரளி,செயலர் பாபநாசம் ஜெயகுமார் மற்றும அறகட்டளை உறுப்பினர்கள் முத்து நயினார்,முத்துகதிர்வேல்,பிரகாஷ்,இரங்கநாதன்,மற்றும் பரஞ்சோதி பாண்டியனின் தொழில் முனைவு குடும்பத்தினர்,சிட்டாய் பறக்கும் தன்னாரவல உறவுகள் சமூக ஊடக உறவுகள் என அனைவரின் உறுதுணையுடன் 3வது வழிகாட்டுதல் முகாம் சிறப்பாக நடைபெற்றது

அடுத்து வழிகாட்டுதல்முகாம் நவம்பர் மாதம் சேலம் பெருநகரில் திட்டமிடபட்டு இருக்கிறது.அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்பதை மகிழச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு

நிலம் உங்கள் எதிர்காலம். மக்கள் நல அறகட்டளை நிர்வாகம்

9962265834/9841665836

#paranjothipandian #author #trainer #writer #consulting #trust #social_service #nilam_ungal_ethirkalam #investigator #police #document #problem #issue #solve #program #asset

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்